03-13-2004, 02:47 AM
கருணா பிரைச்சனை பற்றி குமுதம் ரிப்போட்டரின் பார்வை. இது புலிகள் பற்றி அவர்களுக்கு சரியான விளக்கமில்லாத பார்வையை காட்டுகின்றது என்று நான் நினைக்கின்றேன்.
<img src='http://www.kumudam.com/reporter/140304/pg1-t.jpg' border='0' alt='user posted image'>
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் திடீர் கலகத்தை ஏற்படுத்தியிருக்கிறார் கர்னல் கர்ணா. மட்டக்களப்பு _அம்பாறை பிரதேசத்தில் விடுதலைப்புலிகளின் தளபதியாக இருந்த கர்னல் கர்ணா, கடந்த இரண்டாம் தேதி பிரபாகரனுக்கு எழுதிய கடிதம், இயக்கத்துக்குள் பெரும் பிரளயத்தையே ஏற்படுத்திவிட்டது. அதனால் கர்னல் பதவியிலிருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். இலங்கையில் சண்டை நிறுத்தம் நிலவும் சூழ்நிலையில், புலிகளுக்குள் ஏற்பட்டுள்ள கலகம், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பங்கமாக அமைந்துவிடுமோ என உலக நாடுகள் அனைத்தும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நடைபெறும் சம்பவங்களைக் கவலையோடு கவனித்துக்கொண்டிருக்கின்றன.
கலகத்துக்குக் காரணமான அந்தக் கடிதத்தில் கர்னல் கர்ணா அப்படி என்னதான் எழுதியிருக்கிறார்? தமிழீழத்துறை பொறுப்பாளர்களாக சமீபத்தில் நியமிக்கப்பட்ட முப்பதுக்கும் மேற்பட்டவர்களில் ஒருவர்கூட மட்டக்களப்பு _ அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. விடுதலை இயக்கத்தில் இப்பிரதேச மக்களின் தியாகம் மறைக்க முடியாதது. இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 4550 பேர் போரில் வீரமரணம் அடைந்துள்ளனர். இவர்களில் 2248 வீரர்கள் யாழ்ப்பாணம் பகுதியில் நடைபெற்ற போரில் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில், இப்பிரதேசத்துக்குப் பிரதிநிதித்துவம் இல்லாததால், மற்ற பொறுப்பாளர்களை நீக்கி, தங்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கவே விரும்புகிறோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாராம்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இப்படியரு அதிரடியை ஏற்படுத்தியிருக்கும் கர்ணா, சாதாரணமானவர் இல்லை என்கிறது இலங்கையிலிருந்து வரும் தகவல்கள். யானையிறவு போரின்போது, தீரமுடன் போராடி வெற்றிபெறச்செய்த பெருமை கர்ணாவுக்கு உண்டு. இந்த வெற்றி, கர்ணாவின் செல்வாக்கை உயர்த்தியது. பிரபாகரனுக்கு அடுத்தபடியான இடத்தையும் பெற்றுத் தந்தது. அவருடைய நம்பிக்கைக்கு உரியவராகவும் திகழ்ந்து வந்தார். இந்திய ராணுவம் இலங்கையில் இருந்தபோது, பிரபாகரன் கொல்லப்பட்டதாக ஒரு செய்தி பரவியது. களத்தில் நின்று போரிட்ட தளபதிகள் சிலரும் இந்தச் செய்தி உண்மையாக இருக்குமோ என்று சந்தேகம் கொண்டார்கள். தலைவரைச் சந்திக்க வேண்டும் என்று பலரும் விருப்பம் தெரிவித்தனர். இந்தத் தகவல் பிரபாகரனுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவரும் அவ்வாறு விருப்பம் தெரிவித்தவர்களை அழைத்து வருமாறு உத்தரவிட்டார். இந்தச் செய்தி கர்ணாவுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, தலைமை சொல்லும் கட்டளைகளை நிறைவேற்றுவது மட்டுமே என் வேலை. தலைவரைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லி, பிரபாகரனைச் சந்திக்க மறுத்துவிட்டார். பிரபாகரன் இருக்கிறாரா... இல்லையா... என்ற சந்தேகத்துடன் சென்ற மற்ற தளபதிகள் அனைவரும், ஒன்றன்பின் ஒன்றாகக் கொல்லப்பட்டுவிட்டனர். காரணம், தலைவர் இருக்கிறாரா, இல்லையா என்கிற சந்தேகம்கூட இயக்கத்திலுள்ள யாருக்கும் வரக்கூடாது என்பதுதான். அதனால் கர்ணா மட்டுமே உயிருடன் தப்பினார். தலைமை மீது வைத்திருந்த நம்பிக்கையும் விசுவாசமும்தான் அவரைக் காப்பாற்றியது என்கிறார் விடுதலைப்புலிகளை நன்கறிந்த ஒருவர்.
