03-10-2004, 02:07 AM
nalayiny Wrote:[quote=nalayiny][quote=nalayiny]சரி பிரதேச வாதம் பிரதேச வாதம் எண்டிறியள் ஆர் அதை வளற்தது? என ஆராய்து சொல்லுங்கோ பாப்பம் .
<span style='color:red'>சரி கதையோடை கதையாய் இதை விட்டிடாதேங்கோ. நான் கேட்ட கேள்விக்கு பதில் தாங்கோ ஆரும்.
[size=14]இது என்னோட தனிப்பட்ட கருத்து. மக்களில் ஒரு பகுதியை குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தோட இணைத்து அவர்களை ஒரு தனிக் குழுவா காட்ட முயற்சி செய்வது பிரதேசவாதம். அந்த தனிக்குழுவுக்கு தனியான மொழி, பேச்சு நடை (மொழியை பேசும் விதம்), கலாச்சாரம், மதம், பழக்கவழக்கம் இதில் ஏதாவதோ இல்லை அனைத்துமோ இருக்கலாம். உதாரணத்துக்கு யாழ்ப்பாண தமிழன், வன்னி தமிழன், கொழும்பு தமிழன், மலையக தமிழன், இலங்கை தமிழன், இந்தியத் தமிழன், தீவான், வடமராச்சியான், வலிகாமத்தான், கண்டி சிங்களவன் இன்னும் நிறைய இருக்கின்றது இவை எல்லாமே பிரதேசவாதம் தான். ஒரு பொது பிரைச்சனை என்று வரும்போது அதனோட தன்மையை பொறுத்து மக்கள் எல்லோஒருமே வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவார்கள். அந்த பிரச்சனை தீர்ந்தவுடன் இல்லை அது ஓய்ந்திருக்கும் போது அவர்களுடைய தனி தன்மைகள்கள் அல்லது வேறுபாடுகள் தலை தூக்கும், இது இயல்பானதுதான். இப்போது தமிழர் சிங்களவர் சண்டை என்று நடக்கும்போது இரண்டு பக்கமும் மொழிவாரியா ஒன்றுபடுவாங்க. அவங்களுக்கு இடையிலே உள்ள வேறுபாடுகள், பிரைச்சனைகள், தனிதன்மைகள் வெளியே தெரியாது. அவர்கள் பொது எதிரிக்கு எதிரா ஒன்றுபடுவார்கள். ஆனால் அந்த பிரைச்சனை ஓயும்போது மற்ற வேறுபாடுகள் இரண்டுபக்கமும் தலைகாட்டும்.
உதாரணமாக இந்தியாவில் எத்தனையோ பிளவுகள்/பிரிவுகள் இருக்கின்றது. ஆனால் கார்கில் சண்டை வந்தபோது அவர்கள் அதை மறந்து எல்லோரும் ஒன்றாக பொது எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரா போரடினார்கள். அப்போது பிளவுகள் இல்லாமல் போகவில்லை. அது அப்படியே தான் இருந்தது. ஆனா அந்த வேறுபாடுகள் எல்லாம் கார்கில் பிரைச்சனையோட ஒப்பிடும்போது முக்கியமில்லாததாக இருந்ததால மக்கள் அதை ஒதுக்கியிருந்தார்கள். கார்கில் யுத்தம் முடிந்ததும் அவை எல்லாம் மீண்டும் தலை தூக்கிவிட்டது. இதை நாம் உலகத்தில எங்கேயும் பாக்கலாம். இந்த அளவிற்கு மோதிக்கொள்கின்ற பாகிஸ்தானும் இந்தியாவும் நாளைக்கே உலகத்து இன்னொரு கிரகத்தில இருந்து ஒரு பொது எதிரியால சண்டை வந்தால் சேர்ந்துதான் போராடுவார்கள்.
இந்த வேறுபாடுகள் எல்லாம் அதன் முக்கியத்துவத்தை பொறுத்து வெளியில் வரும். மற்றப்படி இல்லாமல் இல்லாமல் மனிதர்கள் இல்லை. எல்லோரும் சக மனிதர்கள் நமக்கு இருக்கின்ற உரிமை மற்றவர்களுக்கும் இருக்ககின்றது என்று நினைத்து சக மனிதனா நடத்தினால் இந்த பிரைச்சனை தீரும் அல்லது குறையும். அது ஆண்கள்/பெண்கள் அல்லது தமிழன்/சிங்களவன் எந்த பிரைச்சனையாக இருந்தாலும் சரி.
என்னை பொறுத்தவரை நாம் எல்லோரும் மனிதர்கள். அவர்கள் எந்த்வகையிலும் பிளவுபடுவதை நான் விரும்பவில்லை. ஆனா மற்றவர்களை சக மனிதனாக நடத்தாதபோது அடக்குமுறைக்கு உள்ளாக்கும்போது பிரிவினை ஆரம்பமாகின்றது. அதற்கு பின்பு என்ன நடக்கும் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். வேறுபாடுகள் தீவிரமாகிவிட்டால் பிரிந்துவாழ்வது தவிர்கமுடியாமல் போய்விடும். சேர்வதோ பிரிவதோ அவரவர் விருப்பம்.
கூடி வாழந்தால் கோடி நன்மை
</span>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

