03-12-2004, 02:14 PM
விடுதலைப் புலிகளுடனான சந்திப்பில் பிரிட்டிஷ் படைத்துறை அதிகாரி
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தை சந்திப்பதற்காக வன்னி சென்ற பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயக்; குழுவில், பிரித்தானிய படைத்துறையின் உயர் அதிகாரி ஒருவரும் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இக்குழுவில் படைத்துறை சார்ந்த அதிகாரி ஒருவர் கலந்து கொண்டமை, முரண்பாடான ஒன்றாகவே பலரால் கருதப்;படுகிறது.
இச்சந்திப்பின் போது, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஸ்டிவன் ஈவன்ஸ், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மக்களிற்கான மனிதாபிமான உதவிகள் தொடர்பாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும், வடக்கு-கிழக்கு மக்கள் இவ் உதவிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் உலக வங்கி தற்போது ஆரம்ப நடவடிக்கைகளை எடுத்து வருவது நல்ல ஒரு அறிகுறியாக தெரிவதாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
தற்போது மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் காணப்படும் அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய குழுவினரிற்கு தமிழீழ விடுதலைப் புலிகளினால் எடுத்துக் கூறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நாட்டின் சகல பகுதி மக்களும் தேர்தலில் தமது உரிமையை பயன்படுத்தும் வகையில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியுள்ளார்
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>