03-09-2004, 06:37 PM
சங்கரி தலைமையிலான சுயேச்சை குழு வேட்பாளர்கள் மீது கந்தர்மடத்தில் தாக்குதல்
யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை நண்பகல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிýருந்த, ஆனந்தசங்கரி தலைமையிலான வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது.
நண்பகல் 12 மணியளவில் கந்தர்மடம் பழம் வீதிப் பகுதியில் இந்தச் சுயேச்சைக் குழுவினர் கார் ஒன்றில் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிýருந்தனர்.
இவ்வேளையில், அவ்விடத்திற்கு வந்த 20 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இவர்களது காரைச் சுற்றி வளைத்து வேட்பாளர்கள் மீதும் அவர்களுடன் வந்த ஒரு சில ஆதரவாளர்கள் மீதும் கடுமையான தாக்குதலை நடத்தியதுடன், தமிழினத் துரோகிகள் குடாநாட்டிýல் எங்கும் பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என கூýறியதுடன், அவர்கள் வைத்திருந்த துண்டுப் பிரசுரங்களையும் பறித்துத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.
சுயேச்சை வேட்பாளரான செல்லப்பா பத்மநாதன் மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் செல்லையா விஜயரட்ணம் ஆகியோரே கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும், காரினுள் இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துண்டுப் பிரசுரங்களை எடுத்து வீதியில் போட்டு பெற்றோல் ஊற்றித் தீயிட்டுக் கொளுத்தியுள்ளதாகவும், சுயேச்சைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தங்கள் மீது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களே தாக்குதல் நடத்தியதாக, பின்னர் கூýட்டணி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் சுயேச்சைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே, கடந்த சில தினங்களாக இந்தச் சுயேச்சைக் குழுவினர் தேர்தல் பிரசாரங்களுக்குச் செல்லும் பகுதிகள் எங்கும் பொது மக்களின் மிரட்டல்களுக்கு உள்ளாவதாகவும், இதனால் இவர்கள் பத்திரிகைகளில் விளம்பரங்களையும், அறிக்கைகளையும் பிரசுரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>