03-14-2004, 02:11 PM
<img src='http://www.thinakural.com/2004/March/14%20Sunday/front1.gif' border='0' alt='user posted image'>
விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு- அம்பாறை சிறப்புத் தளபதியாக இருந்த கருணா, இயக்கத்தின் தலைமைத்துவத்துடன் முரண்பட்டதற்கான தனது தரப்புக் காரணங்கள் குறித்து வெளிநாட்டு ஊடகங்களுக்கு தொடர்ச்சியான பல பேட்டிகளை வழங்கிவரும் நிலையில், விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான கரிகாலன், 'கருணாவின் சந்தேகத்துக்கிடமான நடத்தைகள் குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதையடுத்தும் நிதி முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தும் வன்னிக்கு வருமாறு அழைக்கப்பட்டதனாலேயே நெருக்கடி யை அவர் உருவாக்கியதாக" முதற்தடவையாகத் தெரிவித்திருக்கிறார்.
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அஞ்சிய கருணா, விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தைமீறிச் செயற்பட்டதாகவும் ஒருதலைப்பட்சமான நடவடி க்கையை எடுத்து இயக்கத்திற்குள் நெருக்கடியைத் தோற்றுவித்ததாகவும் கரிகாலன், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூ ட்டுத்தாபனத்துக்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.
'வன்னித் தலைமைத்துவம் மட்டக்களப்பு- அம்பாறைப் பிராந்தியத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக மிக அண்மைக் காலமாகவே கருணா முறைப்பாடு தெரிவிக்க ஆரம்பித்திருந்தார். இயக்கத்துக்கு பாதகமான, நடவடிக்கைகளில் கருணா ஈடுபட்டு வருகின்றார் என்பதை நாம் விளங்கிக் கொண்டபோது, இயக்கத்தைப் பிளவுபடுத்துவதற்கான தீர்மானத்தை அவர் மேற்கொண்டார் போலத் தோன்றுகிறது.
'எங்களில் சிலரைப் பயிற்சிக்கு அனுப்புவதென்ற போர்வையின் கீழ், அனுப்பிவிட்டு, தனது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தக் கூடிய மாற்றங்களைக் கருணா செய்து கொண்டார். நிதித்துறையை தனது கட்டுப்பாட்டி ன் கீழ் எடுத்துக் கொண்ட அவர் முக்கியமான இரானுவப் பதவிகளில் தனக்கு விசுவாசமானவர்களை நியமித்தார்.
இந்தக் காலகட்டத்தில் இயக்கத்தின் பெருமளவு நிதியை கருணா கையாடியிருப்பதை போராளியொருவர் கண்டு பிடித்து விட்டார். அப்போராளி மீது கருணா நடவடிக்கை எடுக்க முயற்சித்தபோதிலும், அவர் ஒருவாறு வன்னிக்குத் தப்பி வந்து கருணாவின் நிதி முறைகேடுகள் குறித்து தலைமைத்துவத்துக்கு அறிவித்தார். கருணாவின் இந்த முறைகேடுகளைத் தெரிந்துகொண்ட அவரது சாரதியும் ஒரு கிழமை கழித்து மரணமடைந்தார். அவரது மரணத்துக்கு காய்ச்சலே காரணமென்று கூ றப்பட்டபோதிலும், அவருக்கு நஞ்சு கொடுக்கப்பட்டது என்ற விடயத்தை பின்னர் அறிந்து கொண்டதும் மட்டக்களப்பு- அம்பாறைத் தளபதிகள் அதிர்ச்சியடைந்தனர்.
தனது தகாத நடத்தைகள் குறித்து மக்களுக்குத் தெரிய வந்ததும் கருணா மேலும் அசௌகரியத்துக்குள்ளாக்கப்பட்டார்.
இந்த மீறல்கள் குறித்து வன்னியில் உள்ள தலைமைத்துவத்துக்கு தெரியவந்ததும், தலைவர் பிரபாகரன் கருணாவை வன்னிக்கு வருமாறு கேட்டார். தான் கண்டிக்கப்பட்டு, ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படலாம் என்று அஞ்சிய கருணா வன்னிக்குப் போக மறுத்தார். பதிலாக, தன்னைச் சந்திக்க வன்னியில் இருந்து ஒருவரைத் தூது அனுப்புமாறு கருணா கேட்டுக் கொண்டார்.
