03-10-2004, 02:24 PM
கருணாவுடன் தொடர்பு வைக்காதீர்! அரசுக்கு அறிவிக்க புலிகள் முடிவு!!
நேர்வே மூலம் உத்தியோக பூர்வமாக இன்று அல்லது நாளை தெரிவிக்கப்படும்
தமது அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள கருணாவுடன் பேச்சுக் களோ, தொடர்புகளோ வைப்பதைத் தவிர்த்துக்கொள்ளும்படி இலங்கை அரசைக் கோருவதற்குத் தீர்மானித்திருக்கின்றார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்.
புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் நேற்று உதயனுக்கு இத்தகவலைத் தெரிவித்தார்.
கிழக்கில் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது என்று இராணுவத் தள பதி லெப்டினன்ட் ஜெனரல் லயனல் பலகல்ல கூறியிருக்கின்றார். கிழக்கில் தற்சமயம் ஏற்பட்டுள்ள நிலையில் கரு ணாவின் பாதுகாப்புடன் தொடர்புபட்ட விடயமாக இந்த முடிவு இருக்குமா? என்று கேட்கப்பட்டபோதே தமிழ்ச் செல்வன் மேற்கண்ட தகவலை வெளி யிட்டார். இக்கேள்விக்கு அவர் கூறிய பதில் வருமாறு:-
எங்களுக்கும் சில சந்தேகங்கள் இருக்கின்றன. அதிகாரபூர்வமாக அரசோ, அங்குள்ள இராணுவத் தள பதிகளோ கருணாவுடன் எந்தவித இணக்கப்பாட்டுக்கும் வந்ததாகத் தெரியவில்லை. இதை நோர்வே அனு
சரணையாளர்களும், சர்வதேசத் தரப் பும், அரசும் உறுதிப்படுத்தியுள்ளன.
ஆனால், இராணுவத்தின் சில சக்திகளினதும் சில பகுதியினரதும் ஆதரவைக் கருணா பெறுகிறார் எனத் தற்சமயம் எமக்குத் தகவல் கிடைத் துள்ளது.
இது சம்பந்தமாகப் படைத் தரப் புக்கும் அரசுக்கும் அறிவிக்கவிருக் கிறோம். கருணாவுடன் பேச்சுக்களோ, தொடர்புகளோ வைப்பதைத் தவிர்த் துக்கொள்ளும்படி நாளை (இன்று புதன் கிழமை) அல்லது நாளைமறுதினம் (நாளை வியாழன்) அரசையும், படைத் தரப்பையும் உத்தியோகபூர்வமாகக் கோரவிருக்கின்றோம்|| - என்றார் தமிழ்ச்செல்வன்.
நாளை தங்களைக் கிளிநொச்சி யில் சந்திக்கும் நோர்வேயின் விசேட அனுசரணையாளர் எரிக் சொல்ஹெய்ம் மூலம் இத்தகவலை புலிகள், அரசுக் குத் தெரிவிக்கக்கூடும் எனக் கருதப் படுகின்றது.
விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல் வன் உதயனுக்கு அளித்த செவ்வி யின் விவரம் வருமாறு:-
கேள்வி: கருணாவுக்கு பொது மன்னிப்பு வழங்கப் போகிறீர்கள் என்று வெளிவந்த செய்திகள் குறித்து....?
பதில்: கருணா பல தவறுகளைச் செய்துள்ளார். தலைமைப்பீடம் அவற்றை இன்று உறுதிசெய்துள்ளது. கடந்த ஒரு மாதகாலத்துக்கு முன் னர் அவர் தொடர்பாகக் கிடைத்த முறைப்பாடுகள் குறித்து விசாரிக்க அவரை வன்னிக்கு அழைக்கத் தலை மைப்பீடம் முயற்சி எடுத்தது. அவரை வன்னிக்கு வரும்படி தேசியத் தலை வர் அழைத்திருந்தார். தனது குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுவிடும் என்ற பயத்தினால்தான் அப்போது கருணா வராமல் இருந்தார்.
