Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வன்னியில் தமிழரின் புராதன சின்னங்கள் கண்டுபிடிப்பு....
#3
[scroll:43e3a267cb]<img src='http://www.eelampage.com/images/photos/20030829FRI001.gif' border='0' alt='user posted image'><img src='http://www.eelampage.com/images/photos/20030829FRI002.gif' border='0' alt='user posted image'><img src='http://www.eelampage.com/images/photos/20030829FRI003.gif' border='0' alt='user posted image'><img src='http://www.eelampage.com/images/photos/20030829FRI004.gif' border='0' alt='user posted image'><img src='http://www.eelampage.com/images/photos/20030829FRI005.gif' border='0' alt='user posted image'><img src='http://www.eelampage.com/images/photos/20030829FRI006.gif' border='0' alt='user posted image'><img src='http://www.eelampage.com/images/photos/20030829FRI007.gif' border='0' alt='user posted image'><img src='http://www.eelampage.com/images/photos/20030829FRI008.gif' border='0' alt='user posted image'><img src='http://www.eelampage.com/images/photos/20030829FRI009.gif' border='0' alt='user posted image'><img src='http://www.eelampage.com/images/photos/20030829FRI010.gif' border='0' alt='user posted image'><img src='http://www.eelampage.com/images/photos/20030829FRI011.gif' border='0' alt='user posted image'><img src='http://www.eelampage.com/images/photos/20030829FRI012.gif' border='0' alt='user posted image'> நன்றி...புதினம்.கொம்[/scroll:43e3a267cb]


[size=16]வன்னி தண்ணிமுறிப்பில் சுடுமண் வளையக் கிணறு ஓன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது


முல்லைத்தீவின் தண்ணிமுறிப்பில் மீளக்குடியமர்ந்த மக்கள் புதிதாக கிணறு ஒன்றை வெட்டியபோது அதன் ஓரு பக்கத்தில் இரண்டரையடி விட்டத்தில் 8 அடி ஆழம்நேர்த்தியாக தோண்டப்பட்டு அதனுள் அமைக்கபட்ட 2அடி விட்டத்தில் 1 அடி உயரமுடைய 3 சுடுமண்வளையங்கள் சிதைந்த நிலையில் எடுக்கப்பட்டன.

கிணறு அமைக்கப்பட்ட காலத்தின் பின் அதன் மேல் 3 அடி உயரத்திற்கு வண்டல் மண் வலிமையாகப் படிந்துள்ளது. 2000 ஆண்டுகளிற்கு முற்;பட்டதாக இது இருக்கும் எனக் கருதப்படுகின்றது. 1885ல் முல்லைத்தீவு நகரின் வடக்கில் இத்தகைய சுடுமண்வளையக்கிணறு கண்டுபிடிக்கப்பட்டது.

பூநகரி கிராஞ்சியில் 2800 ஆண்டுகள் தொன்மையானதென காபன்-14 காலக்கணிப்பு செய்யப்பட்ட சுடுமண் கிணறு இன்றும்மக்கள் பயன்பாட்டில் உள்ளது. முன்னர் யாழ்ப்பாணம் வல்லிபுரத்தில் ஒரு சுடுமண் கிணறு எடுக்கப்பட்டு சிறிலங்கா தொல்லியல் திணைக்களத்தினால் கொண்டு செல்லப்ட்டது. இந்தியாவில் அஸ்தினாபுரத்திலும் தமிழகம் திருநெல்வேலி காயல் அதிச்சநல்லு}ர் ஆற்காடு செங்கமேடு ஆகியவற்றில் 2800 ஆண்டுகள்தொன்மையான சுடுமண் வளையக் கிணறுகள் எடுக்கப்ட்டன. தற்போது தண்ணிமுறி;ப்பில் கண்டுபிடிக்கப்;பட்ட சுடுமண் வளையக்கிணறு தமிழீழ கல்விக்கழகப் பொறப்பாளர் வெ. இளங்குமரனின் ஒருங்கிணைப்பில் தொல்லியல் தேடலாளர் ந.குணரட்ணம் குழுவினரால் அகழ்வு செய்யப்ட்டது.

இங்கு படங்களில் புதிய கிணறில் சுடுமண் வளையக் கிணறு இருந்ததும் அதன் முழுமையான குறுக்கு வெட்டுத் தோற்றமும், அகழப்பட்டபின்னர் சுடுமண் வளையங்கள் பொருத்தப்பட்ட தோற்றமும், கிராஞ்சிகிணறும், கிராஞ்சிக் கிணறில் தற்போது மக்கள்கட்டிய 8 அடி உயர சீமேந்துக்கட்டு என்பன உள்ளன.

வன்னி கிளிநொச்சி ஆனைவிழுந்தானில் எடுக்கப்பட்ட சுடுமண் சிற்பங்களில் மேலும் எடுக்கப்பட்டவையின் படங்கள் வெளியாகி உள்ளன. மனித உருவங்கள் விலங்கு உருவங்கள் என்பன அவற்றில் உள்ளன.


நன்றி...புதினம்.கொம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 03-10-2004, 04:46 PM
[No subject] - by kuruvikal - 03-10-2004, 04:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)