03-09-2004, 10:20 PM
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பொய்யான செய்திகள் குறித்து திலக் சீற்றம்
<img src='http://www.tamilnet.com/img/publish/2003/09/Pathuman_and_Thilak_091903_1_13901_435.jpg' border='0' alt='user posted image'>
குறிப்பு: அருகிலுள்ள படத்தில் கேணல் பதுமனுடன் எஸ்.திலக்
திருகோணமலை மாவட்டத் தளபதி கேணல் பதுமன் வன்னியில் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டதாக, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட பொய்யான பிரச்சாரத்திற்கு, திருமலை மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் திரு.எஸ்.திலக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் மூன்று ஊடகங்களிலும், மும்மொழிகளிலும் ஒலிபரப்பான மதியச் செய்திகளில், கேணல் பதுமன் வன்னியில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக உண்மைக்குப் புறம்பான செய்தியொன்றை ஒலிபரப்பு செய்திருந்தது. இதை மேற்கோள் காட்டி, இலங்கையின் இனவாத ஊடகங்கள் பலவும், இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்திருந்தன.
தமிழர்களுக்கிடையே இனக் கிளர்ச்சியொன்றைத் து}ண்டும் நோக்குடன், திட்டமிட்டு இதுபோன்ற பலவித திரிவுபட்ட செய்திகளும், பொய்யான கட்டுக்கதைகளும் வதந்திகளும் பரப்பப்பட்டு, பிரதேசவாதத்தையொட்டிய உணர்வுகளின் மூலம் தமிழர்களைப் பிளவுபட வைப்பதே இதற்கான காரணம் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தச் செய்தியைப் பெரிதுபடுத்தி வெளியிட்டிருக்கும் சிங்கள இனவாத இணையப் பத்திரிகையொன்று, வாகரையில் விடுதலைப் புலிகளின் படகொன்று தாக்கியளிக்கப்பட்டதாகவும், அதிலே 20 போராளிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் பிறிதொரு செய்தியையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
இதுபோன்ற பல பொய்யான செய்திகள் தொடர்ந்தும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், ஈழத்தமிழர்கள் இந்தச் செய்திகள் எதையும் நம்பாது, அமைதி காக்கும்படி திலக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் உட்பட, இலங்கை தகவல்-தொலைத்தொடர்பு ஊடகங்கள் அனைத்தும், தற்போது அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் நேரடிக் கண்காணிப்பிலும், சந்திரிகாவின் கட்டுப்பாட்டிலும் இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
நன்றி: தமிழ்நெற/புதினம்
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=11425

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>