03-10-2004, 07:51 PM
தமிழ் ஊடகங்களிற்கு கொழும்பில் வசிக்கும் ஒரு தமிழனின் தயவான வேண்டுகோள்.
புதன்கிழமை, 10 மார்ச் 2004, 21:10 ஈழம்
உங்கள் செய்தித் தளத்தைப் பார்வையிடும் வாசகர்களில் நானும் ஒருவன். அந்த வகையில் இக் கடிதத்தை உங்கள் இணையத்தில் பிரசுரிக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
கருணா எதற்காகத் தனது தலைமைப்பீடத்தை நாடவில்லை என்பதை அவர் இப்போது செய்து வரும் செயல்கள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இப்போது விடுதலைப்புலிகள் போருக்கு ஆயத்தமாகிறார்கள் என்ற செய்தியை வெளிநாட்டு தொலைக்காட்சிக்கு அறிவித்துள்ளார். இது அவர் உண்மையிலேயே மட்டு-அம்பாறை மக்களை தனது தேவைகளிற்காகப் பயன்படுத்துகிறார் என்பதை இது காட்டுகிறது.
அத்தோடு தமிழன ஒற்றுமைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதோடு, பிற மாவட்டங்களைச் சேர்ந்தோர் மீது துவேசம் காட்டும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். பிற மாவட்டத் தமிழர்கள் பற்றிய பல அவதூறான கருத்துக்களைத் தொடர்ந்தும் அங்கே பரப்பிவருகிறார்கள். இங்கிருந்து வெளிவரும் தினக்குரல் பத்திரிகையைத் தடுத்துள்ளார்கள். மட்டு-அம்பாறை மக்களை உணர்ச்சியேற்றிவிட்டு, அதில் அவர்கள் குளிர்காய்கிறார்கள் என்ற உண்மையை அந்த மக்கள் விரைவில் உணர்ந்து கொள்வார்கள்.
இப்படியான நிலையில், ஈழத்தமிழர்கள் பெருமளவில் வாழும் நாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்கள் நிதானத்தைக் கடைப்பிடித்து, செய்திகளை ஆராய்ந்து பிரசுரிக்க வேண்டும் என்பதே எனதும் எனது நண்பர்களினதும் தயவான வேண்டுகோள். ஏனெனில் உங்கிருந்து எங்களுடன் கதைக்கின்ற உறவுகள், இங்கே நடைபெறாத பல சம்பவங்களைக் கூட உங்குள்ள வானொலிகள், பத்திரிகைகள் மூலம் அறிந்து அவை உண்மைச் சம்பவங்கள் போல எம்மிடம் சொல்கிறார்கள். கேட்கிறார்கள்.
தமிழினத்தில் பிரிவு ஏற்பட்டால் ஈழத் தமிழர்களிற்கு மாத்திரமல்ல ஆபத்து என்பதை மேற்படி தமிழ்ச் செய்தி நிறுவனங்கள் புரிந்து கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்களின் செய்தி நிறுவனங்கள் சில இந்த உண்மையை உணர்ந்து செயற்பட வேண்டும். அரசாங்கத்துடன் சேர்ந்து திரியும் குழுக்களோ அல்லது வேறு எவருமோ இப்போதைய பிரிவு பற்றி வாய் திறக்காமல் இருப்பதற்கு இதுவே காரணம். ஏனென்றால் அவர்களின் வாழ்வும் விடுதலைப்புலிகளின் பலத்தில் தான் தங்கியிருக்கிறது. எனவே புலம்பெயர்ந்த எமது உறவுகள் ஒட்டுமொத்த தமிழினத்தின் தேவையையே இப்போது வலியுறுத்த வேண்டும்.
இங்கே கூட தமிழரை ஏளனப்பார்வை பார்க்கும் நிலை மீண்டும் தொடங்குகிறது. சிங்கள இனம் மட்டுமல்ல, இன்னொரு இனமும் சேர்ந்தே இப்படி எம்மை ஏளனமாகப் பார்க்கத் தொடங்குகிறது. எனவே தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பதே இப்போது எமக்குத் தேவையானது என்பதை மனதில் வைத்து பத்திரிகா தர்மத்தை, நடுநிலைமையைக் காக்கவேண்டும் என்பதே எமது அவா.
இங்கேயுள்ள சிங்கள அல்லது ஆங்கில செய்திநிறுவனங்கள் தங்களிற்கு இடையேயான பேதங்களை எப்போதுமே தூக்கிப்பாhப்பதில்லை. சிங்களத் தேசியம் சார்ந்த கருத்துக்களையே அவர்கள் தமது வாசகர்களிடையே (எம் மீதும்) திணிப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை அதுவே அவர்களது நடுநிலையான செயற்பாடு. தமிழர்களை பயங்கரவாதிகள் என்று அழைப்பதையும், தமிழர்கள் மீது இனவாதம் ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் இங்குள்ள ஆங்கில ஊடகங்கள் இப்போதும் செய்கின்றன. சிங்களத் தேசியத்திற்காகச் செயற்படுவதை அவை நடுநிலையாகவும் நியாயப்படுத்துகின்றன.
எனவே நீங்களும் தேவையின் நிமித்தமாவது, தமிழ்த்தேசியம் சார்ந்த செய்திகளையே முன்னிலைப்படுத்துங்கள். கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ்ப்பத்திரிகைகள், வானொலிகள் கடைப்பிடிக்கும் நிதானத்திற்கு மேலான நிதானத்தை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். அப்போது தான் ஈழத்தமிழினம் முன்னேற்றமடையும்.
அன்புடன்,சோ.தயாபரன்
நன்றி - புதினம்
உங்கள் கருத்துக்கள் ?

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>