தனது மனைவியையும், பிள்ளைகளையும் அண்மையில் மலேசியாவுக்கு அனுப்பி வைத்த கருணா, தனது குடும்பத்தினர் எங்கிருக்கிறார்கள் என்ற விடயம் தலைவருக்குத் தெரியும் என்று தனது தளபதிகளுக்குக் கூறினார். தலைவருக்குத் தெரியாமல் தான் எதையும் செய்யப்போவதில்லை என்றும் கூறினார். கருணாவின் இத்திட்டங்களுக்கான காரணங்களை இப்போது எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த கருணா, தான் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை தலைவரிடம் நேரடியாகவே ஏன் கிளப்பவில்லை? என்பதைப் புரிந்துகொள்ள மட்டக்களப்பு- அம்பாறை மக்கள் இப்போது சிரமப்படுகிறார்கள்.
வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட விஜயங்களின்போது, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை சீர்குலைப்பதில் அக்கறைகொண்ட வெளிநாட்டுச் சக்திகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடி யதாக இருந்தது. இச்சக்திகள் கருணாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக, இயக்கத்தில் அவருக்கிருந்த பிரத்தியேகமான அந்தஸ்தைப் பயன்படுத்தி அவை அவரின் கீழ் இருந்த கட்டமைப்புக்குள் ஊடுருவ முடிந்தது. கருணாவின் சுயநல நோக்கங்களை நன்கு பயன்படுத்தி அவரை விலைக்கு வாங்க இந்த வெளிநாட்டுச் சக்திகளினால் முடிந்திருக்கக் கூடும்.
போராளிகளையும், இரானுவ உபகரணங்களையும் பேனுவதற்கு கணிசமான வளங்கள் தேவை. தமிழரின் போராட்டத்துக்கு விரோதமான சக்தியொன்று கருணாவுக்கு இந்த ஆதரவை வழங்குவதாக உறுதியளித்திருக்க வேண்டும் என்று கருத வேண்டி யிருக்கிறது.
இலங்கை இரானுவத்திற்குள் இருக்கும் குறிப்பிட்ட சில பிரிவுகளும் கருணாவுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதாகத் தோன்றுகிறது. இலங்கை இரானுவத்தின் ஆதரவு இல்லாமல் மட்டக்களப்பு-அம்பாறையில் கருணாவுக்கு விசுவாசமான போராளிகள் பெருமளவில் நடமாடக் கூடியதாயிருப்பது சாத்தியமில்லை" என்று கரிகாலன் அப்பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை, சென்னையில் இருந்து வெளிவரும் பிரபல ஆங்கிலத் தினசரியான 'இந்து"வின் கொழும்பு நிருபரான வி.எஸ்.சம்பந்தனுக்கு கருணா நேற்று முன்தினம் வியாழக்கிழமை மட்டக்களப்பின் இரானுவக் கட்டுப்பாடற்ற பகுதிக்குள் வைத்து பிரத்தியேகமான பேட்டி யொன்றை அளித்திருக்கிறார்.
[size=18]தான் இல்லாவிட்டால் விடுதலைப் புலிகளினால் செயற்பட முடியாது. அவ்வாறு செயற்பட முடி ந்தாலும், பலம் வாய்ந்த சக்தியாக விளங்க முடியாது. வேண்டுமானால் உண்மையான ஒரு கெரில்லா இயக்கமாக, விடுதலைப் புலிகளால் செயற்பட முடியுமே தவிர, தொடர்ந்தும் அவர்களினால் மரபுரீதியான சண்டைக்கான இரானுவமாக விளங்க முடியாது என்று கருணா அப்பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
[size=18]விடுதலைப் புலிகளுக்கான 75 சதவீதமான பலத்தையும் படையணியையும் நாம் தான் கொடுத்துதவினோம். நாமே போராளிகளையும் வழங்கி, இரானுவத்துக்கு தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்தினோம். இயக்கத்துக்கு போர்க்கள சண்டைகளைப் பற்றித் தெரியாது. நாம் போரியல் சரித்திரத்தைப் படி த்தேன். ஸ்ராலின் கிராட் சமர், ஹிட்லர் ரோமெல் பற்றியெல்லாம் வாசித்தறிந்தேன். என்று கருணா பேட்டியில் கூறியிருக்கிறார்.
உங்களது நடவடிக்கைகள் தமிழர்களின் பாரம்பரியத் தாயகம் என்பது போன்ற கோட்பாடுகளைப் பாதிக்கும் என்று நினைக்கின்றீர்களா? என்று இந்து செய்தியாளர் சம்பந்தன் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கருணா பின்வருமாறு கூ றினார்.
