03-12-2004, 07:31 PM
கருணா விவகாரத்தில் யாதார்த்த நிலையை நோர்வே உணர்ந்தது குறித்து புலிகள் திருப்தி
நோர்வே அனுசரணையாளர்களும், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரும் கருணாவுடனான சகல தொடர்புகளையும் துண்டிýத்தும், அவரது கட்டுப்பாட்டுப் பகுதியில் சகல பணிகளையும் இடைநிறுத்தியமையும் யதார்த்தத்தை உணர்ந்து அவர்கள் செயற்பட்டதன் வெளிப்பாடு என்று தெரிவித்திருக்கும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் புலிகளின் தலைமைப்பீட நிலைப்பாடு இதுவிடயத்தில் என்னவாக இருக்கும் என்பதை முன்னதாகவே அவர்கள் உய்த்தறிந்து எடுத்த மிகச் சரியான தீர்மானங்கள் இவை என்று கூýறியிருக்கிறார்.
இலங்கைக்கான நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கார் ஆகியோரை கிளிநொச்சியிலுள்ள விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை சந்தித்த பின்னர் நடத்திய செய்தியாளர் மாநாட்டிýல் இவ்வாறு தெரிவித்த அவர், கருணாவின் வேடம் இப்போது கலையத் தொடங்கியுள்ளது. அவரது மோசமான நடவடிýக்கைகள் குறித்து பொது மக்கள் மத்தியில் தெளிவு ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. தனது போராளிகளுடனேயே அவர் முரண்படத் தொடங்கியுள்ளார். பெரும் ஆபத்து அவரைச் சூýழ்ந்திருக்கிறது. சார்பாக இருந்தவர்களே இப்போது அவருக்கு எதிராகச் செயற்பட்டு வருகிறார்கள். அவருடன் இருந்த போராளிகள், அணி அணியாக விலகி வருகிறார்கள். மிக விரைவில் மக்கள் மத்தியிலிருந்தும், போராளிகள் மத்தியிலிருந்தும் அவர் தனிமைப்படுத்தப்படுவார் என்று கூýறினார்.
நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மிற்கு, மட்டக்களப்பில் ஏற்பட்டிýருக்கும் நெருக்கடிý தொடர்பாக புலிகள் எடுக்கவிருக்கும் தீர்மானங்கள் பற்றி விளக்கியிருக்கிறோம். இதுவொரு வழமையான சந்திப்பாக இருந்தாலும், விசேடமான இப்பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினரும் கலந்துரையாடிýயமை ஒரு சிறப்பம்சமாகும்., கருணா தொடர்பாக எத்தகைய தீர்மானங்களை நோர்வே மேற்கொள்ள வேண்டுமென்று நாங்கள் கோரிக்கை முன்வைப்பதற்கு முன்னதாகவே அவர்கள் யதார்த்தத்தை உணர்ந்து கொண்டு கருணாவுடனான சகல தொடர்புகளையும் துண்டிýத்திருக்கிறார்கள்.
கருணா தற்பொழுது தனது அடிýயாட்களை ஈடுபடுத்தி பொதுமக்களுக்கு பல்வேறு துன்புறுத்தல்களைச் செய்து வருகிறார். அவர் ஒரு குற்றவாளி. இயக்கத்தின் கட்டுப்பாடுகள், கோட்பாடுகளை மீறி பல குற்றங்களை இழைத்துள்ளார். மக்கள் மத்தியில் ஏற்படுத்திய குழப்பங்கள் இப்போது குறையத் தொடங்கியிருப்பதுடன், அவரது மோசமான நடவடிýக்கைகளை மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் தேசியத் தலைவர் மீதும், எமது இலட்சியத்தின் மீதும், தேசிய ஒருமைப்பாட்டிýன் மீதும் மிகவும் பற்றுறுதியுடன் இருக்கிறார்கள். இதனை எவரும் ஒருபோதும் சீர்குலைக்க முடிýயாது. இது ஒரு வரலாற்று உண்மை.
கிழக்கில் கருணா தன் மீதான குற்றச்சாட்டுகளை மூýடிý மறைப்பதற்காக கிளப்பிய பிரதேசவாதம் பொது மக்கள் மத்தியில் எடுபடவில்லை. கருணாவின் அடாவடிýத்தனங்களுக்கு அங்குள்ள மக்கள் பலியாக மாட்டார்கள் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். கருணாவுடன் இருந்த ஏராளமான தளபதிகளும், பொறுப்பாளர்களும், போராளிகளும் வன்னிக்கு வந்து அவரது அத்துமீறல்கள், குற்றச்சாட்டுகளை ஆதாரப10ர்வமாக நிரூýபித்துள்ளார்கள். கருணாவிடம் பணயக் கைதிகளாக இருக்கும் போராளிகள், தொடர்ந்து தப்பியோடிý வந்து கொண்டிýருக்கிறார்கள்.
விடுதலைப் புலிகளின் சொத்துகளை அபகரித்து வைத்துள்ள, கருணாவுக்கு சில நாட்களுக்கே இது, சாத்தியமாக இருந்தாலும், மிகவிரைவில் எமது புதிய நிர்வாகக் கட்டமைப்பு இதனை நிவர்த்தி செய்யும். எந்தவிதமான இரத்தக் கறைகளுமின்றி, சமாதான முயற்சிகள் சீர்குலையாத வகையில், மட்டக்களப்பு நெருக்கடிý முடிýவுக்குக் கொண்டு வரப்படும்.
எரிக் சொல்ஹெய்முடன் தேர்தல் பற்றியும் ஆராய்ந்தோம். எமது கட்டுப்பாட்டிýல் வாழ்கின்ற மக்கள் சுதந்திரமான முறையில் தமது வாக்குரிமையைப் பிரயோகிப்பதற்கான நடவடிýக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதற்குத் தடையாக உள்ள காரணிகள் அகற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். இதுவிடயத்தில் சர்வதேச சமூýகமும் கூýடிýய கவனம் எடுத்துள்ளதாக அவர்கள் சுட்டிýக் காட்டிýனர்.
வடக்கு, கிழக்கில் அவசரமான மனிதாபிமானப் பணிகளை முன்னெடுப்பதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தினோம் என்று தெரிவித்தார். இச்சந்திப்பில் மட்டு - அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன், மட்டு- அம்பாறை விசேட தளபதி ரமேர்;, புலிகளின் மூýத்த உறுப்பினர் கரிகாலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>