03-09-2004, 06:25 PM
புலிகள் இயக்கத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள பிளவை அரசு சாதகமாக பயன்படுத்த தவறுகிறது பிரதமரும் நோர்வேயும் சமரசம் செய்ய முயற்சிப்பது நியாயமா என்கிறது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
புலிகள் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள உள்விவகாரத்தை இலங்கை அரசாங்கம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாமல் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நோர்வே பிரதிநிதிகளும் பிரச்சினையை சமரசம் செய்ய முயற்சிப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் கிழக்கு பிராந்திய தளபதி கருணாவுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இந்நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த விரும்பும் தரப்பினர் புலிகள் இயக்கத்திற்கிடையே தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதைவிடுத்து புலிகள் இயக்கத்தினரிடையே ஏற்பட்டுள்ள விவகாரத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நோர்வேயினரும் சமரசம் செய்ய முயற்சிக்கின்றனர்.
நோர்வே பிரதிநிதிகள் புலிகள் இயக்கத்தினருடன் கலந்துரையாட ஆரம்பித்துள்ளனர்.
இது நோர்வே நாட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பல்ல. இதன் மூலம் நோர்வே பக்கச்சார்பாக நடந்து கொள்வது தெளிவாகின்றது.
நன்றி-வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>