03-11-2004, 02:24 PM
'வட, கிழக்கு மாநில ஒருமைப்பாடு" ஒருபோதும் சிதையக்கூýடாது!
வன்முறைக் கலாசாரத்திலிருந்து நாட்டை விடுவிக்க முடிýயும் என்ற நம்பிக்கை, படுபயங்கரமாகச் சிதறடிýக்கப்படுகின்றது. நாட்டை சமாதானப் பாதையிலும், அபிவிருத்திப் பாதையிலும் செலுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவுமே தேங்கிப் போயுள்ளன.
பாராளுமன்றத்திலே அதிகாரத்தைப் பெறுவதற்கான போட்டிýயில் இறங்கியுள்ள இரு பிரதான அரசியல் கட்சிகளும், தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வைக் காணும் முயற்சியில் இறங்கி 'கவிண்டு கொட்டிýண்டு போயுள்ள நிலைமையிலே" பேரினவாத அரசியல் கூýச்சல்கள் தாறுமாறாக வெளிப்படுகின்றன!
ஜனநாயக ரீதியாக இலங்கையில், இதுவரைகாலமாகத் தொடர்ந்த பெரும்பான்மைக் கட்சியாட்சி, பெரும்பான்மையின ஆட்சியாகவே இருந்து வந்துள்ளது. ஏறத்தாழ, இலங்கையில் அரை நூற்றாண்டு காலமாக நடந்தேறிய ஆட்சியில், சிறுபான்மையினங்களின் அடிýப்படை உரிமைகள் முதல் மனித உரிமைகள் யாவற்றுக்கும் மேலாக வாழும் உரிமைகளையே கொள்ளையடிýத்த கதை இன்னும் முடிýயவில்லை.
ஆயுதப் போராட்டம் யுத்தமாகித் தொடர்ந்த அழிவுப் பாதையில் இருந்து நாட்டை மீட்ட ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், சமாதானம், பேச்சுவார்த்தைகள் என்ற படிý உருவாக்கிய சர்வதேச வலைப்பின்னல் இப்பொழுது அப்படிýயே 'பிறந்த மேனியோடு" பெருமூýச்சு விட்டபடிý கிடக்கின்றது.
இரண்டு வருடங்களாக ஆரவாரங்களுடன் அரங்கேற்றப்பட்ட சகல சமாதான முயற்சிகளும், இனிமேல் எந்தப் பாதையில் காலடிý எடுத்து வைக்கப் போகின்றன? விடுதலைப் புலிகளுடன் சர்வதேச மட்டத்திலே ஓடிýயோடிý நடத்திய சமாதானப் பேச்சுகள், இடைக்கால நிர்வாகக் கட்டமைப்புத் தேடல் வரைதான் நகர்ந்தாலும், யுத்த நிறுத்தம் என்ற ஒன்றைத்தான் உருப்படிýயாக வெளிப்படுத்தின.
புரிந்துணர்வு உடன்படிýக்கை, வெறும் 'கடதாசியளவிலான ஒரு ஆவணமாகத் தான்" உள்ளது. ஜனாதிபதியும், எதிரணியினர், இனவாதச் சக்திகளின் ஆரவாரங்கள், ஆர்ப்பரிப்புகளின் மத்தியில் வெளிப்படுத்திய, எதிர்ப்பலைகள் ஒன்று திரண்டு உருவாகியுள்ள பொதுத் தேர்தல், தேசிய அரசியல் வன்முறைக் கலாசாரத்தை மீண்டும் உயிர்ப்பிக்கின்றது.
முரண்பாடுகள் சகல கோணங்களிலும் ஆழமாகிக் கொண்டிýருக்கின்றமை தேர்தல் பிரசாரங்கள் மூýலமாக மட்டுமல்ல, வன்முறைகளைத் தூண்டிýவிடும் சுயநல அரசியல் சக்திகளின் நடைமுறைகள் மூýலமாகவும்தான் வெளிப்படுகின்றது.
சாதாரண மக்களைப் பொறுத்த வரையிலும், நாட்டிýன் எதிர்காலத்தைப் பொறுத்தவரையிலும் நாடு எந்தத் திசையில் செல்லப் போகின்றது என்பதை எவருமே அனுமானிக்க முடிýயாதுள்ளது. எத்தனை கட்சிகளும், சுயேச்சைகள் என்ற தற்குறிகளும் இந்தத் தேர்தலில் குதித்திருந்தாலும், இரு பிரதான கட்சிகளின் கூýட்டமைப்புத்தான் ஆட்சியை அமைக்கப் போகின்றது.
இப்பொழுது மக்களின் முன்னால் ஒரு பாரிய பொறுப்பு விரிந்துள்ளது. விரும்பியோ, விரும்பாமலோ மக்கள் இந்த இரு பிரதான கட்சிகளுக்கும் வாக்காளிக்காவிட்டாலும் கூýட, இந்தக் கட்சிகளுக்குத் துணைபோகும் கட்சிகளிற்கு வாக்களிப்பது நடைபெறப் போகின்றது. சிறிய கட்சிகளுக்கோ, சுயேச்சை என்ற தற்குறிகளுக்கோ, புதிய கட்சிகளுக்கோ வாக்களிப்பது வாக்குகளை விரயம் செய்யும் விடயமாகத் தான் போய் முடிýயும்.
ஒன்றுபட்ட வட, கிழக்குத் தமிழ் மாநிலத்தை உறுதிப்படுத்தும் இலக்குகளுடன் தான் தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் பேசும் மக்களின் தேசிய அபிலாiர்களாக இதுவரை வெளிப்படுத்தப்பட்ட விடயங்களை எல்லாம் ஜீரணிக்க முடிýயாத தென்னிலங்கைக் கட்சிகள், இந்தக் கூýட்டமைப்பையே சிதைப்பதற்கு எதையுமே செய்யத் தயங்காத நிலைமைதான் இப்பொழுது வெளிப்படுகின்றது.
சுருங்கக் கூýறின், இப்பொழுது யதார்த்தமாகியுள்ள வட, கிழக்கு இணைப்பு என்ற ஒருமைப்பாடு, கடந்த கால ஆயுதப் போராட்டங்களின் விளைவாக ஏற்பட்டதுதான் என்பதை எவரும் மறுக்க முடிýயாது. பேரினவாத சக்திகள் முதல் குறுகின இனவாத சிந்தனைகளை வளர்க்கும் தற்குறிகள் வரை யாவருமே தீர்க்கதரிசனமில்லாது தமிழ் பேசும் மக்களின் பலத்தைக் குறைப்பதற்கான வட, கிழக்கு ஒருமைப்பாட்டையே சிதைக்க முற்படும் பாதையில் இறங்க முற்படுவது துரதிர்ர்;டவசமானது.
சுயநலத்திற்காக அரசியல் கட்சிகள், அமைப்புகள் மட்டத்தில் பிளவுபட்ட சிலரும் பேரினவாத சக்திகளுக்கு 'ஒத்தூதுவது" சில்லறைத்தனமான அரசியலாகவே வெளிப்படுகின்றது. மொத்தத்திலே வட, கிழக்கு மாநிலத்தின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கவிடாத வகையிலே, அப்பிரதேசத்தை தாயகமாகக் கொண்ட தமிழ், முஸ்லிம் மக்கள் பிரதேசவாதம் என்ற குறுகிய நிலைப்பாட்டிýலிருந்து விடுபட்டு பரந்த நோக்குடன் ஒன்றுபட்டு, எதிர்வரும் தேர்தலில் வாக்குப் பலத்தை நிலைநாட்டுவதுதான் மிக மிக அவசியமானது.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>