03-11-2004, 07:50 PM
மட்டக்களப்பில் வீரகேசரி பத்திரிகை தீயிட்டு எரிப்பு
மட்டக்களப்பு, மாவட்டத்தில் விநியோகிப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட வீரகேசரி நாளிதழ்களின் பிரதிகளை கொண்ட பொதிகள் இனந்தெரியாத இளைஞர் குழுவினரால் எடுத்துசெல்லப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன.
வியாழன் காலை 6 மணியளவில் முனைவீதியிலுள்ள போக்குவரத்து நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த பத்திரிகை பொதிகளை முச்சக்கரவண்டியொன்றில் ஏற்றிச்சென்ற இளைஞர் குழுவினர் பூம்புகார் பிரதேசத்திற்கு எடுத்துச்சென்று தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
நாட்டின் நடப்புக்களை பக்கம் சாராது தேசிய ரீதியில் உடனுக்குடன் மக்களுக்கு கொண்டு வருவதில் தமிழ் தேசிய பத்திரிகைகள் பெரும் பங்கு வகிக்கின்றன.
தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் சகல விதமான நெருக்கடிகளையும் சர்வதேச உலகம் வரை எட்டச் செய்து அவற்றுக்கு நிவாரணம் தேடிக்கொடுப்பதில் தமிழ் தேசிய பத்திரிகைகள் ஆற்றும்பணி மக்கள் அனைவரும் அறிந்ததே.
இவ்வாறானதோர் நிலைமையில் எந்தவித பொறுப்புமின்றி பத்திரிகைக்கு நாசம் விளைவிப்பது, மிகவும் கண்டனத்துக்கும், கவலைக்கும் உரியதாகும் என்பதை அனைவரும் எற்றுக்கொள்ளவே செய்வார்கள்.
இன்றைய சூழ் நிலையில் தமிழ் மக்கள் சொல்லொண்ணாதுயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அவற்றையெல்லாம் ஒரு புறம் மறந்து வெறுமனே பத்திரிகை மீது பாய்வதை தமிழ் பேசும் மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவோ, நியாயப்படுத்தவோ போவதில்லை. இவ்வாறான செயல்கள் தமிழ் பேசும் மக்களிடையே வெறுப்புணர்வையே மேலேங்காச்செய்யும்.
அத்துடன் அபகீர்த்தியையும் கண்டனங்களையும் தம்பால் வலிந்து ஈர்த்துக் கொள்ளும் முயற்சியாகவே இத்தகைய சம்பவங்கள் அமையும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இனந்தெரியாத இளைஞர் குழுவொன்றே இவ்வாறு பத்திரிகைகளை தீயிட்டு கொளுத்தியுள்ளது. அவ்வாறாயின் இந்த இனந்தெரியாத குழுவினைக் கட்டுப்படுத்துவது யார் ? என்ற கேள்வியும் எழுகின்றது.
யார் இதனைச் செய்திருப்பினும் அவர்கள் தமது செய்கை சரியானதா என்பது குறித்து சற்று நிதானமாகச் சிந்தித்துப் பார்க்க முன்வரவேண்டும்.
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>