03-09-2004, 11:22 PM
சிறீலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இன்று திருமலைத் தளபதி கேணல் பதுமன் கொல்லப்பட்டுவிட்டார் என்ற விசமப் பிரச்சாரத்தை மேற்கொண்டது. இதனையடுத்து, தமிழ்நெற் செய்தி நிறுவனம் பதுமனைத் தொடர்பு கொண்டபோது, தான் நலமாகவே உள்ளதாக கேணல் பதுமன் தெரிவித்துள்ளார்.
தேசியத் தலைவருடான கருத்துப் பரிமாறல்களிற்காக தான் மூன்று மாதங்களிற்கு ஒரு தடவை வன்னிக்கு வருவதாகவும், இது வன்னிக்கான ஒரு வழமையான வருகையே எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, திருக்கோணமலை மாவட்ட அரசியற்துறை பொதுமக்களிற்கு விடுத்த வேண்டுகோளில், தமிழர்களிடையே பிளவை ஏற்படுத்த முயலும் சக்திகளாலும், சிறீலங்காவின் அரச ஊடகங்களினாலும் மேற்கொள்ளப்படும் இத்தகைய பிரச்சாரங்களை நம்பவேண்டாம் எனவும், இவ்வாறான அவதூறான பிரச்சாரங்கள் குறித்து தமிழர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
புதினம்

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>