03-10-2004, 03:39 AM
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மக்கள் வாக்களிப்பதற்கு இணக்கம்
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்கள் வாக்களிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பில் சில இணக்கப்பாடுகள் காணப்பட்டுள்ளன.
இதன்படி, யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்கள் இம்முறை தேர்தலில் வாக்களிப்பதற்கு வசதியாக, முகமாலை சிறீலங்காப் படைச் சோதனைச் சாவடியை 500 மீற்றர் பின்னகர்த்துவதற்கு குடாநாட்டுப் படைத்தளபதி மேஐர் ஜெனரல் சுசில் சந்திரபால இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், யுத்த சூனியப் பிரதேசத்தின் அளவு அதிகரிப்பதால், இப்பகுதிக்குள் வாக்களிப்பு நிலையத்தை அமைப்பதன் மூலம், மக்கள் அதிக சிரமங்கள் இன்றி வாக்களிப்பில் கலந்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, தேர்தலில் வாக்களிக்க வரும் பொதுமக்களை தாமதிக்கச் செய்யும் வகையில், படையினர் சோதனை நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளமாட்டார்கள் எனவும், குடாநாட்டுப் படைத்தளதி உறுதியளித்துள்ளார்.
யாழ் மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலருடன் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது இவ்விதமிருக்க, மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த சூனியப் பிரதேசத்தில் வாக்களிப்பு நிலையத்தை அமைப்பது தொடர்பாக ஆராய்வதற்கான கலந்துரையாடலொன்று மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மோனகுருசாமி தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது, புலிகளது கட்டுப்பாட்டுப் பகுதி மக்கள் வாக்களிப்பதற்கான வாக்களிப்பு நிலையங்களை யுத்த சூனியப் பிரதேசத்தில் அமைப்பது தொடர்பாக ஆராயப்பட்ட போதிலும், அதற்கு ஈ.பி.டி.பி., ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியன எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
யுத்த சூனியப் பிரதேசத்தில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டால், தேர்தல் மோசடிகள் இடம்பெறலாம் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர்கள் இந்தச் சந்திப்பில் தெரிவித்தனர்.
எனினும், இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பி.கிருஷ்ணானந்தலிங்கம், இந்த விவகாரம், மட்டக்களப்பு மாவட்டத்தோடு மட்டும் சம்பந்தப்பட்ட ஒரு சிக்கலல்ல என்றும், மொத்தமாக நான்கு தேர்தல் மாவட்டங்களில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்படவேண்டியிருப்பதால், இதுதொடர்பாக தேர்தல் ஆணையாளரே உரிய முடிவை எடுப்பார் என்றும் தெரிவித்தார்.

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>