03-15-2004, 10:42 AM
அதிபர் சந்திரிகா-கருணா தொடர்பு அம்பலம்!
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலக்கப்பட்ட அதன் கிழக்குப் பகுதி தளபதி கருணா, இலங்கை அதிபர் சந்திரிகா குமார துங்காவுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே இயக்கத்தைவிட்டு பிரிந்து தனித்துச் செயல்பட கருணா முடிவெடுத்ததாகவும் இலங்கைச் செய்திகள் கூறுகின்றன!
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இருந்து வெளிவரும் சண்டே லீடர் எனும் ஆங்கில நாளிதழ், பிப்ரவரி 19-ந் தேதியில் இருந்தே அதிபர் சந்திரிகாவிற்கும், தளபதி கருணாவிற்கும் இடையே கருத்து பரிமாற்றம் நடந்து வந்தது எனவும், சந்திரிகாவின் தூதராக அவருடைய கூட்டணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரான ரத்ன காமகே, கருணாவை அடிக்கடி சந்தித்து பேசி வந்ததாகவும் கூறியுள்ளது.
ரனில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பாதுகாப்புத் துறை அமைச்சரை நீக்கிவிட்டு அந்த பொறுப்பை, நேரிடையாக கடந்த நவம்பரில் சந்திரிகா ஏற்றுக் கொண்டதற்குப் பிறகு அவருக்கும், கருணாவிற்கும் இடையே தொடர்புகள் உருவாகி உள்ளது எனவும், கருணாவுடன் ஏற்பட்டுள்ள தொடர்பையே பெயரைக் குறிப்பிடாமல் புலிகள் இயக்கத்துடன் தாங்கள் தொடர்பு கொண்டு அவர்களது நிலையை அறிந்து வருவதாக ஒரு பேட்டியில் சந்திரிகா கூறினார் என்பதை சண்டே லீடர் சுட்டிக்காட்டியுள்ளது.
சந்திரிகாவுடன் ஏற்பட்ட இந்தத் தொடர்பிற்கு பிறகு, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து தனியாக இயங்க முடிவெடுத்த கருணா, இலங்கை அரசுடன் தனியாக ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை செய்து கொள்ள முன் வந்தார் எனவும், ஆனால் அதனை அதிபர் குமாரதுங்காவும், அவருடைய ஆலோசகர் லக்ஷ்மண் கதிர்காமரும், "இப்போதைக்கு வேண்டாம்" என்று நிராகரித்துவிட்டதாகவும் அச்செய்தி கூறுகிறது.
Thanx: Webulagam

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>