03-10-2004, 08:35 PM
தேர்தலின்பின் போரை தொடங்கும் நோக்கம் புலிகளுக்கு இல்லை கரிகாலன்
பொதுத் தேர்தல் முடிவடைந்த பின்னர் போரை தொடங்கும் நோக்கம் விடுதலைப் புலிகளிடம் இல்லை. கருணா என்ற தனிநபரின் பொய்ப் பிரசாரங்களை நம்பி மக்கள் குழப்பமடையவேண்டிய அவசியம் இல்லை என விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான சி.கரிகாலன் தொலைபேசி மூலம் நேற்று கேசரிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். கருணா மன்னிப்பு கோரிவந்தால் அவரது வாழ்க்கைக்கான உத்தரவாதம் வழங்கி அவரை வெளிநாடொன்றில் தஞ்சமடைய வைப்பதற்கான ஏற்பாடுகளை தேசிய தலைவர் பிரபாகரன் மேற்கொள்வார் எனவும் அவர் கூறினார். கேசரிக்கு வழங்கிய அந்த பேட்டியில் அவர் மேலும் தெரிவித்ததாவது;
கேள்வி: தேர்தல் முடிந்த பின்னர் போருக்கான ஏற்பாடுகளை நீங்கள் செய்ததாகவும் அதனாலேயேதான் பிரிந்து சென்றதாகவும் வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு கருணா கூறியுள்ளாரே ?
பதில்: அப்பட்டமான பொய்.போராளிகளையும் மக்களையும் திசை திருப்புவதற்காகவே கருணா அவ்வாறு கூறியிருக்கவேண்டும். அத்துடன் தனது தவறுகளை மூடி மறைப்பதற்காக கருணா அவ்வப்போது பொய்களை கூறிவருகின்றார். கிழக்கில் இருக்கின்ற போராளிகளும் மக்களும் அதனை நம்ப வேண்டாம் என்று தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றேன்.தேர்தல் முடிவடைந்த பின்னர் போரைத் தொடங்கும் நோக்கம் எதுவும் புலிகளுக்கு இல்லை. சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நோர்வேயுடன் பேசிக்கொண்டிருக்கின்றோம்.
கேள்வி: மட்டக்களப்பின் புறநகர்ப்பகுதிகளிலிருந்து கண்காணிப்புக்குழு வெளியேறிவருவதற்கு நீங்கள் தான் காரணமா ?
பதில்: இல்லை. நோர்வே தலைமையிலான போர் நிறுத்த கண்காணிப்பு குழு எமது தேசிய தலைவர் பிரபாகரனின் வேண்டுதலினால் அமைக்கப்பட்டது. ஆகவே அதனை வெளியேற்றவேண்டிய அவசியம் எமக்கில்லை. அங்கிருந்து ஏன் வெளியேறினார்கள் என்பது பற்றி எமக்கு தெரியாது. சிலவேளைகளில் கருணாவின் அச்சுறுத்தலினால் அவர்கள் வெளியேறியிருக்கக்கூடும்.
கேள்வி: நீங்கள் கிழக்கு மாகாணத்திற்கு எப்போது செல்வீர்கள் ?
பதில்: எமது போராளிகள் அங்கிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் கட்டமைப்பும் அங்கு பலப்படுத்தப்படுகின்றது. தற்போது எழுந்துள்ள குழப்பநிலை விரைவில் முடிவிற்குவரும் அதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுகின்றன.
கேள்வி: கிழக்கிலிருந்து பல போராளிகள் உங்கள் பக்கம் வந்திருக்கிறார்களா ?
பதில்: ஆம் வந்துகொண்டே இருக்கின்றார்கள். கருணா தற்போது தனிமனிதனாகவே செயற்படுகின்றார். வெளிநாட்டு சக்தி ஒன்றின் துணையோடு அவர் இயங்குகின்றார். விடுதலைப் புலிப் போராளிகள் ஒவ்வொருவரும் தமிழ்த்தேசியத்தையும், தமிழ்த்தேசிய தலைமையையும் நேசித்தவர்கள்.
கேள்வி: கருணா திரும்பிவந்தால் மன்னிப்பதற்கும் வாழ்க்கைக்கான உத்தரவாதம் வழங்கவும் தயாராக இருக்கிறீர்களா ?
பதில்: ஆம். தனது தவறை உணர்ந்து எமது தலைவரிடம் கருணாவந்தால் அவரது உயிருக்கு உத்தரவாதம் வழங்கி அவர் விரும்பிய வெளிநாடொன்றில் தஞ்சமடையவைப்பதற்கு தேசியத் தலைவர் தயாராகவே இருக்கின்றார். கருணா சார்பாக எம்முடன் பேசவருவோருக்கு நாங்கள் அதனை தெளிவுபடுத்தவுள்ளோம்.
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>