Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சுவாரசியமான செய்திகள்
#3
இந்தியா Vs பாகிஸ்தான் விவரங்கள்

<img src='http://www.kumudam.com/phototoday/09-03-04/1.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.kumudam.com/phototoday/09-03-04/t1.jpg' border='0' alt='user posted image'>

கிட்டத்தட்ட 14 வருட இடைவெளிக்குப் பின் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் டூருக்குச் செல்கிறது. இந்த தொடரில் 3 டெஸ்ட் மேட்ச்களும், 5 ஒரு தினப் போட்டிகளும் நடக்கவிருக்கின்றன. இந்த கிரிக்கெட் போட்டி இரு நாடுகளின் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தானில் எல்லா விளையாட்டு அரங்குகளின் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துபோயின. பொதுவாக இந்தியா _ பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றால் ஒரு யுத்தத்தைப் போன்றுதான் இரு நாடுகளின் மக்களுக்கு. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்கூலி, பல வெற்றிகளை கண்டவர்தான். ஆனால், பாகிஸ்தானுடன் ஏற்படும் மோதலில் மிகப்பெரிய வெற்றியை நாட்டின் கிரிக்கெட் ரசிகர்களுக்கு வழங்கவேண்டும் என்பதே அவருடைய அவா. அதற்காக தீவிரப் பயிற்சியில் இந்தியக் கிரிக்கெட் அணி இறங்கியிருக்கிறது. அப்படியே பாகிஸ்தான் அணியும் தீவிரமாக பயிற்சி எடுத்துக் கொண்டு வருகிறது. இதுவரை எந்த கேப்டனும் பாகிஸ்தானை, பாகிஸ்தானில் தோற்கடித்ததில்லை. அந்த சாதனையை கங்கூலி அண்ட் பார்ட்டி செய்வார்கள் என இந்தியக் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

ஒருதினப் போட்டிகள்

மார்ச் 13 பகல் கராச்சி
மார்ச் 16 பகல்/இரவு ராவல்பிண்டி
மார்ச் 19 பகல் பெஷாவர்
மார்ச் 21 பகல்/இரவு லாகூர்
மார்ச் 24 பகல்/இரவு லாகூர்


டெஸ்ட் போட்டிகள்

மார்ச் 28_ஏப்ரல் 1 முல்தான்
ஏப்ரல் 5_9 லாகூர்
ஏப்ரல் 13_17 ராவல்பிண்டி



போட்டிகள் நடக்கவிருக்கும் இடங்களைப் பற்றி...

கராச்சி : கராச்சி நேஷனல் ஸ்டேடியத்தில் பல டெஸ்ட் மேட்ச்கள் நடந்திருக்கின்றன. இந்த நேஷனல் ஸ்டேடியம் பாகிஸ்தானில் உள்ள பழைமையான விளையாட்டு அரங்குகளில் ஒன்று. பிட்ச் ரொம்ப ஸ்லோவாக இருக்கும். தற்போது, பிட்ச் புதுப்பிக்கப்பட்டது.


ராவல்பிண்டி : ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியம் அண்மைக்காலத்தில் கட்டப்பட்டது. இந்திய துணைக்கண்டத்தில் உலகக்கோப்பை போட்டி நடத்தப்பட்டபோது இந்த ஸ்டேடியம் கட்டப்பட்டது. பாகிஸ்தான் தலைநகரம் இஸ்லாமாபாத்திலிருந்து 3 கி.மீ. தூரம் மட்டும்தான் இருக்கின்ற இந்த ஸ்டேடியத்தில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் பார்வையாளர்கள் போட்டியைப் பார்த்து ரசிக்கலாம்.


பெஷாவர் : அர்பாப் நியாஸ் ஸ்டேடியம் 1995_ல் கட்டப்பட்டது. இந்த ஸ்டேடியத்தில் உள்ள பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கும் ஸ்பின்னர்களுக்கும் கைகொடுக்கும் என்று கருதப்படுகிறது.
ஃபைசலாபாத் : ஃபைசலாபாத் ‘மான்செஸ்டர் ஆஃப் பாகிஸ்தான்’ என்று குறிப்பிடப்படுகிறது. நம் மும்பையைப் போல் ஃபைசலாபாத்திலும் நூற்பாலைகள் அதிகம். இங்குள்ள இக்பால் ஸ்டேடியத்தின் கெபாசிட்டி 25,000 பேர்.


லாகூர் : லாகூரிலுள்ள கடாஃபி ஸ்டேடியம் அண்மைக்காலத்தில் கட்டப்பட்டது. 1996 உலகக் கோப்பைப் போட்டி இங்குதான் நடந்தது. இந்த ஸ்டேடியத்தில்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அலுவலகம் உள்ளது.


முல்தான் : இங்குள்ள முல்தான் கிரிக்கெட் கிரவுண்ட் 20,000 பேர் கெபாசிட்டி கொண்டது. இந்த முல்தான் பட்டிணம் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம்_உல்_ஹக் உடைய சொந்த ஊர். இது பாகிஸ்தானிலுள்ள பழைமையான ஊர்களில் ஒன்று.

நன்றி - குமுதம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 03-08-2004, 01:43 PM
[No subject] - by Mathan - 03-09-2004, 11:00 PM
[No subject] - by vasisutha - 03-09-2004, 11:42 PM
[No subject] - by Chandravathanaa - 03-10-2004, 12:05 AM
[No subject] - by kaattu - 03-10-2004, 02:51 PM
[No subject] - by Mathan - 03-12-2004, 10:00 PM
[No subject] - by Mathan - 03-12-2004, 10:15 PM
[No subject] - by Mathan - 03-22-2004, 01:46 AM
[No subject] - by Mathan - 03-27-2004, 07:06 PM
[No subject] - by Mathan - 03-27-2004, 11:10 PM
[No subject] - by sOliyAn - 03-28-2004, 12:06 AM
[No subject] - by kuruvikal - 03-28-2004, 09:48 AM
[No subject] - by sOliyAn - 03-28-2004, 12:53 PM
[No subject] - by Mathan - 03-31-2004, 03:55 PM
[No subject] - by sOliyAn - 03-31-2004, 11:24 PM
[No subject] - by Mathan - 04-01-2004, 12:15 AM
[No subject] - by Paranee - 04-01-2004, 03:28 PM
[No subject] - by Mathan - 04-08-2004, 12:54 PM
[No subject] - by Paranee - 04-08-2004, 02:44 PM
[No subject] - by Mathan - 04-08-2004, 11:05 PM
[No subject] - by Mathan - 04-12-2004, 11:12 AM
[No subject] - by Mathan - 04-18-2004, 11:21 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)