03-12-2004, 07:36 PM
முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் முஸ்லிம் மீடியா போரம் வேண்டுகோள்
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள பிளவினால் உருவாகியுள்ள புதிய நிலைமையை இலங்கை முஸ்லிம்கள் நிதானமாக அனுக வேண்டி யுள்ளது. எனவே இது குறித்து கருத்து வெளியிடும் போது வடக்கு கிழக்கு பகுதி தமிழ் மக்களினது மனதைப் புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிடாமல் முஸ்லிம் அரசியல் வாதிகள் நிதானமாக நடந்து கொள்ள வேண்டுமென }லங்கா முஸ்லிம் மீடியா போரம் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள பிளவினால் வடக்கு கிழக்குப் பகுதிகளில் புதிய அரசியல் சூ ழலொன்றும் பதற்ற நிலைமையும் உருவாகி இருக்கிறது.
இந்த நிலையில் நாட்டில் பலர் புலிகள் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள பிளவைப் பார்த்து மன வேதனை அடைவதையும் வேறு பலர் அதனைக் கண்டு கொக்கரித்துச் சிரிப்பதையும் நாம் காண்கிறோம்.
புதிய நிலைமையை இலங்கை முஸ்லிம்கள் நிதானமாக அனுக வேண்டி யுள்ளது. குறிப்பாக தற்போது தேர்தல் காலம் என்பதால் பெரும் எண்ணிக்கையானோர் அரசியல் மேடைகளில் பேசுவதால் அந்த நிதான அனுகுமுறை மிகவும் முக்கியமாக இருக்கிறது.
புலிகளிடம் ஏற்பட்டுள்ள இந்தப் பிணக்கில் எந்தப் பிரிவினர் சரியானவர்கள் என்றோ எந்தப் பிரிவினர் பிழையானவர்கள் என்றோ தீர்ப்பு வழங்குவது முஸ்லிம்களின் பணியல்ல. அதேவேளை இந்தச் சிக்கல் எவ்வாறு தீர்க்கப்படும் என்பது எவராலும் கூறமுடியாது.
அதேவேளை இந்தப் பிரச்சினை மோதலில் முடிந்தாலும் சுமுகமாக முடி ந்தாலும் வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களோடு ஒன்று சேர்ந்து வாழ்ந்தேயாக வேண்டும். எனவே கடந்த கால கசப்புணர்வுகளால் உந்தப்பட்டு அநாவசியமாக வட பகுதி தமிழ் மக்களினதோ அல்லது கிழக்குத் தமிழ் மக்களினதோ மனதைப் புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என }லங்கா முஸ்லிம் மீடியா போரம் கேட்டுக் கொள்கிறது.
அவ்வாறு கருத்து வெளியிடுவதால் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் முஸ்லிம்களிடையேயும் கசப்புணர்வுகள் உருவாகலாம் என்பதையும் சுட்டி க் காட்ட விரும்புகிறோம்.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>