03-13-2004, 02:36 PM
<b>கருணா பெருந்தொகையான பணத்தைக் கையாடினார்: கரிகாலன் </b>
கிழக்கு மாகாணத்தில் கருணா பெருந்தொகையான பணத்தைக் கையாடியது மற்றும் முறையற்ற முறையில் நடந்து கொண்டது பற்றிய விடயம் வெளிச்சத்திற்கு வந்ததும், ஒழுங்கு நடவடிக்கைகளிற்கு பயந்து கருணா பிரிந்து சென்றார் கருணா என விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான திரு.கரிகாலன் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தேசியத் தலைவரின் அதிநம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருந்த கருணா, தனது சொந்த நலன்களை முன்னிட்டே விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்துடனான பிரச்சினைக்கு வித்திட்டார் என மேலும் தெரிவித்த கரிகாலன் அவர்கள் கருணாவின் இந்தச் செயற்பாட்டில் அந்நிய சக்தியொன்றின் ஆதரவு நிச்சயமாக இருக்கும் எனத் தான் நம்புவதாகவும் மேலும் தெரிவித்தார்.
மிக அண்மைக்காலத்திலேயே மட்டு-அம்பாறை மாவட்ட மக்கள் மீது மாற்றந்தாய் மனப்பான்மை காட்டப்படுவதாகக் குற்றஞ்சாட்டத் தொடங்கிய கருணா, தனக்கு நெருக்கமானவர்களை முக்கிய பதவிகளி;ற்கு மாற்றும் செயற்பாட்டிலும் இறங்கியதாக மேலும் குறிப்பிட்ட திரு. கரிகாலன் இது கருணா இந்தப் பிரிந்து போகும் திட்டத்தை ஏற்கனவே தீட்டியுள்ளார் என்பதைப் புலன்படுத்துகிறது எனத் தெரிவித்துள்ளார்.
கருணாவின் இந்தச் செயற்பாடுகள் இடம்பெற்ற கட்டத்தில் ஒரு போராளி கருணாவின் இந்தப் பணக் கையாடல்களை அறிந்து கொண்டார். எனினும் கருணா அவர் மீது நடவடிக்கை எடுக்க முனைந்த போதும், அவர் வன்னிக்குத் தப்பி வந்து மேற்படி விடயங்களைத் தலைமைப்பீடத்தின் பார்வைக்குக் கொண்டு வந்தார்.
இதற்கு அடுத்த வாரம் கருணாவின் இந்த மோசடிகள், தவறான நடவடிக்கைகளை அறிந்தவராக இருந்த கருணாவின் வாகணச் சாரதியான போராளி மரணமானார். அவர் காய்ச்சலால் மரணமடைந்தார் எனத் தெரிவிக்கப்பட்ட போதும் அவர் நஞ்சு10ட்டப்பட்டே கொல்லப்பட்டார் என்பதை அறிந்த போது மிகவும் அதிர்ச்சியடைந்தோம்.
இந்தநிலையில் அங்குள்ள பொதுமக்களும் கருணாவின் சில தவறான நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொண்டனர். இந்நிலையிலேயே இது பற்றி விசாரிப்பதற்கு தலைவர் வன்னிக்கு வருமாறு கருணாவிற்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையிலேயே வன்னிக்குச் செல்ல மறுத்த கருணா தன்னைச் சந்திப்பதற்கு ஒரு குழுவை மட்டக்களப்பிற்கு அனுப்ப வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை கருணா, தனது மனைவி பிள்ளைகளை மலேசியாவிற்கு அனுப்பி வைத்தார். இது தலைமைப்பீடத்திற்கு தெரியும் என்றும், தேசியத் தலைவரின் அனுமதியின்றி தான் எந்தவொரு நடவடிக்கையையும் செய்ய மாட்டேன் என்றும் கருணா அங்கேயுள்ள தளபதிகளிற்கும் பொறுப்பாளர்களிற்கும் தெரிவித்திருந்தார். ஆனால் இது கருணா தலைமைப்பீடத்திற்கு தெரியாமல் செய்ய ஒரு நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு மட்டக்களப்பு அம்பாறை மக்கள் தேசியத் தலைவருக்கு மிக நெருக்கமானவராக இருந்த கருணா, இப்போது தான் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை ஏன் தேசியத் தலைவருக்குத் தெரியப்படுத்தவில்லை என்பது பற்றிய கேள்விக்கான விடையை அறிவதற்கு முனைந்துள்ளனர் எனவும் தெரிவித்ததோடு,
கிழக்கு மகாணத்தில் உள்ள படையணிகளை, ஆயத தளபாடங்களைப் பராமரிக்க பெருந்தொகையான பணம் தேவைப்படும் எனவும் இதற்கான உதவிகளைச் செய்வதாக மேற்படி அந்நிய சக்தி உறுதியளித்தன் பேரிலேயே கருணா இத்தகையதொரு தனிப்பட்ட முடிவிற்குச் சென்றிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
குறிப்பாக, பல வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்ட கருணாவிற்கு இத்தகைய அந்நிய சக்தியின் தொடர்புகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், கருணா விடுதலைப்புலிகள் இயக்கத்தில் வகித்த தனித்துவமான பதவி மற்றும் அவரது கட்டளையின் கீழுள்ள வலு என்பவற்றைக் குறியாகக் கொண்டே இது நடைபெற்றிருக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கிழக்கில் பல இடங்களில் செறிந்திரு ந்த போராளிகளை இலகுவாக ஒருங்கிணைப்பதற்கு சிறீலங்கா இராணுவத்தின் சில அணிகளின் உதவி நிச்சயம் பெறப்பட்டிருக்க ப்ப வேண்டும் எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார். இப்பேட்டியின் மொழிபெயர்ப்பு தமிழ்நெற் கோம் எனும் இணையத்தளத்தில் உள்ளது
நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>