Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கப்பல் தகர்ப்பு.......
#8
<!--QuoteBegin-Karavai Paranee+-->QUOTE(Karavai Paranee)<!--QuoteEBegin-->சிறிலங்கா கடற்படையின் வாதத்தை அப்படியே ஏற்றுக ;கொள்வதாயினும் அங்கு இன்னொரு முக்கிய விடயத்தை கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. தாக்குதலைத் தொடங்கு முன்னரே சிறிலங்கா கடற் படையினர் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கு தகவல் கொடுக்க வில்லை என்பது இங்கு முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய விடயமாகின்றது. இவை எல்லாவற்றிலிருந்தும் துல்லியமாகப்புலனாவது என்னவெனில், முன்பு மார்ச் 2003 இல் நடந்தது போலவே சிறிலங்கா கடற்படையினர் சம்பவம் நடந்த பிரதே சத்தை தாக்குதலை நியாயப்படுத்து வதற்கு வாய்ப்பாக மாற்றியிருக்கிறார்கள் என்பதே.
இந்தப் பொய்மையை நாம் அறிந்த காரணத்தால் உண்மையாகச் சம்பவம் நடந்த இடத்தை துல்லியமாக விளக்கும் விதத்திலான பாகை எண்ணிக்கையில் (1147N.8431நு) காட்டியிருந்தோம். இதன்படி [b]சிறிலங்கா கடற்படை போர்நிறுத்த கண்காணிப்புக் குழு அங்கத்தவர்களை சம்பவம் நடந்த இடத்திற்குக் கூட்டிச் செல்வதா கக்கூறி தங்கள் கலத்தில் ஏற்றிச் சென்றிருக்கின்றனர். பாதிவழியில் கடல்கொந்தளிப்பு எனக் காரணம் கூறி இந்த இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லாமல் திரும்பியுள்ளனர். ஓர் எண்ணெய்க் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட இடத்தில் சாதாரணமாக எதிர்பார்க்கக்கூடிய கடலில் மிதக்கும் எண்ணெய்க் கசிவுதங்களைக் காட்டிக்கொடுத்துவிடுமென்ற அச்சத்தினால் போலும் அந்த இ;டத்திற்குக் கூட்டிச் செல்லாமல் தாமதத்தை ஏற் படுத்தினால் எண்ணெய்க்கசிவு அகன்றுவிடும் என்ற உள்நோக்கத்துடன் பயணத்தை இடைவழியில் நிறுத்தித் திரும்பியிருக்கிறார்கள். உண்மையில் சிறிலங்காக் கடற்படையினர் தடையத்தை மறைக்கும் ஓர் உத்தியைக் கையாண்டு யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரை ஏமாற்றியிருக் கிறார்கள்.
சிறிலங்காக் கடற்படையினர் சர்வதேசக் கடற்பரப்பில் சர்வதேசக் கடற் சட்டங்களை மீறும் விதத்தில் எமது கப்பலைத் தாக்கியழித்தது, சம்பவம் 110 கடல்மைல் து}ரத்தில் நடந்தது என ஒரு கதையைப் புனைந்தது, எங்கள் போராளிகளை சட்டவிரோதமாகக் கடத்திச் சென்றுவிட்டு அதனை மறுப்பது, தடையங்கள் அழிந்து போவதற்காக தாமதிக்கும் உத்தியைக் கடைப்பிடித்தது போன்ற தான் தோன்றித்தனமான செயல்கள் குறித்து எங்கள் பலமான எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்புகிறோம். எங்கள் கலத்தைச் சட்டவிரோதமாகத் தாக்கியழித் தமைக்கும் எங்கள் போராளிகளை கடத்திச் சென்றமைக்கும் சிறிலங்காக் கடற்படையே முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும் எனக்கூறும் அதே வேளை, மேலே வவரிக்கப்பட்டிருக்கும் பகைப்புலனின் அடிப்படையில் அர்த்தமுள்ள விசாரணைகளை உடனடியாகத் தொடங்கி எங்கள் போராளி களின் பாதுகாப்பை உறுதிசெய்து அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவலை மிகவிரைவாக எங்களுக்குத் தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.  
சிறிலங்கா கடற்படையினர் சமாதான முயற்சிகளை குலைப்பதற்கான ஒரு சதித்திட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்களென நாம் அச்சங்கொள்வதுடன், அவர்களது நடவடிக்கை காரணமாக எழக்கூடிய பாரது}ரமான விளைவு களுக்கு சிறிலங்கா கடற்படையே பொறுப்பேற்கவேண்டுமென உங்களுக்குக் கூறக்கடமைப்பட்டுள்ளோம். இந்தச் சம்பவத்தின் காத்திரத்தையும் எங்கள் போராளிகளின் உயிர் பாதுகாப்பு தொடர்பான எங்கள் கரிசனையையும் கருத்திற்கொண்டு இதுதொடர்பாக விரைவான பதிலொன்றைத் தரும்படி தயவாகக் கேட்டுக் கொள்கிறோம். -இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  uthayan.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