இந்தப் பயப்பீதி காரணமாகப் பிரிந்து சென்று தலைமைப்பீடத்துக் குச் சவால்விட முயற்சித்தார். அத்து டன், அங்கிருந்த எமது தளபதிகளும், பொறுப்பாளர்களும் வன்னி வந்து தலைவரைச் சந்திப்பதையும் அவர் தடுத்துக் கொண்டிருந்தார். இந்தச் சூழ்நிலையில் அவர் பிரிந்துபோகி றார் என்ற செய்தியுடன் தளபதிகளும் பொறுப்பாளர்களும் அவரை உதறித் தள்ளிவிட்டு போராளிகளிடம் வாக்கு றுதிகொடுத்துவிட்டு இங்கு வந்து விட்டார்கள். அவருக்கு அடுத்த நிலை யில் இருந்த சகல தளபதிகளும் இங்கு வந்துவிட்டார்கள்.
கருணாவின் குற்றச்செயல்கள், செயற்பாடுகள் ஆகியவை தொடர்பான விவரங்களைத் தலைமைப்பீடத்திடம் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். கரு ணாவின் தவறுகள் உறுதிசெய்யப் பட்ட நிலையில் எமது தலைமைப் பீடம் அவரை புலிகள் அமைப்பிலி ருந்து நீக்கியுள்ளது.
இந்நிலையில்தான், மனிதாபிமான நோக்கோடு நல்லெண்ண நடவடிக்கை யாக கருணாவுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவர் விலகிச்செல்வதற் கும் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதற் கும் உத்தரவாதம் தருவதாகக் கூறி யுள்ளோம். எமது தலைவரின் மனி தாபிமான நல்லெண்ண நடவடிக் கையே இதுவாகும்.
கேள்வி: கருணாவுக்குப் பொது மன்னிப்பு சர்வதேச உத்தரவாதத்து டன் வழங்குவதாகக் கூறிள்ளீர்கள். அதுகுறித்து...?
பதில்: பொதுமன்னிப்புக் குறித்து அவருக்குச் சந்தேகம் இருந்தால் சர்வ தேச உத்தரவாதம் கொடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். சர்வதேச உத்தரவாதம் தேவை எனக் கோரினால் அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்வோம்.
கேள்வி: கிழக்கில் ஹர்த்தால், ஊர்வலங்கள் என்று கருணாவுக்கு ஆதரவாக நடக்கின்றன என்று கூறப் படுகிறது. எனவே அதுபற்றி...?
பதில்: கருணாவின் சில அடியாள் கள் மற்றும் அவரது கிராமத்தில் உள்ள உறவினர்கள் போன்றோரை வாகனங்களில் ஏற்றிவந்து அச்சுறுத் தல் விடுத்துக் ஹர்த்தால், ஊர்வலம் என்று நடத்துகிறார். பெரிய அளவில் லட்சக் கணக்கான மக்கள் கூடி ஹர்த் தாலையோ ஊர்வலத்தையோ நடத்த வில்லை. குறிப்பிட்ட சிலர்தான் இதில் பங்கேற்கின்றனர்.
மட்டக்களப்பில் இருந்து வன் னிக்கு வந்து எம்மைச் சந்தித்த பேரா யர் மற்றும் புத்திஜீவிகள் கருணா வின் செயற்பாடுகளை வெறுத்துத்தான் இருக்கிறார்கள்.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட மக்களுக்குத் தவறான செய்திகளை, தகவல்களை ஊட்டி, பிரதேசவாத உணர்வுகளைத் திணித்து, உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தி சுயலாபம் பெறக் கருணா முனைந்திருக்கிறார். உண்மைநிலையை அங்கு விளக்கி வருகின்றோம். பிரதேச வாதத்தாலோ, வேறு எதனாலோ கருணா பழிவாங்கப் படவில்லை என்பதை அங்குள்ள மக் கள் உணரத் தொடங்கிவிட்டனர். அவ ரது அநியாயங்கள், அத்துமீறல்கள், தேசியத் தலைமைக்கும் விடுதலைப் போராட்டத்துக்கும் செய்த துரோகங் கள் ஆகியவற்றை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர்.
