03-11-2004, 02:56 AM
மட்டு-அம்பாறையில் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்துடன் கருணா முரண்பட்டுள்ளதன் காரணமாக,
இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு, மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் முன்னெடுத்துவரும் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை இடைநிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு பகுதியில் கடமையாற்றி வந்த பிரதம கண்காணிப்பு அதிகாரி பேர் ரொஸன்டல் இது குறித்துக் கருத்துக் கூறுகையில்,
தாம் கருனாவின் ஆளுகைக்கு உட்பட்ட
பகுதிகளில், கண்காணிப்பு நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாகவும், தம்மோடு புலிகள் தரப்பிலிருந்தும், அரச தரப்பில் இருந்தும், தலா இருவரைக் கொண்ட சர்வதேச கண்காணிப்பு அதிகாரியின் கீழான 5 உறுப்பினர்களைக்
கொண்ட உள்ளுர் கண்காணிப்பு குழுவினரும்
தமது நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் மட்டக்களப்பு அம்பாறை தவிர்ந்த
ஏனைய பகுதிகளில், தமது கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்வதாகவும் தெரிவித்த
மேற்படி அதிகாரி, அண்மையில் கிழக்குப் பகுதியில் புலிகளிற்கிடையே போர் மூண்டதாக
ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 9ஆம் திகதி, வவுணதீவில், மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட சிரேஷ்ட இராணுவத் தளபதிகள் அடங்கிய குழுவினர்,
போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அதிகாரிகளின் முன்னிலையில், கருனாவை, சந்திப்பதற்கு
ஏற்பாடு செய்யப்பட்டபோதும், கருணா அச்சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை எனவும்
தெரிவிக்கப்படுகிறது.

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>