03-10-2004, 08:27 PM
<img src='http://www.virakesari.lk/20040311/PICS/santhi.jpg' border='0' alt='user posted image'>
பதவி நீக்கம் செய்யப்பட்ட அடுத்த கணமே கருணா அம்மான் செய்த முதல் வேலை என்ன?
வன்னித் தலைமையால் புதிதாக நியமிக்கப்பட்ட தளபதிகள் கடல்மார்க்கமாக கிழக்கு கரையோரம் வந்து இறங்குவதை தடுப்பதற்காக, மாங்கேணிக்கு வடக்கே உள்ள பனிச்சங்கேணிக்கு போராளிகள் படையொன்றை அனுப்பி வைத்ததுதான் முதல் வேலையாம்.
பறுவதம் பாட்டி: உனக்கு யார் இதை சொன்னது?
சலீம் நானா: நேற்றைய ஆங்கில பத்திரிகையொன்று கிழக்கை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் பிரபாகரன் வெற்றி பெறுவாரா? என்று தலைப்பிட்டு, கட்டுரையொன்றை பிரசுரித்திருந்தது. அந்தக் கட்டுரையாளரே இதனைத் தெரிவித்திருக்கிறார்.
பண்டா ஐயா: அதுமட்டுமல்ல கிழக்கு மாவட்டத்தில் கூட்டு ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்வருமாறு இலங்கை இராணுவத்துக்கு கருணா பலதடவைகள் அழைப்பு விடுத்திருந்தார் என்றும் அதற்கு இலங்கை ராணுவம் மறுத்துவிட்டதாகவும் அந்தகட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலிடத்தின் யோசனைக்கிணங்கவே, அங்குவர இராணுவத்தினர் மறுத்து விட்டனராம்.
கந்தர் அம்மான்: கேட்பதற்கு திகிலாக இருக்கிறது. அதிலுள்ளதை வடிவாக சொல்லுங்கோ.
சலீம் நானா: வெருகலுக்கு வட புலத்திலுள்ள மாவடிச்சேனை என்ற இடத்தில் பிரபாகரனின் விசுவாசியான தளபதி சொர்ணம் தலைமையில் ஒரு படை அணியும், தென் தமிழ் ஈழத்தின் தலைவர் கருணாவின் சகோதரன் ரெஜியின் தலைமையிலான படை அணியும் போர் முரசு கொட்டுகின்றன.
ரெஜி அணியினரின் கடும் எதிர்ப்புக்கு சொர்ணம் படை அணியினர் முகம் கொடுத்து வருகிறார்கள்.
கருணாவுக்கும் பிரபாகரனுக்குமிடையே நல்லுறவை உள்வாங்கும் முகமாக சமாதானப் பயணம் ஒன்றை மேற்கொண்டே நாம் வந்து கொண்டிருக்கிறோம் என்று சொர்ணம்,வானொலி மூலம் ரெஜிக்கு செய்தி அனுப்பினார். பல தடவைகள் படித்துப் படித்துச் சொன்னார். ஆயினும் வாகரையை நோக்கிய அவர்களது நகர்வு தடுத்து நிறுத்தப்பட்டு விட்டது.
பறுவதம் பாட்டி: கருணாவின் பிரதேசத்திற்குள் நுழைவதற்கு வன்னித் தலைமை கையாளும் ஒரு தந்திரம். ஒரு யுக்தி என்று கருணாவின் ஆட்கள் நினைத்திருப்பார்கள்.
சலீம் நானா: அப்படித்தான் நடந்திருக்கிறது. சொர்ணம் வருவதை ஞாயிறன்று அறிந்ததும் உடனடியாகவே கருணா தனது தம்பி ரெஜிக்கு சொர்ணத்தையும் அவரது ஆட்களையும் சுட்டுத்தள்ளுமாறு உத்தரவிட்டிருக்கிறார். ஆனாலும் சொர்ணம் நிலைமைகளை அறிந்து தனது படையினரை அழைத்துக் கொண்டு சில கிலோமீற்றர் தூரம் பின்னோக்கிச் சென்றுவிட்டார்.