தமிழ்த் தேசியம் ஒன்றுபட்டு பல மடைந்த நிலையில், தமது பலத்தை வெளிக்காட்டிநிற்கும் நிலையில் அவர் வெளிக்காட்டியுள்ள மிகமோச மான செயலை மக்கள் புரிந்துகொண்டு மாறிவருகிறார்கள். இப்போது நிலைமை சீராகிவருகின்றது.
கேள்வி: கருணா தொடர்பாக எழுந் துள்ள நெருக்கடி குறித்து சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு என்ன?
பதில்: சர்வதேச சமூகத்துக்கு விவரமாகத் தெளிவாக விளக்கியுள் ளோம். ஷஷஇது ஒரு தனிமனிதனுடன் தொடர்புபட்ட பிரச்சினை. எமது விடு தலைப் போராட்ட வரலாற்றில் தனி மனிதன் விடும் தவறுகள் மற்றும் குற் றச்சாட்டுகளுக்கு ஏற்ப ஒழுங்கு நட வடிக்கை எடுப்பது வழமையான நடை முறையாகும். ஆனால், சமாதானச் சூழ லில் நிலவுவதால் ஒருவர்மீது மேற் கொள்ளப்படும் ஒழுங்கு நடவடிக்கை பெரிய செய்தியாகத் தோற்றமளிக் கிறது. அவ்வளவுதான். இது பாரிய பிரச்சினை இல்லை. எமது தலைவர் நிலைமையைச் சுமுகமாகக் கட்டுப் பாட்டுக்குக் கொண்டு வருவார்|| என்று சர்வதேச சமூகத்துக்குத் தெளிவா கக் கூறியுள்ளோம். ஆகவே, சர்வதேச சமூகம் எம்மீது நம்பிக்கையுடன் இருக் கிறது.
கேள்வி: புரிந்துணர்வு உடன்படிக் கையைத் தம்முடனும் செய்து கொள் ளும்படி கருணா கூறுகிறார். அது பற்றி...?
பதில்: ஒரு தனிமனிதனுடன் எப் படிப் புரிந்துணர்வு உடன்படிக்கை யைச் செய்துகொள்வது? உலகில் இப்படியான நடைமுறை இருந்ததாக நாம் கேள்விப்படவில்லை. தன்னை அறியாமல் சில செய்திகளை அவர் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். உண்மையில் நகைப்புக்கிடமான விடயம் இது.
கேள்வி: பிரிட்டி~; து}தருடன் கிழக்குநிலை பற்றிப் பேசுவீர்களா?
பதில்: கிழக்குப் பிரச்சினை தொடர் பாக அவருக்கும் கரிசனை இருந் தது. அவருக்கு உண்மை நிலைப்பாட் டைக் கூறித் தெளிவாக்கியுள்ளோம்.
கேள்வி: மட்டக்களப்புக்கு 500 பேர் கொண்ட படையணியை அனுப்பி யுள்ளீர்கள் என்று வெளிவரும் செய்தி களில் உண்மையுண்டா?
பதில்: இல்லை. தேசியத் தலைவர்மீது விசுவாசம் கொண்ட ஆயிரக் கணக்கான போராளிகளின் அணிகள் அங்கேயே இருக்கின்றன. அதனால் இங்கிருந்து அனுப்பவேண்டிய அவசியம் இல்லை.
- இவ்வாறு தமிழ்ச்செல்வன் பதிலளித்தார்.
நன்றி - உதயன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>