03-10-2004, 08:42 PM
ஊடகங்கள் பொறுப்பான தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் - வடகிழக்கு கல்விமான்கள் அமைப்பு
சிறீலங்கா அரச ஊடகங்களும் ஏனைய ஊடகங்களும் பொறுப்பான முறையில் நடந்து கொள்வதோடு, தற்போது நின்று போயுள்ள சமாதான முயற்சிகள் மீண்டும் முன்னெடுக்கப்படுவதற்கு ஏதுவாக பொறுப்பான வகையில் நடந்து கொள்ள வேண்டுமென வடகிழக்கு கல்விமான்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறிப்பாக, சிறீலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்; திருகோணமலை மாவட்டம் தொடர்பாக வெளியிட்ட பொய்யான செய்திகள் அமைதியான சு10ழ்நிலையில் இருக்கும் இனங்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் முயற்சியே எனவும் மேற்படி வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கேணல் பதுமன் கொல்லப்பட்டதாக நேற்று ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதே போன்று இன்று திருகோணமலையில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டாகவும் செய்தி வெளியிட்டிருந்தது.
மேற்படி இரு செய்திகளுமே பொய்யானவை எனச் சுட்டிக்காட்டிய கல்விமான்கள் அமைப்பு சிறீலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் திருக்கோணமலை மாவட்டத்தில் பதட்டத்தையும், வன்முறையையும் தோற்றுவிக்கவே இவ்வாறான பொய்ச் செய்திகளை வெளியிடுகிறது எனவும் தெரிவித்துள்ளது.
[b]<span style='color:#ff0012'>இதேவேளை, புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் 900,000 மேற்பட்ட தமிழர்களின் ஆதரவிலேயே புலிகள் இயக்கம் இயங்குகிறது எனவும், அந்த ஆதரவை இல்லாது செய்யும் தேவையே தற்போதுள்ளது எனவும் சிங்கள ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.
குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழர்கள் மத்தியில் பிரதேசவாதக் பிரிவினை ஏற்படும் பட்சத்தில் இவ்வாறான நிலை சாத்தியமாகும் என அது ஹேஸ்யம் தெரிவித்திருக்கிறது. எனினும் சிறீலங்கா அரசு இவ்வாறான முயற்சிகளில் புலம்பெயர்ந்த நாடுகளில் ஈடுபட முயற்சிக்கும் என கொழும்புப் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு தமிழர்களின் ஊடகங்கள் இந்த விடயத்தில் அவதானமாக இருப்பது இன்றியமையாததொன்று என்று அவர் மேலும் அவர் தெரிவித்தார். </span>
நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>