03-12-2004, 10:15 PM
வெளிநாட்டில் சரியான சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்பட்ட இந்தியர் ஒருவரின் அனுபவம் .....
<b>வேகாத உணவு</b>
அமெரிக்காவில் வந்த புதிதில் நண்பன் ஒருவன் ரொட்டி, ஜாம், சில மைக்ரோவேவில் வைத்து சாப்பிடும் சமாச்சாரங்கள் வாங்கி கொடுத்தான். ஓட்டலில் தங்கியிருந்த சில நாட்களில் சாப்பாட்டிற்கு அதை வைத்து ஒப்பேத்தியாயிற்று. அப்புறம் வீடு மாறி கார் வாங்கி நானாக வேலைக்குப் போக ஆரம்பித்தவுடன் நானே இரை தேட வேண்டிய நிலைமை. அரிசிச் சாப்பாடு கண்ணுக்கெட்டிய தூரம் வரை தட்டுப்படவேயில்லை. ஆபீஸில் மதிய உணவிற்கு கேண்டீன் பக்கம் எட்டிப் பார்த்தேன். மெயின் அயிட்டங்களில் எது நடமாடும் அயிட்டங்கள் இல்லாதது என்று தெரியவில்லை. வெஜ்ஜீ பர்கர் என்று எழுதியிருந்தது ஒரு தட்டுக்கு மேல். அதை மட்டும் ஒன்று எடுத்துக் கொண்டு சாப்பிடும் இடத்துக்கு வந்தேன். டீக்கடை பன் மாதிரி தான் இருந்தது. ஒரு வாய் கடித்தால் கொஞ்சம் இலை தளைகள் தட்டுப்பட்டது. இரண்டாவது வாய் கடித்தால் எதோ ரப்பர் மாதிரி இருந்தது. என்னது வெஜ்ஜீ என்று போட்டிருந்தானே என்று பன்னை பிரித்து உள்ளே பார்த்தேன். வட்டமாக வடை சைசில் எதோ ஒன்று. மாமிசம் மாதிரி தெரியவில்லை. தைரியமாக இன்னொரு வாய். புண்ணாக்கு ஞாபகத்திற்கு வந்தது.
எள்ளுப் புண்ணாக்கு சாப்பிட்டுருக்கிறேன். செக்கில் போட்டு எண்ணை எடுத்த பிறகு மீதி இருப்பது தான் புண்ணாக்கு. அப்படியே சாப்பிட்டால் கசக்கும். அதனுடம் வெல்லம் சேர்த்து சாப்பிட வேண்டும். ஆனால் மாட்டுக்கு வேறு சில புண்ணாக்கு வகையறாக்களை வைப்பார்கள். அது போலத்தான் இருந்தது பார்ப்பதற்கு. இதை எப்படி திங்கிறார்கள். நைசாக நடுவில் இருந்ததை எடுத்து விட்டு மீதி இருந்த பன்னை மட்டும் சாப்பிட்டதும் மேலும் பசித்தது. இதை மட்டும் சாப்பிட்டு எப்படி உயிர் வாழ்கிறார்களோ. இதில் எப்படி எடையைப் பற்றி வேறு கவலை வருகிறதோ? பக்கத்தில் இருந்த வெண்டிங் மெசினுக்குப் போய் இரண்டு சாக்லேட் பார்கள் வாங்கிக் கொண்டு திரும்பினேன், வீட்டிற்கு போகும் போது மறக்காமல் டிபன் பாக்ஸ் வாங்கிக் கொண்டேன். எதோ சமைத்து எடுத்துட்டு வர்ர மாதிரி கனவெல்லாம் கிடையாது. இன்னும் சுடு தண்ணீர் எக்ஸ்பெர்ட் தான். வீட்டிருந்து நாலு சிலைஸ் பிரட் அந்த புண்ணாக்கு பர்கரை விட எவ்வளவோ தேவலை.
அப்புறம் பிட்ஸா. இது இந்தியாவிலேயே கொஞ்சம் சுவைத்திருந்தேன். ஆனால் நிறைய பேருக்கு அது தான் தினசரி உணவு இங்கே. கீழே பிரட், நிறைய சீஸ். அதன் மேல் கண்ட கருமாந்தரங்களையும் தூவினால் பிட்ஸா ரெடி. இதெல்லாம் தாங்க முடியாமல் பக்கத்திலிருந்த இந்திய உணவகத்திற்கு சென்றால் அங்கு சாம்பார் எதை வைத்து செய்கிறார்கள் தெரியவில்லை. அது மாதிரி சாம்பாரை இது வரை சுவைத்ததில்லை. சட்னி ஐந்தாட்டு திட்டம் மாதிரி தொலைநோக்கோடு செய்து வைத்து விடுவார்கள் போல.
வீட்டில் ரூம் மேட் தயவில் எப்போதாவது சமையல் நடக்கும். அவனுடைய முறையில் யார் வேண்டுமானாலும் சீக்கிரம் சமையல் கற்றுக் கொள்ளலாம். எந்த வகை சமையல் பொருட்கள் இருந்தாலும் சமையல் செய்வது எளிது. எல்லாவற்றிருக்கும் ஒரே அல்காரிதம்(செய்முறை) தான். காய்கறி எல்லாம் வெட்டி முடித்தவுடன் சட்டியில் கொஞ்சம் எண்ணை ஊற்றி சீரகம் கடுகு இவையெல்லாம் போட வேண்டும். சட்டி சூடானவுடன் வெங்காயம் வதக்க வேண்டும். கொஞ்ச நேரம் கழித்து என்ன காய் வெட்டி வைத்திருக்கிறோமோ அதை போட்டு மேலும் வதக்க வேண்டும். நடு நடுவே கலர் கலராய் ஊரில் இருந்து கொண்டு வந்த பாட்டிலில் உள்ள பொடிகளில் ஒவ்வொன்றிலும் ஒரு ஸ்பூன். கூட அரிசி என்றால் நிறைய தண்ணீர் ஊற்ற வேண்டும். அவ்வப்போது கொஞ்சம் எடுத்து சாப்பிட்டுப் பார்த்துக் கொண்டு, எப்போது அடுத்தவர்களும் வாயில் வைக்கிறமாதிரி இருக்கிறதோ அப்போது ஸ்டவ்வை நிறுத்தி விடலாம்.
இப்படி செத்துப் போன நாக்கோடு இப்போது பர்கர் கிங், டாகோ பெல் பக்கம் போக அதிகமாக பயப்படுவதில்லை. டாகோபெல் நான் போனாலே மெக்ஸிகன் பிட்ஸா நோ கௌ என்று சொல்லாமலே ஆர்டர் செய்து விடுகிறார்கள். ஃபாஸ்ட் ஃபுட் என்பதற்கு வேக உணவு என்பதை விட வேகாத உணவு என்றால் தான் சரியாக இருக்கும்.
நன்றி - நவன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>