பண்டா ஐயா: படித்ததில் ஒரு பகுதியை நான் சொல்லுகிறேன். மீண்டும் திங்கட்கிழமை, சொர்ணம் தோற்றினார். இந்த தடவை கருணாவின் விசுவாசியான சுதாகர், தங்கள் பயணம் பற்றிக் கருணாவுக்கு தகவல் சொன்னார். அவசரப்பட வேண்டாம்.
சற்றே பொறுத்திருங்கோ என்ற பதில்தான் கருணா தரப்பிலிருந்து கிடைத்தது.
பறுவதம் பாட்டி: கண்டமிச்சம் காத்திருப்பது தானாக்கும்
பண்டா ஐயா: கட்டுரையாளரும் அப்படித்தான் எழுதியிருக்கிறார்.
ஞாயிறு இரவு, கருணாவின் கரடியனாறு தளத்திலிருந்து சுமார் 200 புலிப் போராளிகள் ட்ராக்டர்கள் மூலம் வாகரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கிழக்குக்குள் ஊடுருவியுள்ள பிரபாவுக்கு விசுவாசமான போராளிகளுக்கும் கருணாவின் விசுவாசிகளுக்குமிடையே மறு நாள் யுத்தம் வெடிக்கப் போகிறது என்றுதான் பலரும் நினைத்தனர்.
சலீம் நானா: இதேவேளை, இலங்கை ராணுவத்துக்கு ஒரு தகவல் கிடைத்தது.
பண்டா ஐயா: வடக்கு போராளிகள், பல்வேறு மூலை முடுக்குகளாலும் கிழக்குக்குள் பெருமளவு ஊடுருவல் செய்யப் போகிறார்கள் என்ற வதந்தி பரவலாக பரவ ஆரம்பித்து விட்டது. அதனை அறிந்து கருணா தனது முகாமை, அதிக பாதுகாப்பு உள்ள தொப்பிக்கலவுக்கு மாற்றிவிட்டார் என்பதே ராணுவத்துக்கு கிடைத்த தகவலாகும்.
பறுவதம் பாட்டி: இந்த கட்டுரையாளரின்படி கருணா இப்பொழுது தொப்பிக்கல பகுதியில் நிலை கொண்டு தனது எதிர்கால யுத்திகளை வகுத்து வருகிறார்.
கந்தர் அம்மான்: நேரில் கண்டமாதிரி இந்த கட்டுரையாளர் எழுதியிருக்கிறார். யார் இந்த தகவல்களை இவருக்கு கொடுத்திருப்பார்கள்?
பறுவதம் பாட்டி: [b]இலங்கை பேப்பர் பசங்கள் செய்திகளை ஜோடிப்பதில் கில்லாடிகள்.
இதோ பாருங்கோ திருகோணமலை மாவட்ட தளபதி பதுமன் கிளிநொச்சியிலிருந்து கொண்டு லண்டனிலுள்ள பிபிசி ரேடியோவுக்கு டெலிபோனில் முதல்நாள் இரவு பேட்டி கொடுக்கிறார். ஆனால் மறுநாள் அரச ரேடியோ ஒன்று பதுமன் கொல்லப்பட்டு விட்டதாக ராணுவத்தை மேற்கோள் காட்டி செய்தி ஒலிப்பரப்புகிறது.
இதனை கேட்டுவிட்டு சில பேப்பர்கள் பதுமன் கொல்லப்பட்டுவிட்டாரா? உயிருடன் இருக்கிறாரா? என்று தலையங்கம் இட்டு செய்திகளை பிரசுரித்திருக்கின்றன.
பதுமன் பல போராளிகளுடன் நின்று எடுத்த புகைப்படங்களையும் பிரசுரித்து பரபரப்பாக்கியிருக்கின்றன. வெவ்வேறு கு×ப்பை சேர்ந்த சிங்கள ஆங்கில பத்திரிகைகள், ஒரே மாதிரியான படங்களையும் செய்திகளையும் பதுமனை முன்வைத்து செய்திகளையும் பிரசுரித்துள்ளனர்
பறுவதம் பாட்டி: [b]ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் போல தமிழ் ஈழம் கேட்டுப் போராடியவர்கள் இரண்டு பட்டால் தென்னிலங்கையாட்களுக்கு குஷிதானே!
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>