கண்காணிப்புக் குழு அறிக்கையில் புலிகளைகுழப்ப நிலைக்கு உள்ளாக்கும் அம்சங்கள்

கப்பலில் வந்தோரை கடற்படை கைது செய்ததற்கான சான்று எதுவும் இல்லை என்றும் தெரிவிப்பு

முல்லைத்தீவுக்கு அப்பால் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளின் கப்பல் கடந்த 14 ஆம் திகதி சனிக்கிழமை மூýழ்கடிýக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரு வாரங்களாக விசாரணை செய்த போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கையளித்திருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கும் சில அம்சங்கள் விடுதலைப் புலிகளைக் குழப்பத்திற்குள்ளாக்கக்கூýடிýய சாத்தியங்களைக் கொண்டிýருப்பதாகக் கருதப்படுகிறது

மூýழ்கடிýக்கப்பட்ட கப்பலில் இருந்த தங்கள் 12 போராளிகளை கடற்படையினர் கைது செய்ததாக விடுதலைப் புலிகள் முறையிட்டிýருந்த போதிலும், அவ்வாறு அவர்கள் பிடிýக்கப்பட்டதற்கான சான்று எதுவும் இல்லை என்று கண்காணிப்புக் குழு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது

விடுதலைப் புலிகளின் கப்பலைச் சோதனை செய்வதற்கான உரிமை இலங்கைக் கடற்படையினருக்கு இருக்கிறது என்றும் புலிகள் தங்கள் கப்பலில் உகந்த கொடிý எதையும் பறக்கவிட்டிýருக்கவில்லை. அத்துடன், கண்னுக்குத் தென்படக்கூýடிýய உத்தியோகபூர்வ அடையாளம் எதுவும் கப்பலில் இருக்கவில்லை. இதன் மூýலம் கடல் சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சாசனத்தைப் புலிகள் மீறி விட்டதாகவும் கண்காணிப்புக் குழு தெரிவித்திருக்கிறது

ஜூன் 14 இல் முல்லைத்தீவுக்கு அப்பால் கடலில் இடம்பெற்ற சம்பவம் குறித்து பக்கச் சார்பற்ற அவதானிப்பு எதுவும் இருக்கவில்லை. சம்பவ இடத்தில் நடந்தவற்றுக்கு திட்டவட்டமான சாட்சி எதுவும் கிடையாது என்றும் குறிப்பிட்டிýருக்கும் கண்காணிப்புக் குழு, இச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இலங்கைக் கடற்படைக் கப்பல் (கண்காணிப்புக் குழுவினர் பரிசீலிப்பதற்கு முன்னர்) இலத்திரனியல் தகவல்களை அழித்து விட்டமை துரதிர்ர்;டவசமானது என்று கூýறியிருக்கிறது

கடற்பரப்பில் ஏற்படும் மோதல்களைத் தவிர்ப்பது தொடர்பாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஏற்கனவே முன்வைத்த சிபார்சுகளுக்கமைய இவ்விடயத்தில் அரசும், விடுதலைப் புலிகளும் உடனடிýயாக உடன்பாடொன்றை எட்டும் அதேநேரம் கடல் மோதலுக்கான சூýழ்நிலையொன்று உருவாகும் பட்சத்தில் அதுபற்றி உடனடிýயாகத் தங்களுக்கு அறிவிக்க வேண்டுமெனவும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது

தங்கள் விசாரணை முடிýவுகள் தொடர்பான அறிக்கையை கண்காணிப்புக் குழு அரசு, மற்றும் புலிகளிடம் கையளித்துள்ள, அதேநேரம் இது தொடர்பாக கண்காணிப்புக் குழு ஊடகங்களுக்கான அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது

கடந்த 14 ஆம் திகதி அதிகாலை முல்லைத்தீவு கரைக்கு அப்பால், புலிகளின் எண்ணெய்க் கப்பலென சந்தேகிக்கப்படும் எம்.ரி.Nர்hசினை கடற்படையினர் வழிமறித்துள்ளனர்

12 புலிகளுடன் சென்ற இந்தக் கப்பலில் ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்டது

இதையடுத்து, அந்தக் கப்பலுடன் தொடர்பு கொண்ட கடற்படையினருக்கு, அந்தக் கப்பலிலிருந்து வானொலிக் கருவி மூýலம் வழங்கப்பட்ட தகவல்கள் பொய்யானவை என்று பின்னர் தெரிய வந்தது. இதையடுத்து, கப்பலை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டது

