03-13-2004, 11:17 AM
தேசியத் தலைவரின் கீழ் ஒன்றாக செயற்படவே பிள்ளைகளை அனுப்பினோம்
தற்போதைய நிலைமைக்கு வெட்கப்படுவதாகக் கூறுகிறார் அம்பாறை மாவட்ட கூட்டமைப்பு வேட்பாளர்
வடக்கு, கிழக்கு இணைந்த தமிழீழத்தைப் பெறும் நோக்கில் போராடவே எமது பிள்ளைகளை தேசியத் தலைவர் பிரபாகரனை நம்பி அனுப்பினோம் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் சபாபதி யோகாம்பிகை, வடக்கில் போராட ஒரு பிள்ளை, கிழக்கில் ஒரு பிள்ளை என பிரதேசத்திற்கொரு பிள்ளையென நாம் அனுப்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கிழக்கில் தோன்றியுள்ள தற்போதைய நிலை குறித்து பி.பி.சி. வானொலிக்குக் கருத்துத் தெரிவித்துள்ள அவர், தேசியத் தலைவரின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்து செயற்பட்டுக் கொண்டி ருக்கும்போது கிழக்கில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இப்பொழுது எழுந்துள்ள பிரச்சினை திடPரென எழுந்த ஒரு பிரச்சினை. ஆனால், தாய்க் குலமான நாங்கள் எங்கள் பிள்ளைகளை ஈழ மண்ணைக் காப்பாற்றவே அனுப்பினோம். வட, கிழக்கு ஒன்றாக இணைந்து தேசியத் தலைவர் பிரபாகரனின் கீழ் ஒன்றாகச் செயற்பட்டு தமிழ் ஈழத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே எங்கள் பிள்ளைகளை போராட்டத்திற்கு அனுப்பினோம். 17 ஆயிரத்திற்கும் அதிகமான பிள்ளைகள் இழக்கப்பட்டுள்ளனர். அப்படியிருந்தும் எங்களுக்கு இன்னும் விமோசனம் கிடைக்கவில்லை.
வடக்கு, கிழக்கு என பிரிவின்றி நாம் இணைந்து செயற்படுவதையே விரும்புகின்றோம். தேசியத் தலைவர் பிரபாகரனின் கீழ் தான் எங்கள் வடக்கு, கிழக்கு இணையும். தலைவர் பிரபாகரனின் தலைமையின் கீழ் செயற்படத்தான் எங்கள் பிள்ளைகளை அனுப்பினோம். வடக்கிற்கு ஒரு பிள்ளை, கிழக்கிற்கு ஒரு பிள்ளை எனப் பிரிந்து செயற்பட நாம் பிள்ளைகளை, அனுப்பவில்லை.
தற்போது தோன்றியுள்ள பிரச்சினையால் மக்களிடையே ஒரு சலனம் ஏற்பட்டுள்ளது. இது எப்படி, முடியுமோ? இனி, என்ன நடக்குமோ? என்ற கவலை ஏற்பட்டுள்ளது. இதற்காக நாங்கள் வெட்கப்பட்டு வேதனைப்படுகின்றோம்.
இப்பிரச்சினையைத் தீர்க்க இரத்தக் களரி ஏற்படுவதை நாம் விரும்பவில்லை. எமது கொள்கை தமிழீழம் மட்டுமே. எமது தேசியத் தலைவர் அதனை நெருங்கிக் கொண்டி ருக்கும் நிலையில் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. உண்மையில் இது ஒரு கவலைக்குரிய விடயம்.
இப்பிரச்சினைக்கு ஒற்றுமையாக தீர்வு காணப்பட வேண்டும் என்பதைத்தான் மக்கள் விரும்புகின்றனர். இதற்காக எங்கள் தேசியத் தலைவரை நாங்கள் நேரில் சென்று சந்திக்கவுள்ளோம். ஏனெனில், எங்கள் தாய்க்குலம் பிள்ளைகளை விட்டது உண்மையில் தலைவரை நம்பித்தான். ஆனால், எமக்கு இன்னும் தலைவரைத் தெரியாது. தொலைக்காட்சியிலேயே பார்த்திருக்கிறோம். எமக்கு தலைவரைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையும் உள்ளது.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>