03-11-2004, 07:57 PM
<img src='http://www.virakesari.lk/20040312/PICS/santhi.jpg' border='0' alt='user posted image'>
மேல்மாகாணத்தில் மூன்று இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதுபோல, கிழக்கில் வாழுகின்ற மூவின மக்களும் ஏன் ஒற்றுமையாக வாழக்கூடாது?
ஜே.வி.பி.யின் நாயக தோழர் சோமவன்ஸ அமரசிங்கதானே இந்தச் கேள்வியை கேட்கிறார்.
சலீம் நானா: நானும்தான் கேட்கிறேன்.
பறுவதம் பாட்டி: இது தேர்தல் திருவிழாக்காலம். எனவே தோழர்கள் சிங்கள மக்களை கவர்ந்திழுக்க என்ன வெல்லாமோ சொல்லுவார்கள். பேப்பர்காரர்கள் அவர்கள் சொல்லுவதற்கெல்லாம் பெரிய தலைப்பிட்டு பிரசுரிக்கவும் செய்வார்கள்.
பண்டா ஐயா: அப்படிச் சொல்லக்கூடாது. பேப்பர் ஒன்று ஜே.வி.பி. தோழர்களை பார்த்து பழைய கதைகளை நினைவூட்டி பலகேள்விக்கணைகளை தொடுத்திருக்கிறது.
சாம்பிளுக்கு இரண்டைச் சொல்கிறேன்.
71இலும் 80 இலும் நீங்கள் ஆயுதப்புரட்சியில் ஈடுபட்ட பொழுது பாவித்த ஆயுதங்கள் எல்லாவற்றையும் திருப்பிக்கொடுத்து விட்டீர்களா?பொது மக்களிடமிருந்து பறித்தெடுத்த தேசிய அடையாள அட்டைகள் அனைத்தையும் பொது மக்களிடம் திருப்பிக்கொடுத்து விட்டீர்களா?
உங்கள் தொழிற்சங்கங்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டங்கள் காரணமாக மூடப்பட்ட கம்பனிகள் எத்தனை?
இப்படி, வடகிழக்கு உட்பட நாடெங்கும் ஜனநாயகத்தை மீண்டும் மலரச்செய்ய புறப்பட்டுள்ள ஜே.வி.பி. தோழர்களை பார்த்து பேப்பர் ஒன்று கேள்வி எழுப்பியிருக்கிறது.
சலீம்நானா:அது யூ.என்.பி. காரர்களின் பினாமிகள் போட்ட விளம்பரம்! பேப்பர்காரர்கள் பழைய கதையை கிண்டப்போகவில்லை. யூ.என்.பி. தோழர்கள் தான் பணம் கொடுத்து விளம்பரம் போட்டிருக்கிறார்கள்.
பறுவதம் பாட்டி: தோழர் சோமவன்சா வேறு என்ன சொல்லியிருக்கிறார்கள்.
பண்டா ஐயா: புலிகளுக்கு இடையே தோன்றியுள்ள பிளவு, காரணமாக சதிகாரர்களான யூ.என்.பி. காரரும், உள்ளூர் சர்வதேச கும்பலும் குழம்பிப்போயிருக்கிறார்கள். இதனால் நாட்டுக்கு ஏதோ பேராபத்து சூழப்போகிறதாக மக்களுக்கு படம்காட்டுகிறார்கள். இந்த பிளவு, இயக்கத்துக்குள் மேலும் பலவெடிப்புகளுக்கு வழிவகுக்க போகிறது. இது உறுதி. இதனை புரிந்துகொள்ளாமல் பிளவை சரிக்கட்டி ஆதாயம் தேடுவதற்கு இந்த சதி காரர்கள் துடியாய் துடிக்கின்றனர்.
ஆனால் கிழக்கு மாகாணமக்கள் இப்பொழுது நிலைமையை புரிந்து கொண்டு விட்டõர்கள். இதனை பயன்படுத்தி அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும். இதனை விடுத்து இந்த உள்ளூர் சதிகாரர்கள் பிளவை சரிக்கட்டி தங்கள் இலக்கை அடைய முற்படுகிறார்கள். இப்படி எல்லாமோ சொல்லியிருக்கிறார்.
சலீம்நானா: கருணா அம்மான் என்ன செய்கிறார்?
பறுவதம்பாட்டி:தனது பக்கத்து சங்கதிகளை வெளிநாடுகளில் இயங்கும் வானொலிகள் டி.வி.க்கு பேட்டி கொடுத்து சக்கைப்போடுபோடுகிறார். அங்குள்ளவர்களும் கருணாவை தொலைபேசியில் தேடிப்பிடித்து பிளவை மேலும் விரிவடையச்செய்வதில் முனைப்பு காட்டுகிறார்கள்.
சலீம்நானா;உங்களுக்கு ஏன் மனம் புழுங்குகிறது. கலகம்பிறந்திருக்கிறது.எனவேநியாயம்கிடைக்கும்தானே. கொஞ்ச நாட்களுக்கு பொறுத்திருங்கோ! அதுவரை நடப்பதை அவதானிப் போம்.
பண்டா ஐயா: தென்பகுதி தேர்தல் களத்தில் தேர்தல் கால பத்திரிகைகள் புற்றீசல்கள்போல கிளம்பியுள்ளன.
பௌத்த குருமாரின் ஹெல உறுமய கட்சி வேட்பாளர்கள் சிலரின் வண்டவாளங்களை சில ஏடுகள் பிரசுரித்து விடுகின்றன. ஒரு முக்கிய வேட்பாளர் காரணமாக குடும்ப பெண் ஒருத்தி தனது கணவனிடமிருந்து டைவோஸ்பெறவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தான் தள்ளப்பட்ட அவலநிலை பற்றி தந்த பேட்டியொன்றுகூட இந்த ஒன்றில்பிரசுர மாகியது.
குறிப்பிட்ட வேட்பாளர்தான் எனக்கு வரனை அறிமுகப்படுத்தி கலியாணம் செய்து வைத்தார். பின்னர் அவரே எனது திருமண முறிவுக்கு காரணமாகிவிட்டார் என்று அந்தப்பெண் தன்னினம் மறந்து பச்சையாக அந்த மதகுரு வேட்பாளர்பற்றி பேட்டிகொடுத்திருக்கிறார். என்றால் தேர்தல் கால அவதூறு பிரசாரங்கள் எந்த லட்சணத்தில் சக்கை போடு போடுகிறது என்பதை எடை போடுங்களேன்.
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>