03-09-2004, 11:24 PM
மட்டக்களப்பில் இனந்தெரியாதோரால் தினக்குரல் பறிமுதல்
இனந்தெரியாத இளைஞர் குழுவொன்று மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிற்கான விநியோகத்திற்கெனச் சென்ற தினக்குரல் பத்திரிகைப் பொதிகளை அபகரித்துச் சென்றது.
கொழும்பிலிருந்து வெளிவரும் முன்னணிப் பத்திரிகையான தினக்குரல் மேற்படி மாவட்டங்களில் வாசகர்களிடையே செல்லவிடாமல் தடுப்பதற்காகவே வாழைச்சேனைக்கும் வந்தாறுமூலைக்கும் இடையே வைத்து அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.
தினக்குரல் பத்திரிகையை மாத்திரம் அபகரித்து விட்டு, ஏனைய பத்திரிகைகளை விட்டுச் சென்ற மேற்படி இளைஞர் குழு, தினக்குரல் பத்திரிகையை எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் எடுத்து வரக்கூடாது என எச்சரித்துள்ளது.
இவ்விவகாரம் சுதந்திர ஊடக இயக்கம், இலங்கைத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் உட்பட ஏனைய ஊடக அமைப்புக்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>