03-10-2004, 12:55 AM
<b>புலனாய்வுப்பிரிவு கம்பன் மாஸ்ரர் கருணா குழுவால் தாக்கப்பட்டுள்ளார்</b>
நேற்று மீனகம் வளாகத்தில் நடைபெற்ற போராளிகளுக்கான பொதுக்கூட்டத்தில் தளபதி றாபட்அவர்களை கருணா என்ற முரளீதரன் மிகவும் இம்சைப்படுத்தியுள்ளார். மீனகம் வளாகத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த கூடலில் றாபட்டிடம் தலைவரின் படத்தைக்கொடுத்துக் கிழித்தெறியும்படி உத்தரவிட்டுள்ளார். தளபதி றாபட் தலைவரின் படத்தைக் கிழிக்க மறுத்து கண்ணீர் சிந்தி நிற்க அந்தக்கூடலில் உரையாற்றுமாறு பணித்துள்ளார். அதையும் மறுத்த றாபட் கருணாவினால் மிகவும் இம்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். மீனகத்தில் தற்போது நிலமைகள் நிமிடத்துக்கு நிமிடம் பதட்டமடைந்து கொண்டு இருக்கிறது.
கருணாவினால் ஜீவேந்திரன் தலைமையில் மீனகத்திலிருந்த போராளிகளை உள்ளடக்கிய படையணியொன்றினை கொக்கட்டிச்சோலை பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தப்பகுதிக்குள் நுளைகின்ற விடுதலைப்புலிகளைத் தாக்குமாறு கட்டளையும் பிறப்பிக்கப்பட்டு ஜீவேந்திரன் தலைமையிலான படையணி கொக்கட்டிச்சோலையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
வாகரைப்பக்கத்துக்கு தாத்தா தலைமையிலான படையணியொன்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கருணாவின் விசுவாசியாகக் கருதப்பட்ட புலனாய்வுப் பிரிவுப்போராளி கம்பன்மாஸ்ரர் உட்பட சிலதொகையான போராளிகள் மீனகத்தை விட்டுத் தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது கம்பன் மாஸ்ரருடன் புறப்பட்ட போராளிகள் தப்பிச் சென்றுள்ளார்கள். ஆனால் கம்பன்மாஸ்ரர் கருணா குழுவினரால் பிடிக்கப்பட்டு கால் கை அடித்து முறிக்கப்பட்டுச் சிறையிடப்பட்டுள்ளார். கம்பன் மாஸ்ரரைத் திருமணம் முடிக்கவிருந்தவர் பெண்போராளி காயா ஆவார். தற்போது கம்பன் மாஸ்ரருக்கு நிகழ்ந்த இந்த சம்பவத்தை பார்த்த காயாவும் இந்தச்சுூழ்நிலைக்குள்ளிருந்து தப்பிக்க முடியாது சந்தர்ப்பவசத்தால் அடைபட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. காயா தற்போது சுூழ்நிலைக்கைதியாகியிருக்கிறார்.
வந்தாறுமூலை பல்கலைக்கழக பிறமாவட்டத்து மாணவர்களை வெளியேற்றத்துக்கு முன்னணியாக கருணாவால் நியமிக்கப்பட்ட ஏகாந்தன் கல்விக்கழகப்பொறுப்பாளர் கேசவன் ஆகியோர் இன்று அங்கிருந்து தப்பித்துப் பிறமாவட்டங்களுக்குச் சென்றுவிட்டார்கள். நிலமைகளின் மோசத்தைப் புரிந்து கொண்டு இவர்கள் தப்பித்துள்ளார்கள்.
இன்று இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் மத்தியானச்செய்தியில் தளபதி பதுமன் கொலைசெய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று பதுமன் தனது குரலில் தான் தலைவரைச் சந்திக்க வளமைபோல் வருவதாகவே வன்னி வந்திருப்பதாகத் தெரிவித்ததை பீபீசி தமிழோசை ஊடாக யாவரும் கேட்டோம் என்பது உண்மை. பதுமன் கொல்லப்படவில்லை என்பதும் உண்மை. இதில் விந்தை என்னவெனில் பீபீசி தமிழோசை இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் ஊடாகவும் இலங்கையில் ஒலிபரப்பரப்பாவதை மறந்து இப்படியானதொரு பொய்யான தகவலை இன்று வெளியிட்டுள்ளது. இதிலிருந்து கருணாவின் துரோகத்தனத்துக்கு எவ்வாறு மூன்றாந்தரப்பு ஊடுருவல் இல்லையென்று நம்மால் நம்ப முடியும் ?
மட்டக்களப்பு ஆஞ்சநேயா காட்வெய கடையும் புூட்டப்பட்டுள்ளது. தனது தமிழ்அலையில் பத்திரிகையில் கருணா குறிப்பிட்டுள்ளார் தான் பிறமாவட்டத்தார் யாரையும் வெளியேற்றவில்லையென்று. ஆனால் இக்கடை புூட்டப்பட்டிருப்பதை நாம் கண்ணு}டு கண்டுள்ளோம்.
ஆஞ்சநேயா காட்வெய உரிமையாளர் கடந்த இரண்டு வருடத்துக்குள் அதாவது யுத்தநிறுத்தம் நிலவிய காலப்பகுதிக்குள் கருணாவின் நிதிப்பிரிவுக்கு 10கோடிரூபா கொடுத்திருப்பதாகவும் அறியப்படுகிறது. இத்தகைய பெரும் கடைகளை , கடையுரிமையாளர்களை வெளியேற்றும்படி முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்க்கட்சிக்கூட்டமைப்பின் வேட்பாளருமான இராஜன் சத்தியமூர்த்தியை வைத்தே கருணா இத்தகைய வெளியேற்றங்களைச் செய்யுமாறு பணித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்னும் செய்திகள் தொடரும்....
- புளியம்தீவிலிருந்து முகுந்தன் -
tamilwebradio.com [/b]

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>