03-11-2004, 07:46 PM
விசுவாசத்தின் வெளிப்பாடே கதிர்காமரின் சீற்றம்.
சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சரும் சனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆலோசகருமான லக்ஸ்மன் கதிர்காமரின் அண்மைய கோபத்திற்கு உள்ளானவர் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் மைக் ஓ பிறெய்ன்.
காரணம் மைக் ஓ.பிறேய்ன். 'நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகளால் சமாதான முயற்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் - யுத்தநிறுத்தத்தை பாதிக்காத வகையிலும் சிறிலங்காவின் அரசியல் வாதிகள் நடந்து கொள்ள வேண்டும்' என கேட்டுக் கொண்டமையாகும்.
இதிலும் முக்கியமாக பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் கூறியது நீதியாகவும் நியாயமாகவும் தேர்தல் நடைபெறவேண்டும் என்பதுடன் வாக்காளர்கள் தமது மனச்சாட்டிப்படி வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டதே ஆகும்.
ஏனெனில் இந்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முழுமுதற் பொறுப்பு சனாதிபதி சந்திரிகாவே காரணம் என்பதால் இந்தத் தேர்தலில் சந்திரிகாவின் கட்சியினை ஆட்சிபீடம் ஏறுவதை மேற்குலகம் விரும்பவில்லை. என்றதன் தொனியே பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சரின் கருத்து வெளிப்படுவதாக கதிர்காமர் கருதியிருக்கக்கூடும்.
இதற்கு அவர் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் இலங்கையின் உள்நாட்டு அரசியலில் தலையிட்டதன்பால் கதிர்காமர் தெரிவித்த கருத்து சனாதிபதி சந்திரிக்காவுக்கான விவகாரத்தை வெளிப்படுத்தும் முகமாகவே இதனை வெளிப்படுத்தி உள்ளார் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
ஒரு காலகட்டத்தில் சர்வதேச ரீதியாக இலங்கையின் வெளியுறவு அமைச்சராக இருந்த கதிர்காமர் இந்த நாடுகளின் தலைவர்களுடன் அதிக ஈடுபாட்டை கொண்டிருந்தவர் என்பதுடன் தனது ஈடுபாடு காரணமாக தனிப்பட்ட நட்பு ரீதியாக சர்வதேச ரீதியில் அரசியலில் அதிகம் சாதித்தார் என்ற தகவல்கள் முன்பு வெளிவந்தன.
இதனால்தான் ஒவ்வொரு நாட்டிற்கும் விஜயம் செய்த கதிர்காமர் விடுதலைப்புலிகள் தொடர்பாக இந்த நாடுகள் தடைகளை ஏற்படுத்தும் அளவுக்கு அவரது விஜயங்கள் அமைந்திருந்தன.
அந்த துணிவின் அடிப்படையிலும் கூட யாழ் நகரில் இருந்து சூரியகதிர் இராணுவ நடவடிக்கை காரணமாக ஒரே இரவில் இடம்பெயர்ந்த யாழ் மக்களின் துயரம் தொடர்பாக அப்போதைய ஜக்கிய நாடுகள் சபைக்கான பொதுச்செயலர் பூட்ரஸ் காலி கவலை தெரிவித்த போது இதே கதிர்காமர் ஜ.நா.சபையின் வேலை மலோரியாவை கட்டுப்படுத்த மருத்து தெளிப்து என்ற வகையில் கிண்டலாக தனது ஆட்சேபனையை தெரிவித்திருக்கிறார்.
இப்போது எதிர்கட்சி உறுப்பினராக இருந்து கொண்டு அமைச்சு பொறுப்பொன்றை ஏற்றிருப்பதன் வாய் வீரத்தை பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சருக்கு தெளிவாக தெரிவித்திருக்கிறார்.
இங்கே நாம் கவனிக்க வேண்டியது அமைச்சர் கதிர்காமர் வெளியுறவு அமைச்சராக இருந்த போது விமானப்பரப்பிற்கு மேல் பறப்பாக பயணம் செய்து புலிகளிற்கு எதிரான சர்வதேச நிலைப்பாட்டை ஏற்படுத்தி வைத்திருத்தார் புலிகளோ அவரது வியுகத்திற்கு எதிர்மாறாக வன்னியிலிருந்து கொண்டு வெளிநாட்டு அமைச்சர்களையும் இராஜதந்திரிகளையும் வன்னிக்கே வரவளைத்து புலிகள் மீதான சர்வதேச ரீதியான நல்ல அபிப்பிராயத்தை கட்டிவளர்ப்பதை பொறுக்க முடியாதிருப்பதுதான்.
ஏனென்றால் அமைச்சர் கதிர்காமரின் தூரநோக்கற்ற அரசியல் நடவக்கைகளின் தோல்விகளே மேற்குலக நாடுகளின் கருத்துக்கள் இப்போது பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளன. இதனை அவரால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்.
அதுவும் ஜக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பதவிக்கு கனவுகண்டு அது முடியாமற்போய் பின்னர் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டு படுதோல்வி கண்டு துவண்டு போயிருக்கும் அவரால் எப்படி இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் சில வேளைகளில் தனக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கும் பிரதமர் கனவை சிதைக்கும் வகையில் தான் சார்ந்து நிற்கும் கட்சிக்கு சேதத்தை ஏற்படுத்த அவரால்முடியும்.
இவைதான் அமைச்சர் கதிர்காமர் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் மீதான சீற்றமாகவும் இருக்கும்.
ஆனால் அரசியல் கனறுகுட்டிகள் அல்ல தாங்கள் என கூறும் இந்த அரசியல் மேதாவிக்கு ஏதோ இன்றைய உலகை பகைத்துக்கொண்டு அரசை கொண்டு செல்லமுடியாது என்பது புரியவில்லை என்பதுதான்.
இதேநேரம் அமைச்சர் அதிக விஜயங்கள் மேற்கொள்ளும் அண்மைய நாட்டின் துணிவுதான் காரணமாக உள்ளது போல் உள்ளது. அமைச்சர் கதிர்காமரின் இந்த பாச்சல் இந்த தேர்தல் காலத்தில் அதிகமாக இருக்கத்தான் போகிறது.
இவருக்கு பக்கப்பலமாக இருக்கும் நீலக்கட்சியும் சிவப்புக்கட்சியும் இவரது அதிக பிரசங்கித்தனத்துக்கு ஏற்ற பங்காற்ற தாராளமாக வாசலைத் திறந்துவிடவே செய்கின்றது.
ஆனால் அமைச்சர் கதிர்காமர் இதன் யதார்த்தத்தை புரிந்து கொள்ளப்போவதேயில்லை.
நன்றி நக்கீரர் ஈழநாதம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>