03-10-2004, 08:32 PM
"கிழக்கில் புலிகள் படுகொலை என பல்வேறு கட்டுக்கதைகள்' எந்த சடலத்தையும் காணவில்லை என்கிறார் கடற்படை பேச்சாளர்
""மட்டக்களப்பு கதிரவெளி பகுதியில் புலிகளின் படகு ஒன்று குண்டு தாக்குதலுக்கு இலக்கான சம்பவத்தில் 20 கடற்புலிகள் பலியானதாக சில சிங்களப்பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் <span style='color:#ff003f'>இவ்வாறான தகவல்கள் அவர்களுக்கு எவ்வாறு கிடைக்கின்றன என்று எமக்குத் தெரியாது. எமது அவதானிப்புக்களின்படி இவ்வாறான சம்பவமொன்று நடைபெற்றமைக்கான எந்தவித ஆதாரமும் இல்லை' இவையாவும் கட்டுக் கதைகளாகும்'' கடற்படை பேச்சாளர் கொமடோர் பெரேரா "கேசரி'க்குத் தெரிவித்தார்.
பத்திரிகைச் செய்தியை அடுத்து அப்பகுதிக்கு விரைந்த கடற்படையினர் தேடுதல்களை மேற்கொண்டனர். எனினும் ஒரு சடலம் கூட கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
கிழக்கு சம்பவங்கள் தொடர்பாக முன்பின் முரணாக சில ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் தொடர்பாக கடற்படை கொமடோர் பெரேராவிடம்வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் கூறுகையில்;
கிழக்கில் புலிகளுக்கிடையிலான மோதலில் பெரும் எண்ணிக்கையானோர் பலியானதாக பத்திரிகைகள் சில அடுத்தடுத்து பிரசுரித்து வரும் செய்திகள் தொடர்பாக தாங்கள் இராணுவதரப்பினருடன் ஆராய்ந்ததாகவும் ஆனால் அதற்கான சான்றுகளையோ, சாத்தியக் கூறுகளையோ தங்களால் காண முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் கிழக்கு நிலைமைகள் குறித்து யுத்த நிறுத்தக்கண்காணிப்புக்குழுவினருடன் தாங்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகின்ற போதிலும் அவர்களும் இது குறித்து ஊர்ஜிதம் செய்யவில்லை என்றும் கொமடோர் பெரேரா கூறினார்.
புலிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பிளவை அடுத்து கிழக்கில் ஒருவித இனம்புரியாத அமைதி நிலையை அவதானிக்க முடிகின்றது என்று கூறிய அவர் ஒரு சில ஊடகங்கள் கூறும் அளவுக்கு நிலைமை மோசமடையவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே புலிகள் இயக்கத்துள் தோன்றியுள்ள நெருக்கடி சற்று தணிந்துவரும் சாத்தியக்கூறுகள் தென்படுவதாக கிழக்கிலிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
அதேவேளை புலிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பிளவை சாதகமாகப் பயன்படுத்த அரசாங்கம் தவறிவருவதாக தென்பகுதி இனவாத அமைப்புக்கள் பகிரங்கமாக அறிக்கை விட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
இவற்றுக்கு மத்தியில் சில சிங்கள, ஆங்கில ஊடகங்கள் சிறு சம்பவங்களைக் கூட பெரிதுபடுத்தியும், திரிபுபடுத்தியும் செய்திகளாக பிரசுரித்து கிழக்கில் பெரும் யுத்தம் நடப்பது போன்ற ஒரு மாயையை சர்வதேசமட்டத்தில் ஏற்படுத்த முனைவதாக தமிழ் மக்கள் மிகுந்த கவலை தெரிவிக்கின்றனர்.</span>
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>