03-11-2004, 07:53 PM
வன்னித்தலைமையின் முடிவை மீள்பரிசீலனை
செய்யக்கோரி சுழற்சிமுறை உண்ணாவிரதம்
மட்டக்களப்பு அம்பாறை பிராந்திய விசேட சிறப்பு தளபதியாக இருந்த கேணல் கருணா அம்மான் மீது வன்னித்தலைமை மேற்கொண்ட முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களும் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கருணா அம்மானை அவரது பதவியிலிருந்தும் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்தும் நீக்கியதை அறிந்த கிழக்கு மாகாண மக்கள் ஆழ்ந்த அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாகியிருக்கிறார்கள்.
இவ்வாறான முடிவை புலிகள் மீள்பரிசீலணை செய்யவேண்டும். அத்துடன் தென் தமிழீழ மக்களதும் போராளிகளதும் உணர்வுகளுக்கு புலிகள் மதிப்பளித்து பிரிவினையை ஏற்படுத்தாது இணைந்து தமிழீழ விடிவிற்காக போராட வேண்டுமென்பதற்காக பின்வரும் ஐந்து கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.
* கேணல் கருணா அம்மான் தேசத்துரோகி என்று தலைமைப்பீடத்தினால் கூறப்பட்ட குற்றச்சாட்டை தலைமைப்பீடம் வாபஸ்பெற வேண்டும்.
* கிழக்கு மாகாணத்தின் தலைவன் கேணல் கருணா அம்மானே.
* மட்டக்களப்பு, அம்பாறை நிர்வாகத்தில் பிற தலையீடு இல்லாது கருணா அம்மானின் நேரடி பொறுப்பில் நிர்வாகம் இருக்கவேண்டும்.
* தமிழர் படைகள் தங்களிடையே மோதல்களில் ஈடுபடாது ஒன்றிணைந்து தமிழீழ விடிவிற்காக பாடுபடவேண்டும்.
* வன்னிமண்ணிலுள்ள மட்டு. அம்பாறை போராளிகளை உடனடியாக அனுப்பவேண்டும்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை சுழற்சிமுறை உண்ணாவிரதம் இடம்பெறும் என்றும் அதற்குள் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் இல்லாவிடில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்படும் என்றும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>