03-10-2004, 11:27 AM
கருணா பற்றி ஈழநாதத்தின் பார்வை....!
கருணா தமிழீழத் தேசியத் தலைவருடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர். நம்பிக்கைக்கும் பாத்திரமாகவும் இருந்தவர். அதுமட்டுமல்ல தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களிடம் இருந்து ஏனைய தளபதிகள், பொறுப்பாளர்கள் ஆகியோரைவிட அதிகபட்ச அதிகாரங்களையும் பெற்றுக் கொண்டிருந்தவர். இவ்வாறாக தலைமையுடன் நெருக்கமான உறவையும், தொடர்பையும் கொண்டிருந்த கருணா கிழக்கிற்கு அதிக பிரதிநிதித்துவத்தை ஏன் தலைவரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளவில்லை.
அதுமட்டுமல்ல, அவ்வாறு பேசித்தீர்வு காணமுடியாது என்ற முடிவிற்கு கருணா வருவதற்கு இத்தகைய கோரிக்கைகள் எதுவும் இதற்கு முன்னர் கருணாவினால் முன்வைக்கப்பட்டு தலைவரினால் நிராகரிக்கப்ட்டதுண்டா? அன்றி வேறு யாராவது இத்தகைய கோரிக்கையை முன்வைத்த போது அது தேசியத் தலைவரினால் நிராகரிக்கப்பட்டதாகவோ அன்றி கருத்திற் கொள்ளப்படாமலோ விடப்பட்டது என கருணாவிற்கு ஏதாவது தகவல் தான் கிடைத்ததுண்டா?
சரி தலைவருடன் நேரடியாக தனது இக்கோரிக்கைகளை முன்வைக்க விரும்பவில்லையென எண்ணியிருப்பின் ஏனைய தளபதிகளையாவது அனுப்பி தலைவரிடம் இக்கோரிக்கையை முன்வைத்திருக்கலாமல்லவா? தற்பொழுது மட்டு-அம்பாறை மக்களின் உணர்வுகளையே தாம் பிரதிபலிப்பதாகத் கூறும் கருணா, மக்களின் உணர்வுகள் இவ்வாறிருக்கின்றன அதற்குத் தீர்வு காணப்படுதல் வேண்டும் என தனது தளபதிகளிடம் விடயத்ததைக் கூறியாவது தலைவரிடம் அனுப்பி வைத்திருக்கலாமல்லவா?
செய்தி ஊடகங்கள் மூலம் தனித்துச் செயற்படப் போவதாக அறிவிப்புச் செய்துவிட்டு, தனது துரோகத்தனமான செயற்பாட்டிற்கு பிரதேச வாதத்தைக் கிளப்புவதும், மக்களை பகடைக் காய்களாவும் போராளிகளையும் பலிக்கடாக்கள் ஆக்கும் எந்த வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ளுவதும் எப்படி ஏற்புடையதாக இருக்க முடியும்? இது கருணா விடுதலைப் புலிகளுக்கு செய்த துரோகமாக மட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கும் செய்த துரோகமாகக் கொள்ளாது வேறு எவ்வாறு கொள்ள முடியும்?
இது ஒருபுறம் இருக்க அண்மைக் காலத்தில் தலைவர் பிரபாகரனால் அழைக்கப்பட்டும் வன்னிக்குச் செல்ல கருணா தயாராக இருக்கவில்லை. இதனை அவரே ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். தான் வன்னிக்குச் சென்றிருப்பின் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் எழுப்புகின்றார். இதில் உள்ள முக்கியமான வினா என்னவெனில் அவர் அத்தகைய முடிவிற்கோ சந்தேகம் கொள்வதற்கோ காரணம் என்ன?
அதாவது தலைவர் பிரபாகரன் அவர்களுடன் தனக்கு ஏற்கனவே முரண்பாடு இருந்ததாக அவரே கூறவில்லை. தலைவர் பிரபாகரன் இவரின் செயற்பாடுகள் எவற்றிக்கும் முட்டுக்கட்டை போடவும் இல்லை. அவரை கட்டுப்படுத்தும் வகையில் அறிவிப்புக்கள் எதையும் விடுக்கவுமில்லை. அவரின் பொறுப்புக்கள், பதவிகள் எதையும் பறிக்கவும் இல்லை. அதுமட்டுமல்ல பேச்சுவார்த்தைகளில் அவர் தொடர்ச்சியாக கலந்துகொள்ள தடையும் விதிக்கவில்லை.
அவ்வாறிருந்தும் கருணா ஏன் தலைவர் பிரபாகரன் அவர்களின் அழைப்பை ஏற்று வன்னி செல்லவில்லை? வன்னி சென்றால் தாம் தடுத்து வைக்கப்படுவோம் என்ற சந்தேகம் ஏன்வந்தது? அதாவது முரண்பாடோ அன்றிக் குற்றங்களோ அற்றவராக இருப்பின் அவர் ஏன் இத்தகைய சந்தேகம் கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டது?
மாறாக விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தினால் கருணா அமைப்பிலிருந்து நீக்கப்படும் வரை அவர் மீது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டோ அன்றி தனிப்பட்ட நடத்தைகள் தொடர்பான குற்றச்சாட்டோ சுமத்தப்படவில்லை. அவர் தமிழீழ தேசியத் தலைவருக்கும், மக்களுக்கும் துரோகம் இழைத்தாகவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக கருணா பிரிந்து செல்வது தொடர்பான செயற்பாட்டின் மீதே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது கருணா மீதான நடவடிக்கை அண்மைய அவரின் செயற்பாட்டின் விளைவு மட்டுமே.
ஆகையினால், கருணா மடியில் கனமில்லை எனின் தேசியத் தலைவர் பிரபாகரனைச் சந்தித்திருக்க முடியும். தனது கோரிக்கையை முன்வைத்திருக்க முடியும். தமது மக்களின் அபிலாசைகள் இவை என கூறியிருக்க முடியும்.
ஆனால், கருணா அவ்வாறு நடந்து கொள்ளாது இயக்க விதிகளுக்கும், ஒழுங்குகளுக்கும் மாறுபட்ட விதத்தில் நடந்து கொண்டுள்ளார். அர்த்தமற்றதும், உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதோடு பொய்யான தகவல்களையும் வெளியிடுபவராக உள்ளார். தனது தனிப்பட்ட ரீதியிலான தான்தோன்றித்தனமான முடிவுகளுக்கு மக்களைச் சாட்டாக்கிக் கொள்ள முனைகிறார்.
கருணாவின் இச்செயலானது தமிழ் மக்களுக்குப் பெரும் வேதனையையும், துயரத்தையும் அளிப்பதாகியுள்ளது. சிங்களப் பேரினவாத சக்திகள் ஒன்றுதிரண்டு தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை தோற்கடிக்க வேண்டும் என முனைப்புடன் தேர்தலில் இறங்கியுள்ள நிலையில், கருணாவின் நடவடிக்கையானது தமிழ் மக்கள் இடையில் பிளவுகளையும் அவநம்பிக்கைகளையும், தோற்றிவிப்பதாகவும் மாறியுள்ளது.
தமிழ் மக்கள் தமது தேசியம் பற்றிய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பினும்கூட, கருணாவின் நடவடிக்கை தமிழ் தேசியத்திற்கு ஊறு விளைவிக்கும் ஒன்றே ஆகும்.
நன்றி தமிழ்நாதம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>