03-10-2004, 03:30 PM
சந்திரிக்கா அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரங்களின் நோக்கம்...அலசுகிறது...ஈழநாதம்...!
விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்டத்தளபதி பதுமன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்; பதுமன் சுட்டுக்கொல்லப்பட்டார்; கருணாவைப் படுகொலை செய்வதற்காக சொர்ணம் தலைமையில் திருமலைக்கு விடுதலைப் புலிகளின் படைப்பிரிவுகள் அனுப்பப்பட்டுள்ளன என்பன போன்ற தகவல்களே கடந்த சில தினங்களாக சனாதிபதி சந்திரிகாவின் கட்டுப்பாட்டிலுள்ள சிறிலங்கா ஊடகத்துறையின் தலைப்புச் செய்திகளாக இடம் பிடித்துள்ளன.
இத்தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை, வேண்டுமென்றே கூறப்படுபவை என்பனவற்றுக்கு கண்டனம் தெரிவிக்கும் நோக்கில் இப்பத்தி எழுதப்படவில்லை. சனாதிபதி சந்திரிகாவின் கட்டுப்பாட்டினுள் லக்ஸ்மன் கதிர்காமர் அமைச்சராக இருக்கும் ஊடகத்துறை எத்தகைய பொய்களையும் கூறத் தயங்க மாட்டாது என்பது எமக்கு அனுபவம் தந்த பாடம்.
ஆனால், தற்பொழுது இவர்களின் இப்பிரச்சாரம் குறித்து சுட்டிக்காட்டுவதற்குக் காரணம் இவர்களின் பிரச்சாரம் எதனை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பதற்காகவேயாகும். ஏனெனில் இப்பிரச்சாரத்தின் நோக்கமானது வடக்கு-கிழக்கில் பெரும் நெருக்கடிகளுக்கு வித்திடக் கூடியதாகும். அடிப்படையில் இப்பிரச்சாரங்கள் வடக்கு-கிழக்கு தமிழ் மக்கள் இடையில் ஓர் பதட்டமானதொரு நிலையைத் தோற்றுவிக்கத்தக்கவையாகும் அதாவது சகோதரர்களுக்குள் குழப்பத்தைத் தோற்றுவித்து அவர்கள் இருவரையும் பலவீனப்படுத்திவிடும் நோக்கம் கொண்டதாகும்.
அத்தோடு இன்று வடக்கு-கிழக்கில் நிலவும் சமாதான அமைதிச் சூழ்நிலையை முடிவிற்குக் கொண்டுவரும் நோக்கம் கொண்டதாகும். அதாவது வடக்கு-கிழக்கு மக்கள் மத்தியில் முரண்பாட்டையும் அதன் மூலம் பதட்டத்தையும் தோற்றுவித்து தமிழ் மக்கள் மத்தியில் குரோதத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டதாகும். அது மட்டுமல்லாது, விடுதலைப் புலிகளுக்கும் - கருணாவிற்கும் இடையில் இராணுவ ரீதியிலான மோதல்கள் இடம்பெற்றாலோ அன்றி இரு தரப்பினர் இடையிலான முரண்பாடு நீடித்தாலோகூட அது புலிகள் இயக்கத்தை - அதாவது தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பலவீனப்படுத்திவிடும் என்பது அவர்களின் மதிப்பீடாகும். இதன் மூலம் வடக்கிற்கும்-கிழக்கிற்கும் இடையே தெளிவானதொரு முரண்பாட்டைத் தீவிரமாகவும் நிரந்தரமாகவும் ஆக்கிக் கொள்ளுதல் அவர்களின் குறிக்கோளாகும். அவ்வாறு ஆக்கிக் கொள்வதன் மூலம் தமிழரின் தேசியம், தன்னாட்சி உரிமை என்பனவற்றைக் கேள்விக்குள்ளாக் குவதே அவர்களின் நோக்கமாகும். அதாவது, வடக்கு-கிழக்கு இணைப்பு என்ற கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகும்.
சனாதிபதி சந்திரிகா தலைமையிலான கூட்டணியின் நிலைப்பாடானது இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பதற்கு விரோதமானது என்பது ஏற்கனவே உணரப்பட்டதொன்றுதான். ஆயினும், தேர்தல் காலமாகையினால் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்வது பற்றி இக்குழுவும் ஆதரவு தெரிவிப்பவையாகவே உள்ளன. இந்நிலையில், சனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள் அவர்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்று காணத் தயாராகவுள்ளனரா என்ற சந்தேகத்தையே தோற்றுவிப்பதாகவுள்ளது.
அதாவது, அரசின் கட்டுபாட்டிலுள்ள மக்கள் தொடர்பு சாதனங்கள், தமிழ் மக்கள் மத்தியிலுள்ள ஒருமைப்பாட்டைக் குலைக்க முற்படுவதோடு, மட்டு. அம்பாறை பகுதியில் காணப்படும் அசாதாரண நிலையை திருமலைக்கும் விஸ்தரிக்கும் நோக்குடன் செயற்படுவதாகவே தெரிகிறது. இதன் மூலம் வடக்கு-கிழக்கிலுள்ள ஸ்திர நிலையைக் குழப்பத்திற்குள்ளாக்கி அமைதியையும் யுத்த நிறுத்தத்தையும் முடிவிற்கு உள்ளாக்குவதே சனாதிபதியின் நோக்கமாகும்.
அவ்வாறு இல்லாதுவிடில், தகவல்களை நடுநிலைமையுடன் வெளியிடுவதோடு, வடக்கு-கிழக்கோ அன்றி இலங்கையின் ஏனைய பகுதிகளிலோ அமைதிக்குப் பங்கம் ஏற்படாத வகையில் செயற்பாடுகளை மேற்கொண்டிருத்தல் வேண்டும். ஆனால், அரசாங்க ஊடகங்களின் போக்கு விடுதலைப் புலிகளுக்கு எதிரானவையாகவும், அமைதிக்குப் பங்கம் விளைவிப்பவையாகவே உள்ளன. வேறுவிதமாகக் கூறின், தமிழ் மக்கள் இடையில் பிரிவினையை ஏற்படுத்துபவையாகவும், விடுதலைப் புலிகளை யுத்தத்திற்குள் இழுத்துவிடும் நோக்கம் கொண்டவையாகவே உள்ளன.
சனாதிபதி சந்திரிகா தரப்பின் இத்தகைய செயற்பாடானது அவரின் கூற்றுக்களில் இருந்து வெகு தொலைவில் உள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, வெளிநாட்டவர் இதனை விளங்கிக் கொள்ள முற்பட வேண்டும். ஏனெனில் இனியொரு யுத்தம் மூழுமாக இருந்தால் அதற்கு சனாதிபதி சந்திரிகாவின் செயற்பாடே காரணமாக இருக்க முடியும். இதனைச் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்கூற வேண்டிய தேவையும், அவசியம் இன்று எங்களுக்குண்டு.
நன்றி தமிழ்நாதம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>