03-12-2004, 09:34 PM
தமிழர் நெஞ்சு கனக்கிறது!
தமிழர்களின் நெஞ்சை எரிக்கின்ற நிகழ்வுகள் தொடர்கதையாகி விட்டன. கடந்து செல்லும் இந்த ஒருசில நாட்கள், ஈழத்தமிழர்களின் தூக்கமற்ற இரவுகளாகவும், இனந்தெரியாத துன்ப உணர்வுள்ள பகற்பொழுதுகளாகவும், முகட்டை வெறித்துப் பார்க்கும் ஒருவித இருளடைந்த எதிர்காலத்தின் அறிகுறி போலவும் கடந்து செல்கின்றன.
~தமிழனைக் காட்டிக் கொடுத்த தமிழன்| என்ற கதை பழைய கதைதான், ஆனால் தமிழனுக்கெதிராகத் தமிழனே உரிமை கேட்டு, இறுதியாகக் கனிந்து வந்துள்ள பெரும்பான்மைத் தமிழினப் பலத்தை மீண்டும் கூறுபோட, ஒரு தமிழனே முடிவெடுத்துள்ளமை, ஈழத்தமிழர் நெஞ்சங்களில் தாங்க முடியாத சோகத்தையும் வேதனையையும் உருவாக்கியுள்ளது.
இது பொய்யாக இருந்துவிடக் கூடாதா, யார் எதிரிகள் என்பதைப் பாPட்சிக்க நாம் அரங்கேற்றிய நாடகம் என்று கருணா கூறி, மீண்டும் தலைவருடன் வந்து இணைந்து விடமாட்டாரா, கருணா சற்று இறங்கிவந்து பொதுமன்னிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டாரா, ஈழத்தமிழர்களுக்கெல்லாம் பலத்த நம்பிக்கை தர கருணா கனிவான இரு வார்த்தை சொல்லி களத்தில் தலைவரைச் சந்தித்து சச்சரவுளுக்குச் சமரசம் செய்து கொள்ள மாட்டாரா என்று ஒவ்வொரு ஈழத் தமிழனின் நெஞ்சிலும் ஆயிரம் கேள்விகள்.
தியாகம் செய்தது மொத்தத் தமிழினமும் தான். இதில் எந்தப் பகுதி அதிகம் செய்தது என்று பங்கு போட்டுப் பார்க்கும் நேரம் இதுவல்ல. ~நாமார்க்கும் குடியல்லோம்| என்பது மொத்தத் தமிழினத்திற்குமான ஒரு விருதுவாக்குத்தான். இதிலே இரண்டு தமிழினக் குடிகள் தமக்கிடையே பலப்பாPட்சை பார்க்க கருணா என்ற ஒரு தமிழ்மகன் களம் அமைத்துக் கொடுத்திருப்பது தமிழர் வரலாற்றில் கறை படிந்த காலமாக என்றும் பதிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
கருணா கூறியிருப்பது போல், வடக்குக்கு மட்டும் அதிக உரிமைகளைப் பெறுவது தேசியத் தலைமையின் விருப்பாக இருந்திருந்தால், வடக்கை மட்டும் தனியாகப் பிரித்துப் பெறுவதற்கு இந்த 20 வருடகால ஈடிணையில்லா இழப்புக்கள் அவசியாமாகியிருக்காது. வடக்கை மட்டும் தனியாகப் பிரித்து, தமிழர் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு கடந்த காலத்தில் பல வாய்ப்புக்கள் தானாக உவந்தளிக்கப்பட்டன. அத்தனை வாய்ப்புக்களையும் துச்சமென மதித்துத் தூக்கியெறிந்து, பல ஒப்பந்தங்களையும் நிராகரித்து, இத்தனை காலம் போராடி, இறுதியில் இப்போது இடைக்கால நிர்வாக அலகுவரை இழுத்து வந்ததற்கு ஒரேயொரு காரணம் கிழக்கும் இணைந்த விடுதலை வேண்டும் என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே. இதிலே எந்தச் சந்தர்ப்பத்திலும் இரண்டாம் கருத்து தேசியத் தலைமைக்கு இருந்ததே இல்லை.
கிழக்கில் போராட்டத்தைப் பலப்படுத்த, விடுதலைப் புலிகள் இழந்தவை கொஞ்ச நஞ்சமல்ல. இந்த இழப்புக்கள் பற்றி கருணாவைவிட அதிகமாய்த் தெரிந்தவர் யாரும், அந்த அமைப்பிலேகூட இல்லை. கிழக்கில் வாழும் தமிழர்களின் விடுதலையை, சேர்த்தே பெற்று விடுவது மட்டும்தான் ~மரபுவழி வடகிழக்குத் தமிழர் தாயகம்| அமைக்க ஒரேவழி என்பதில் தேசியத் தலைவர் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார் என்பதை கருணா உட்பட யாரும் மறுக்க முடியாது.
