06-17-2003, 01:27 PM
தனித்து பெண்களின் பிரச்சனைகளை கதைப்பதால் தான் ஆண்களின் துன்ப துயரங்கள் மனத்தேவைகள் அறியப்படாமல் போகின்றனவோ என்னவோ. ஆகையால் இரு பாலாரும் பேசிக்கொள்ள இந்த களத்தை பயன்படுத்துகின்ற போது ஒப்பிட்டு ஆண் பெண்களுடைய மனவிருப்புக்களை அறியக் கூடியதாக இருக்கும்.
புலம் பெயர் தேசத்தில் அதிகம் ஆண்களே உழைப்பவர்களாக இருக்கின்றார்கள். இதனால் உடல் கழைப்பு மன உழைச்சல்களுக்கு அதிகம் ஆளாகின்ற சந்தற்பம் அதிகமாகிறது. இதை புரியாத மனைவியர் பலர் இன்றும் இருந்த கொண்டு தான் இருக்கிறார்கள். அது அவர்களின் தவறன்று. தனது வேலை இடத்து சிக்கல்களை புரியவைக்காத கணவனில் தான் பிழை அதிகம். மனைவியும் அவரின் வேலை கடினத்தை உணராது வேலையால் வந்ததும் வராததுமாக கோபித்து கொள்ளல். இது நான் அனேக வீடுகளில் கண்டிருக்கிறேன். ஆசுவாசமாக உடை மாற்ற கூட விடாது வேலை சொல்லுதல் சினத்தல் போன்றன. மனைவியிலும் பிழை சொல்லுவதற்கில்லை. காரணம் நாள் முழுவதும் வீட்டில் தனித்த நிலை வந்ததும் வராததுமாக கோபித்து கொள்ளல் அதை ஒரு ஊடலாக கூட கொள்ளலாம். ஆனால் அதை ஊடலாக ஏற்கும் மன பக்குவம் வேலையால் வந்த கணவனிடம் இராது. இங்கு பிரச்சனை எழுகிறது.
இன்னும் மலரும்.....
நளாயினி தாமரைச்செல்வன். :wink: :wink:

[b]Nalayiny Thamaraichselvan