[size=18]'அவ்வாறு பாதிக்கப்படுமென்றால் கூட நான் கவலைப்படவில்லை ஏனென்றால், வடக்கு வன்னித் தலைவர்கள் தாங்கள்தான் படி த்தவர்கள் என்று கர்வத்தனமாக நினைக்கிறார்கள். தங்களால் தான் எதையும் செய்ய முடியுமென்று நினைக்கிறார்கள். தங்களால் ஏனைய சமூகங்களை ஒடுக்க முடியுமென்று நினைக்கிறார்கள். இது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. எனவே, ஒரு நாடு உருவாகினால் என்ன, ஒரு தீர்வு வந்தாலென்ன அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? அப்போது கூ ட எமது மக்கள் ஒடுக்கப்படுவார்கள்.
ஆரம்பம் முதலிருந்தே யாழ்ப்பாணத்தாருக்கும் மட்டக்களப்பாருக்கும் இடையே பிரச்சினைகள் இருந்து வந்தன. பாகுபாடு இருந்தது. போர் இவையெல்லாவற்றையும் மாற்றும் என்று நாம் நினைத்தோம். இயக்கத்திற்குள் கூட, தங்களுக்கான வேலை செய்யப்படும் வரை எம்மை அவர்கள் கவனித்துக் கொண்டார்கள். ஆனால், காலப்போக்கில் இயக்கத்திற்குள்ளும் பாகுபாடுகள் தலைகாட்டி ன. இந்த நிலைமையை எவ்வாறு எம்மால் தொடர்ந்து ஏற்றுக்கொள்ள முடியும்?
போருக்கு முன்னர் இங்கே தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்களுக்கிடையில் நல்ல உறவு இருந்தது. 1983 இன வன்செயலின் போது கிழக்கு மக்களல்ல, யாழ்ப்பாணத் தமிழர்கள் தான் பாதிக்கப்பட்டனர். திட்டமிட்ட குடி யேற்றம் என்ற ஒரு பிரச்சினையைத் தவிர கிழக்கில் பெரிதாகப் பிரச்சினைகள் இருக்கவில்லை. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேரும் போது நான் பாடசாலையில் படித்துக் கொண்டி ருந்தேன். அப்போது இங்கே இலங்கைப் படைகள் இல்லை. நாங்கள் தாக்குதலை ஆரம்பித்த போது அழிவுகளும் ஆரம்பமாகின.
கேள்வி: விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து விலகுவதாக நீங்கள் மார்ச் 3 இல் நோர்வேக்கு அறிவித்தபோது என்ன நடந்தது?
பதில்: நான் மிகுந்த தாழ்மையுடன் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். 'உங்களை நாம் கடவுளாக நினைக்கின்றோம். எங்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். 30 நிர்வாகத் தலைவர்களை நீங்கள் நியமித்திருக்கிறீர்கள். ஒருவருமே மட்டக்களப்பு, அம்பாறையைச் சேர்ந்தவர்கள் இல்லை. எமக்கு ஆற்றல் இருப்பதால், உங்களது கட்டுப்பாட்டி ன் கீழ் கிழக்கை நான் நிர்வகிப்பேன்" என்று தலைவருக்கு எழுதிய கடிதத்தில் நான் தெரிவித்திருந்தேன்.
அவர் அதற்கு தன்னால் அனுமதிக்க முடி யாது என்று கூறினார். போராளிகளை அனுப்புவதை என்னால் அங்கீகரிக்க முடி யாது என்று நான் கூறினேன். நான் இங்கிருந்தே செயற்படப் போகின்றேன் என்று சொன்னேன். இல்லை நீர் அதைச் செய்ய முடி யாது. இயக்கத்தை நீர் விரும்பினாலோ அல்லது வெளியேறுவதாக இருந்தாலோ வன்னிக்கு முதலில் வரவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இது எங்களுக்குள் நடந்த தொடர்பாடல். இதையடுத்து நோர்வேக்கு அறிவிக்க நான் தீர்மானித்தேன். இன்றிலிருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து நாம் பிரிந்து செல்கிறோம் என்று நோர்வேத் தரப்பினருக்குக் கூறினேன்.
கேள்வி: தமிழ்த் தேசிய வாதத்தில் உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறதா?