சந்தேகத்திற்கிடமான கப்பல்கள் மீது தாக்குதலை நடத்தும் உரிமை இருந்த நிலையிலும், கடற்படையினரின் உத்தரவை அந்தக் கப்பல் மீறவே, கடற்படைக் கலமான p-330இல் இருந்து அந்தக் கப்பலின் முன் பக்கத்தை நோக்கி மூýன்று எச்சரிக்கை வேட்டுகள் தீர்க்கப்பட்டன

இந்த நிலையில் சுமார் 40 நிமிடம் கழித்து அதிகாலை 5.30 மணியளவில் மேற்படிý எண்ணெய் தாங்கிக் கப்பலில் குண்டு வெடிýப்பொன்று இடம்பெற்றது. இதைத் தொடர்ந்து, பல இரண்டாந்தர வெடிýப்புகளும் ஏற்பட்டன. இதன் காரணமாக அந்தக் கப்பல் மூýழ்கியது

அந்தக் கப்பல் எரிந்து கொண்டிýருந்த போது, அதிலிருந்த மாலுமிகளுடன் p-330 கடற்படைக் கலம் சனல்-16 ஊடாக தொடர்பு கொண்டு, அதிலிருந்தவர்களைக் காப்பாற்றும் நோக்கில் அவர்களை வெளியேறுமாறு கோரியது. எனினும், அந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்

இதேநேரம், புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், 15 ஆம் திகதியிட்டு கண்காணிப்புக் குழுவின் தலைவருக்கு எழுதிய கடிýதத்தில், தங்களது கலம் சர்வதேசக் கடற்பரப்பில் சுமார் 265 கடல் மைல் தூரத்தில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிýருந்தார்

எனினும், முல்லைத்தீவுக்கு வட கிழக்கே சுமார் 175 கடல் மைல் தூரத்திலேயே, இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்தினுள் வைத்தே இந்தக் கப்பல் வழிமறிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்

சர்வதேசக் கடற்பரப்பிலேயே இது நடைபெற்றதாக புலிகள் கூýறினாலும், சர்வதேச கடல் சட்டம் தொடர்பான ஐ.நா.சாசனப்படிý சரத்து 95, 96 க்கு இணங்க முற்று முழுதான விதிவிலக்குக்கு அருகதையுடைய கப்பலொன்றைத் தவிர ஆழ்கடலில் வெளிநாட்டு கப்பலொன்றை எதிர்கொள்ளும் போர்க் கப்பலொன்று, மற்றைய கப்பல் எந்த நாட்டுக்குச் சொந்தமானதென்று சந்தேகிப்பதற்கு நியாயமான காரணங்கள் இருந்தாலன்றி அதில் ஏறுவது நியாயப்படுத்தப்பட முடிýயாது

இதேநேரம் புலிகளின் தகவலின்படிý, இந்தக் கப்பலில் புலிகளின் கொடிýயும் இந்தக் கப்பல் பதிவு செய்யப்பட்ட நாட்டிýனது கொடிýயும் என இரு கொடிýகள் பறக்கவிடப்பட்டிýருந்தன

எனினும் இந்தக் கப்பல் எந்த நாட்டிýல் பதிவுசெய்யப்பட்டது, அதன் அடையாளம் என்ன என்ற தகவல் தொடர்பாக புலிகள் தங்களது வானொலிக் கருவி மூýலம் தவறான தகவல்களையே தந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்

இதைவிட இந்தக் கப்பல் எந்தத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது, அது எந்தத் துறைமுகம் நோக்கிச் சென்றது என்பன போன்ற தகவலுடன், புலிகள் கூýறுவதுபோல் இந்தக் கப்பல் வணிகக் கப்பல்தான் என்பதை நிரூýபிக்கக்கூýடிýய தகவல்களை வழங்கவும் புலிகள் தவறிவிட்டனர்

இந்த நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு முடிýவுகளையும், சிபார்சுகளையும் இந்த அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது

முடிýவுகள்

1.சம்பவம் நடைபெற்ற நேரத்தில் இது பற்றி இரு தரப்பும் கண்காணிப்புக் குழுவுக்கு அறிவிக்கவில்லை. இதனால் இந்தச் சம்பவத்தை கண்காணிக்கக் கூýடிýய நிலையிலோ அல்லது இதனைத் தடுத்து நிறுத்தக் கூýடிýய நிலையிலோ இருக்கவில்லை

2.எண்ணெய்க் கப்பலிலிருந்த மாலுமிகளின் கதி குறித்து கண்காணிப்புக் குழுவினருக்கு எதுவும் தெரியாது. அதே நேரம் இந்த மாலுமிகள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கான ஆதாரத்தையும் கண்காணிப்புக்குழு காணவில்லை