இந்தச் சம்பவத்திற்குப் பின்னர், பிரபாகரனின் மிகுந்த நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தார் கர்ணா. இயக்கத் தலைமைக்கும் மாத்தையாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு வந்தபோது, அவரைக் கொல்லச் சொல்லி கர்ணாவிடம்தான் அஸைன்மெண்ட் கொடுக்கப்பட்டதாம். அதை அவர் கச்சிதமாகச் செய்து முடித்தார் என்றும் சொல்கிறார்கள். இதுபோல பல தண்டனைகளை கர்ணா நிறைவேற்றியுள்ளாராம்.
இதுபோன்ற கருத்து வேறுபாடுகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஏற்படுவது சகஜம் என்கிறார்கள். தளபதி கிட்டு, ஒரு காலை இழந்ததுகூட தலைமையுடன் ஏற்பட்ட மோதலால்தான் என்று சொல்பவர்களும் உண்டு. அப்போதெல்லாம் விடுதலைப்புலிகள் யுத்த களத்தில் இருந்ததால், இந்த விஷயங்கள் வெளியே தெரியாமல் போனது. இப்போது போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதால் அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிகிறது என்றும் சொல்கிறார்கள்.
இயக்கத் தலைமைக்கும் கர்ணாவுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாகவே உரசல் இருந்து வந்ததாகவும் தகவல்கள் சொல்கின்றன. கடந்த ஓராண்டுக்கு முன்பு தலைமையகத்துக்கு வருமாறு கர்ணாவுக்கு அழைப்பு அனுப்பியுள்ளனர். அப்போது அவர் தன்னுடன் ஆயிரம் வீரர்களை அழைத்துச் சென்று, தனது பலத்தை தலைமைக்குக் காட்டினாராம். இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் விடுதலைப்புலிகளின் உளவுப்படையினரால் கர்ணாவின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டு, அப்போது அவருக்கும் இலங்கை ராணுவத் தளபதிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டு, தலைமையிடம் சொல்லப்பட்டதாம். இதனை முன்கூட்டியே கண்டுபிடித்த கர்ணா, தன்னை முழுமையாக வலுப்படுத்திக்கொண்டதாகச் சொல்கிறார்கள். இதுவெல்லாம்தான் தலைமை இவர்மீது நடவடிக்கை எடுக்கக் காரணம் என்கிறார்கள்.
கர்ணா துரோகம் செய்துவிட்டார் என்று விடுதலைப்புலிகள் இயக்கம் குற்றம்சாட்டிய போதிலும், அவர் செய்த துரோகம் என்னவென்பதை வெளிப்படையாகச் சொல்ல மறுக்கின்றனர். இதுவே கர்ணாவின் பலம் என்கிறார்கள். இப்போதைக்கு கர்ணாவுக்குப் பொது மன்னிப்பு வழங்கத் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டாலும்கூட, அவர் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்கிற அச்சமும் நிலவுகிறது. இந்நிலையில் கர்ணா, தன்னைக் கொல்ல விடுதலைப்புலிகளின் தலைமை இரண்டு தற்கொலைப் படைகளை அனுப்பியிருப்பதாகச் சொல்லியுள்ளார்.
புலிகள் இயக்கத்திற்குள் ஏற்பட்டுள்ள மோதல் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்கிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்று அங்குள்ள தேவாலயங்களில் ஜெபம் செய்யப்படுகிறது. கர்ணாவை மீண்டும் விடுதலைப்புலிகள் அமைப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று திருக்கோவில் பிரதேசத்தில் மிகப்பெரிய ஊர்வலமும் நடந்துள்ளது. ஊர்வலத்தில் வந்தவர்கள், கர்ணா செய்த தவறு என்ன? என்கிற பதாகைகளை ஏந்தி வந்துள்ளனர்.
இந்தப் பிரச்னை தமிழர்களுக்குப் பெருமளவில் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்கிறார், தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>