பதில்: ஆம். வடக்குத் தமிழ்ஈழ மக்கள் வன்னித் தலைமைத்துவத்தை நிராகரிக்கும்போது, தமிழ்த் தேசியவாதம் பாதுகாக்கப்படும். அங்கேகூ ட [size=18]சுமார் 80 சதவீதமான மக்கள் அதை எதிர்க்கிறார்கள். மக்களின் ஆதரவு அவர்களுக்கு இருக்குமானால், படையணிக்கு அங்கேயே அவர்களால் ஆட்களைச் சேர்க்க முடிந்திருக்குமே.
கேள்வி: விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவில் நீங்கள் ஒரு உறுப்பினர். உங்களை அக்குழுவின் உறுப்பினராக நியமிக்கும்போது நீங்கள் ஆச்சரியப்படவில்லையா? உங்கள் அனுபவங்கள் எவை?.
பதில்: அது எனக்கு ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது. கிழக்கில் இருந்து எவருமே நியமிக்கப்படாவிட்டால் கேள்வியெழுப்பப்பட்டி ருக்கும். அதன் காரணத்தினால்தான் என்னை அக்குழுவில் அங்கத்தவராக்கினர். எவ்வாறெனினும், அப்பயணங்கள் எனக்கு நல்ல அனுபவங்களாயமைந்தன. பல விடயங்களை நான் கற்றுக் கொண்டேன். ஏனைய சமூகங்களை என்னால் பார்க்கக் கூ டியதாக இருந்தது.
எங்களது தலைவர் கூ ட தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டார். அவரது தற்போதைய கோரிக்கைகள் உள்ளக சுயநிர்ணய உரிமையும், சமர்;டி முறையுமே. அதன் காரணத்தினால்தான் நாம் பேச்சுக்களுக்குச் சென்றோம். ஈழத்தைக் கைவிட்டு விட்டதாக எம்மை இப்போது குற்றஞ்சாட்ட முடி யாது. கடந்த வருட மாவீரர் தின உரையில் தலைவரின் பேச்சை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அவர் தமிழ் ஈழத்தைக் கைவிட்டு விட்டார் என்றே நான் நினைக்கிறேன்.
கேள்வி: இந்தியாவுடனான உறவுகளைப் பற்றி உங்கள் அபிப்பிராயங்களைக் கூறுங்கள்?
பதில்: எமது மிகப்பெரிய பின்னடைவு அது. இந்திய இரானுவத்துடன் சண்டை பிடிப்பதுடன் மாத்திரம் நாம் நிறுத்தியிருக்க வேண்டும். பிறகுபோய் தமிழ்நாட்டி ல் ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. எமது புலனாய்வுப் பிரிவின் மகா தவறு இது என்று கருதுகின்றேன். அதன் காரணத்தினால்தான் எமது விடுதலைப் போராட்டம் படுமோசமாக சீர்கேடடைந்தது. நான் இந்தியாவில் பயிற்சி பெற்றவன். அந்தக் காலத்தில் எங்களை அவர்கள் விடுதலைப் போராளிகளாகக் கருதினர்.
இந்திய இரானுவத்தை நாம் பதிலடி யாகத்தான் தாக்கினோம். அந்த [size=18]இரானுவம் திரும்பிச் சென்று விட்டது. அதற்குப் பிறகு ஆத்திரமடைய என்ன தேவை? அந்தக் கொலை காரணமாகத்தான் எமக்கு கெட்டபெயர்.
தமிழ் ஈழத்தை அமைப்பதானால் நாம், இந்தியாவை பகைப்பதன் மூலம் அதைச் செய்ய முடி யாது. அது விடயத்தில் மறுகேள்விக்கு இடமில்லை. இந்தியாவுடன் நாம் உறவை வளர்த்திருக்க வேண்டும். எப்போதாவது ஒரு தடவை மேலோட்டமாகக் கூறுவார்களே தவிர, [size=18]இந்தியாவுடன் உறவை, வளர்க்க அவர்கள் முயற்சிக்கவேயில்லை.
இனிமேலும் நாம் தனிநாடு காண விரும்புவதானால், மேலும் அழிவுகளையே சந்திப்போம். இருதரப்பிலுமே அழிவுதான். இப்போது உலக நிலைவரத்தில், மாற்றம் ஏற்பட்டி ருக்கிறது. எந்த ஆதரவுமேயில்லாமல், தனிநாடொன்றைக் காண்பது சாத்தியமேயில்லை.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>