03-11-2004, 08:44 PM
<b>நல்ல பெடியன் - விஜயாலயன் </b>
எங்கள் வீட்டில் ஒரு வானொலிப்பெட்டி. எனக்கும் அதற்கும் பல தொடர்புகள் உள்ளன. நான் பிறந்த அதே 1976 ஆம் ஆண்டுதான் அதை வாங்கினார்களாம். நான் சிறுபிள்ளையாய் இருந்தபோது இரவு நேரங்களில் அப்பா அந்த வானொலிப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு வீட்டு முன் விறாந்தைக்கு சென்று விடுவார் (பிள்ளைகளின் படிப்பைக் குழப்பக்கூடாதென்று). நான் நைசாகப்போய் அப்பாவின் மடியில் தூங்கிவிடுவேன். நான் கடைக்குட்டி என்பதால் என்னை யாரும் படியென்று விரட்டமாட்டார்கள். இலங்கை வானொலியில் முஸ்லிம் நிகழ்ச்சிகள், செய்தி, பிபிசி தமிழோசை, நாடகங்கள் என்று பல நிகழ்ச்சிகளை ஒலித்து நள்ளிரவில் ஓயும் அந்த வானொலி.
1982 இல் தொலைக்காட்சிப்பெட்டி வீட்டிற்கு வந்ததும் அது ஒலிக்கும் நேரம் குறைந்தது. ஆனாலும் வீட்டுவிறாந்தையில் அதுதான் தொடர்ந்தும் கதாநாயகன்.
நாட்டில் போர் தொடங்கி மின் விநியோகம் தடைப்பட்டதும் தொலைக்காட்சிப்பெட்டி மூலைக்குள் முடங்கியது. வானொலிப்பெட்டிதான் நாட்டில் நடப்பதை அறிய ஒரே வழியானது. பிபிசி, வெரித்தாஸ், உள்ளூர் செய்திகள் என்று நேரத்துக்கு நேரம் அலைவரிசை மாறும்.
மேலும் போர் உக்கிரமடைய மின்கலங்களுக்கும் (battery) தடைவிதித்தார்கள். அப்பொழுது எனது கைவண்ணம் ஆரம்பித்தது. வானொலிப்பெட்டியைக் பலமுறை கழற்றி அதற்குள் மாறுதல்கள் செய்து மிதிவண்டி மின்பிறப்பாக்கி (cycle dynamo) மூலம் இயங்கச்செய்தேன். மாலையானதும் மிதிவண்டியை தலைகீழாக நிறுத்தி அதனருகில் இருந்து கைகளால் மிதியை (pedal) பிடித்து சுற்றி செய்திகள் கேட்டோம். அந்தச்செய்திகள்தான் அன்றாட வாழ்வின் இயக்கங்களைத் தீர்மானித்தன.
பின்னர் நான் பல்கலைக்கழகம் சென்று இலத்திரனியற் பொறியியல் படித்துகொண்டு இருக்கும்போது ஊரிலிருந்து என்னைப்பார்க்க வந்த அம்மா சொன்னார் "தம்பி, அந்த றேடியோ பழுதாகிப்போய், கமலத்தின் அண்ணன்தான் அதை திருத்தித்தந்தவன். அவன் நல்ல பெடியன். திருத்தினதுக்கு காசுகூட எடுக்கேல்லை. ஏதோ "ஐசி" (IC) மாத்திறதிற்கெண்டு 1500 ரூபாவை மட்டும்தான் எடுத்தான்".
எனது இலத்திரனியல் அறிவில் சந்தேகம் ஏற்பட்டது. பலமுறை நான் கழற்றிப் பார்த்தபோதெல்லாம் என் கண்ணிற்கு மட்டும் ஏன் ஒரு "ஐசி"யும் தென்பட்டிருக்கவில்லை? அதைவிட 1976 இல் வாங்கிய வானொலிப்பெட்டியில் "ஐசி" வந்தது எப்படி?
நான் ஊர் போகும் நாளிற்காய் காத்திருக்கிறேன். அந்த நல்ல பெடியனைச் சந்தித்து எங்கள் வானொலிப்பெட்டியில் உள்ள "ஐசி" ஒன்றைக்காட்டுமாறு கேட்பதற்கு.

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>