ஈழத்தில் உதித்த, செயற்பட்ட எந்த இயக்கமும், கிழக்கில் காலு}ன்றி செயற்பட முடியாமற் போனமைக்கு, கிழக்கில் இருந்த யதார்த்தமான களநிலைச் சிக்கல்களே காரணம். முஸ்லிம்-சிங்களம்-தமிழ் என்ற மும்முனை மக்கள் களம், ~புட்டும் தேங்காய்ப்பூவும்| போல் முஸ்லிம்-தமிழ் கிராமங்களின் பூளோகவியற் கட்டுமானம், எல்லைப்புற கட்டாயக் குடியேற்றங்கள், எல்லைகளைப் பாதுகாப்பதிலுள்ள இராணுவ மற்றும் பாதுகாப்புச் சிக்கல்கள், இவற்றுடன், கிழக்கில் இயங்கக்கூடிய கிளை அமைப்பினருக்கான நிர்வாகத்தை நெறிப்படுத்திப் பேணுவதில் இருக்கக்கூடிய இழுபறிகள், போராளிகளையும் ஆயுதங்களையும் கிழக்கிற்கு அனுப்புவதிலும் திரும்ப எடுப்பதிலும் இருக்கக்கூடிய இராணுவ-காவலரண் சிரமங்கள் என்று இந்தப் பட்டியல் நீண்டுசெல்லும்.
இருந்தும், விடுதலைப் புலிகள் என்ற அமைப்பினர் மட்டும், பலத்த சிரமங்களுக்கும், சிக்கல்களுக்கும் முகம்கொடுத்தும், எந்தக் காரணம் கொண்டும், எத்தனை இழப்புக்கள் நேர்ந்தும், கிழக்கிலிருந்து பின்வாங்காது, கிழக்கின் தமிழர் தாயகத்தை தாங்கொணா இழப்புக்களுக்கு மத்தியில் பாதுகாத்து, விடுவித்தார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பினர் கிழக்கில் சீரிய நிர்வாகத்தின் கீழ், கட்டுக்கோப்பாக எல்லைகளைப் பாதுகாத்து, தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தை மீட்டெடுக்க முயற்சித்திருக்காவிடில், இன்று கிழக்கில் மூன்றிலொரு பகுதிகூட தமிழருக்கு மிஞ்சியிருக்க வாய்ப்பில்லை என்பதை அகத்தனை தமிழர்களும் ஏற்றுக் கொள்வார்கள்.
இத்தகைய சீரிய நிர்வாகத்திற்கு கருணாவின் பங்களிப்பு பாரிய அளவில் இருந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. கருணா என்ற ஒரு தனிமனிதனால் மட்டுமல்ல, தேசியத் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டிருந்த சீரிய நிர்வாகத்தின் கீழ் மட்டுமே, இது சாத்தியமானது என்பது நிதர்சனமான உண்மை. இதற்குப் பங்களித்த பலரில் கருணாவும் குறிப்பிடத்தக்க ஒருவர் என்பது நிஐம்.
கருணா பிரிந்து செல்ல எண்ணியிருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். சிலவேளை அது நியாயமானதாகக் கூட இருக்கலாம். அவர் அப்படி நினைத்ததோ, முடிவெடுத்ததோ, செயற்பட்டதோ கூட துரோகமுமல்ல. அது ஒரு தனிமனித உரிமை தான். ஆனால், கருணா எடுத்த அந்த முடிவை, இத்தனை காலப் போராட்டத்தின் இறுதியில், ஈழத் தமிழர்களுக்கு ஒரு ஆகக்குறைந்த விடுதலையின் அறிகுறிகள் தென்படும் நிலையிலுள்ள தற்போதைய சமாதான சூழலில், கருணா எடுத்திருப்பது தான் துரோகம். கருணா எடுத்த முடிவு துரோகமானதல்ல, ஆனால் எடுத்திருக்கின்ற நேரம் துரோகமிழைத்தமைக்கு சமனானது.
கருணா இழைத்துள்ள இந்த ~தவறான நேரம்| கருதிய துரோகம் விடுதலைப் புலிகளுக்கோ அதன் தலைமைக்கோ எதிரானதல்ல. கருணா செய்துள்ள ‘தவறான நேரம்’ கருதிய துரோகம் மொத்தத் தமிழினத்தின் விடுதலைக்குமே எதிரான துரோகமாகவே கணிக்க வேண்டியுள்ளது.
