Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
'லெஸ்பியன்' 2 அமெரிக்க தமிழ்ப் பெண்கள்
#1
'லெஸ்பியன்' உறவு: திருமண சான்றிதழ் கோரும் 2 அமெரிக்க தமிழ்ப் பெண்கள்

வாஷிங்டன்:

திருமணம் செய்து கொண்டுள்ள இரு லெஸ்பியன் பெண்கள், தங்களுக்குத் திருமணச் சான்றிதழ் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இருவரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இவர்களுக்கு திருமணச் சான்றிதழ் தர வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள கிங் கௌண்ட்டி பதிவகம் மறுத்ததையடுத்து நீதிமன்றத்தில் அவர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

அமெரிக்காவில் வசித்து வரும் தமிழ்ப் பெண்களான வேகவாஹினி சுப்பிரமணியமும் ('வேகா') வைஜெயந்திமாலா நாகராஜனும் ('மாலா') 1996ம் ஆண்டு இணைய தளம் மூலம் சந்தித்துக் கொண்டனர். இருவருமே தமிழர்கள் என்பதால் முதலில் நெருங்கிப் பழகியதாகவும், பின்னர் இருவருக்குமே ஓரினச் சேர்க்கையில் ஆர்வம் இருந்ததால் 'காதலிக்க' ஆரம்பித்தாகவும் கூறுகின்றனர்.

திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த இருவரும் ஒலிம்பியா நகரத்திலிருந்து சியாட்டில் நகரத்துக்கு 2000ம் ஆண்டு குடிபெயர்ந்தனர். அங்கு ஒரு வீட்டை வாங்கி இருவரும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந் நிலையில் 2002ம் ஆண்டு இருவரும் இந்து மதப்படி புரோகிதரை வைத்துத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், முறைப்படி தங்களை தம்பதிகளாக அங்கீகரித்து திருமணச் சான்றிதழ் அளிக்கும்படியும் விண்ணப்பித்தனர்.

அமெரிக்க சட்டப்படி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை தாங்களும் பெற விரும்புவதாக விண்ணப்ப மனுவில் குறிப்பிட்டிருந்தனர். ஆனால் இவர்களின் கோரிக்கையை கிங் கௌண்டி பதிவகம் நிராகரித்துவிட்டது.

இதனையடுத்து தங்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாகக் கூறி, அமெரிக்க அரசுக்கு எதிராக வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இதில் வேகா, தெற்காசிய சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்க்கும் ஒரு சமூக நல அமைப்பிலும், மாலா ஒரு சாப்ட்வேர் என்ஜினராவார்.

சமீபகாலமாக அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கை திருமணங்கள் அதிகரித்து வருவதும், அது குறித்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கவலை தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. லெஸ்பியன் உறவின் இரு தமிழ்ப் பெண்களும் சிக்கியிருப்பதும், அதை அவர்கள் வெளிப்படையாகவே சொல்லி வழக்குப் போட்டுள்ளதும் பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.

tnx:thatstamil.com
:x :oops: :roll:
Reply


Messages In This Thread
'லெஸ்பியன்' 2 அமெரிக்க த - by anpagam - 03-10-2004, 11:52 AM
[No subject] - by Paranee - 03-10-2004, 01:17 PM
[No subject] - by manimaran - 03-10-2004, 02:19 PM
[No subject] - by kuruvikal - 03-10-2004, 02:48 PM
[No subject] - by anpagam - 03-11-2004, 12:33 AM
[No subject] - by kuruvikal - 03-11-2004, 12:37 AM
[No subject] - by கண்ணன் - 03-11-2004, 12:47 PM
[No subject] - by kuruvikal - 03-11-2004, 01:03 PM
[No subject] - by sOliyAn - 03-11-2004, 01:36 PM
[No subject] - by Mathan - 03-11-2004, 03:07 PM
[No subject] - by kuruvikal - 03-11-2004, 03:27 PM
[No subject] - by TMR - 03-11-2004, 05:13 PM
[No subject] - by kuruvikal - 03-11-2004, 05:46 PM
[No subject] - by TMR - 03-11-2004, 05:52 PM
[No subject] - by kuruvikal - 03-11-2004, 06:09 PM
[No subject] - by vasisutha - 03-11-2004, 10:30 PM
[No subject] - by anpagam - 03-12-2004, 01:14 AM
[No subject] - by sOliyAn - 03-12-2004, 01:25 AM
[No subject] - by TMR - 03-12-2004, 09:57 PM
[No subject] - by shanmuhi - 03-13-2004, 06:58 AM
[No subject] - by yalie - 03-15-2005, 03:16 AM
[No subject] - by KULAKADDAN - 03-15-2005, 12:11 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)