03-10-2004, 12:34 AM
BBC Wrote:இராவணன் Wrote:குறிப்பிட்ட ஒரு தளம் என்ன காரணத்திற்காக இங்கு நீக்கப்பட்டதோ அதை இங்கு செய்திகளின் மறு பிரசுரமாக செய்ய வேண்டாம்.
மோகன், இராவணன் மற்றும் தணிக்கை அதிகாரிகள்,
செய்திகள் தணிக்கை செய்வதை பொறுத்தவரை எனக்கு ஆட்சேபணை கிடையாது. ஏன் அவை எனது சொந்த கருத்துக்கள் அல்ல. அவற்றிற்கு வெளியிட்ட செய்தி நிறுவனங்கள் தான் பொறுப்பு. பிரபல்யமான செய்திநிறுவனங்களின் செய்திகளை தான் இங்கு போடுகின்றேன். இது உங்கள் சொந்த இணையத்தளம் என்பதால் அவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளாத போது அவற்றை தணிக்கை செய்து கொள்ளலாம். நீங்கள் தடை செய்த இணையதளதில் இருந்து எந்த செய்தியையும் நான் இங்கே போடவில்லை. அங்க செய்தி BBC (பிரிட்டிஷ் செய்தி நிறுவனம்) வெளியிட்டது.
இக்களமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தணிக்கை பற்றி என் தாழ்வான கருத்து.....
தணிக்கை என்பது தரம் பற்றிய வினாவுதல்!!!!!!!!!!!!!!!
ஒருவகையில் தியாக வினை அது!!!!!!!!!!!!!!
ஆம் பயனற்றதை வடித்து எடுத்துவிடும் வேள்வி அது!!!!!!!!!!
ஆக, தணிக்கை என்பது பன்னாடையின் பணி...........
ஆயிரம் களநோக்கர்களுக்காக ஐந்து ஜீவன்கள் ஏன் இந்த பாவச்சுமையை தணிக்கை சிலுவையில் ஏந்தி யாழ் களத்தில் மரிக்கவேண்டும்.
ஒரு வகையில் இது....
80க்கு முன் குடாநாட்டில் வீட்டைச்சுற்றி எழுப்பிய ஏழு அடி உயர கிடுகு வேலிகள் உலகத்திலிருந்து தம்மை தனித்துவப்படுத்தும் என எண்ணி தனிமைப்பட்டுப்போன சந்ததியின் மிச்சசொச்சங்கள்தான் இன்னும்.......இங்கும்........ இணையத்திலும்............
<b>I would never die for my beliefs because I might be wrong</b>
- Bertrand Russell
- Bertrand Russell