கருணா என்ற ஒரு தனிமனிதன், கிழக்கிற்கு மட்டுமல்ல வடக்கிற்கும் சேர்த்து நிறையவே தியாகம் செய்துள்ளார். அதற்கு அத்தனை தமிழர்களும் கடமைப்பட்டிருக்கிறோம். அதேவேளை, வே.பிரபாகரன் என்ற ஒரு தனிமனிதன் மட்டுமல்ல, அவருக்குப் பின்னே அணிவகுத்துள்ள அத்தனை போராளிகளும் கூட, அதேயளவு தியாக சிந்தையுடனேயே இன்றுவரை தமிழீழத்தின் வடக்கும் கிழக்கும் இணைந்த ஒட்டுமொத்தத் தாயகத்தின் வெற்றிக்காக நிறையவே தியாகம் செய்துள்ளார்கள்.
இதிலே யாருடைய தியாகம் நிறை கூடியது என்று படியிலிட்டு அளந்து பார்க்கும் நேரம் இதுவல்ல. கருணா உட்பட, அத்தனை போராளிகளின் குருதியிலும் தியாகத்திலும் உயிரிலும் எழுதப்பட்டதே தற்போது மலர்ந்து வருகின்ற நிரந்தர சமாதானம். இந்த ஒரு எல்லையைத் தொடுவதற்கான பயணமாகவே கடந்த பல வருடங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து முள்ளிலும் கல்லிலும் ரணம் சிந்திப் போராடினோம். எல்லைக்கு அருகில் வந்துநின்று, எல்லையைத் தொடுவது நீயா நானா என்று போட்டி போட நினைப்பது, அல்லது எல்லையை இருவரும், இருவேறு நேரத்தில் தொடுவோம் என்று அங்கே வாளெடுத்துப் போர் தொடுப்பது, மொத்தத் தமிழினத்தின் நிரந்தரக் கனவிலும் நம்பிக்கையிலும் மண் அள்ளிப்போடும் முயற்சியாகவே முடிந்து விடும்.
கிழக்கை மட்டும் வென்றெடுக்கும் தனியான போராட்டமோ, வடக்கை மட்டும் வென்றெடுக்கும் தனியான போராட்டமோ, தமிழினத்தின் ஒட்டுமொத்த வெற்றியைப் பெற்றுத் தரப்போவதில்லை. இது அவசியமற்ற ஒரு பிரதேசவாரியான உணர்வுப்பிழம்பு மட்டுமே. இந்த அவசியமற்ற குழப்பநிலை, எதிரிகள் பாசறையைப் பலப்படுத்தவே வழியமைக்கும் என்பதை எந்தத் தமிழரும் மறந்து விடக்கூடாது.
இப்போது எழுந்துள்ள தமிழனுக்கெதிரான தமிழனின் போராட்டம் யாருக்குமே நன்மை பயக்கப் போவதில்லை. இதிலே கருணா என்ற ஒரு தனிமனிதனை, சுற்றி நின்று சுட்டுவிரல் காட்டி, குற்றப்பத்திரிகை வாசிப்பதை நிறுத்தி, ஒட்டுமொத்தத் தமிழினமும் இணைந்து, அழுத்தம் கொடுத்து, தேசியத் தலைமையுடன் கருணா நேரடியாகச் சந்தித்து, சச்சரவுகளைப் பேசித் தீர்த்துக் கொள்ளும் ஒரு ஐனநாயக மரபை உருவாக்கிக் கொடுப்பதே நடைமுறைச் சூழலுக்கு உகந்ததாகப் படுகிறது.
சர்வதேச ஊடகங்கள், இந்த இழுபறிகளை சுயலாபங்களுக்காக தவறாகப் பிரச்சாரம் செய்யாது, சூழ்நிலை கருதி அமைதி காப்பது மிகவும் அவசியமானது. இன மத தலைமைகளுடன், கிழக்கிலும் வடக்கிலுமுள்ள அறிவுஐPவிகளும், புலம்பெயர் நாடுகளிலுள்ள நலன்விரும்பிகளும், ஏனைய வெளிநாட்டு பிரதிநிதிகளும், அத்துடன் அனைத்து உள்நாட்டு பிறநாட்டு ஊடகங்களும், கருணாவை மீண்டும் தேசியத் தலைவருடன் சமரசம் செய்துகொண்டு, தற்போது கனிந்துவந்துள்ள இறுதிச் சந்தர்ப்பத்தை, மொத்தத் தமிழினத்தின் நிரந்தர நன்மை கருதி, ஏற்றுக்கொள்ள வழிசெய்யுமாறு அழுத்தம் கொடுப்பதே அவசியமான பணியாக விரிந்து கிடக்கிறது.
மட்டக்களப்பு ஆயரும், கிழக்கின் அறிவுஐPவிகள் பலரும் இந்தப் பணியை ஆரம்பித்துள்ளார்கள். இதற்கு அனைவரும் பூரண ஆதரவு கொடுத்து, மீண்டும் ஒன்றுபட்ட வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர்களின் மரபுவழித் தாயகத்தை உறுதிசெய்ய இணைந்து குரல் கொடுப்போம், வழி சமைப்போம்.
நன்றி - குயின்ரஸ் துரைசிங்கம் / தமிழ் நாதம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>