3.1982 ஆம் ஆண்டு டிýசம்பர் மாதம் 10 ஆம் திகதிக்கான கடல் சட்டம் தொடர்பான ஐ.நா. சாசனப்படிý புலிகளின் எண்ணெய்க் கப்பலை சோதனையிடும் உரிமை இலங்கை கடற்படையினருக்கு இருக்கிறது. இதனால், புலிகளின் எண்ணெய்க் கப்பலை சோதனையிடுவதன் மூýலம் கடற்படையினர் போர் நிறுத்த உடன்பாட்டை மீறியதாக கண்காணிப்புக்குழு கருதவில்லை

4.தனது கப்பலில் உரிய கொடிýயை பறக்க விடாத அதே நேரம் கப்பலை நன்கு தெரியக்கூýடிýய விதத்தில் அடையாளப்படுத்தாததாலும், கடல் சட்டம் தொடர்பான, 1982 ஆம் ஆண்டிýன் ஐ.நா.சாசனத்தை விடுதலைப்புலிகள் மீறியுள்ளனர்

சிபார்சுகள்

1.மேற்படிý சம்பவம் நடைபெற்ற போது கடற்படைக் கப்பல் இது தொடர்பாக பதிவு செய்த இலத்திரனியல் தரவுப் பதிவுகளை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு பரிசோதிக்க முன்னர் அழித்துவிடக் கூýடாது. அந்தத் தரவுகளை பாதுகாக்க வேண்டும்

சகலவிதமான தரவுகளும் பாதுகாக்கப்பட்டு அது கண்காணிப்புக் குழுவினருக்கு தேவையான போது வழங்கப்படவேண்டும்

2.ஏற்கனவே கண்காணிப்புக் குழுவினர் முன்வைத்த யோசனைக்கு அமைய, கடல் மோதல்களை தவிர்க்கும் வகையில் அரசும் புலிகளும் மிக விரைவில் உடன்பாடொன்றை எட்டவேண்டும்

3.மோதல்களுக்கான சாத்தியம் எங்காவது உருவானால் அது பற்றி உடனடிýயாக கடற்படையினரும், புலிகளும் கண்காணிப்புக், குழுவினருக்கு அறிவிக்க வேண்டும்

4.கடல் சட்டம் தொடர்பான 1982 ஆம் ஆண்டு டிýசம்பம் மாதம் 10 ஆம் திகதிய ஐ.நா. சாசனத்தை கடைப்பிடிýக்குமாறு புலிகள் தங்கள் வர்த்தகக் கப்பல்களின் மாலுமிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்..

நன்றி..தினக்குரல்.
Reply


Messages In This Thread
[No subject] - by Guest - 06-14-2003, 04:27 PM
[No subject] - by sethu - 06-14-2003, 07:23 PM
[No subject] - by Kanani - 06-14-2003, 07:45 PM
[No subject] - by Kanani - 06-14-2003, 08:07 PM
[No subject] - by Paranee - 06-16-2003, 05:31 AM
[No subject] - by GMathivathanan - 06-29-2003, 11:37 PM
[No subject] - by GMathivathanan - 06-29-2003, 11:44 PM
[No subject] - by sethu - 06-30-2003, 01:03 PM
[No subject] - by GMathivathanan - 06-30-2003, 01:43 PM
[No subject] - by sethu - 06-30-2003, 02:03 PM
[No subject] - by GMathivathanan - 06-30-2003, 02:25 PM
[No subject] - by sethu - 06-30-2003, 05:28 PM
[No subject] - by P.S.Seelan - 07-01-2003, 12:48 PM
[No subject] - by GMathivathanan - 07-01-2003, 12:54 PM
[No subject] - by P.S.Seelan - 07-01-2003, 12:59 PM
[No subject] - by sethu - 07-01-2003, 01:02 PM
[No subject] - by GMathivathanan - 07-01-2003, 01:45 PM
[No subject] - by P.S.Seelan - 07-02-2003, 12:39 PM
[No subject] - by GMathivathanan - 07-02-2003, 02:36 PM
[No subject] - by S.Malaravan - 07-02-2003, 06:23 PM
[No subject] - by GMathivathanan - 07-02-2003, 09:14 PM
[No subject] - by P.S.Seelan - 07-03-2003, 01:00 PM
[No subject] - by sethu - 07-03-2003, 06:18 PM
[No subject] - by GMathivathanan - 07-04-2003, 12:54 AM
[No subject] - by sethu - 07-04-2003, 08:37 AM
[No subject] - by S.Malaravan - 07-04-2003, 09:23 PM
[No subject] - by GMathivathanan - 07-04-2003, 09:31 PM
[No subject] - by GMathivathanan - 07-04-2003, 09:33 PM
[No subject] - by sethu - 07-05-2003, 08:21 AM
[No subject] - by GMathivathanan - 07-05-2003, 09:55 AM
[No subject] - by sethu - 07-05-2003, 11:49 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)