03-09-2004, 06:18 PM
இரத்தக்களரி இன்றி பிரச்சினையை தீர்க்க தலைமைப்பீடம் உறுதியாக உள்ளது
ஆயர் தலைமையிலான குழுவினரிடம் தமிழ்ச்செல்வன் தெரிவிப்பு
விடுதலைப் புலிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையை இரத்தக்களரி ஏற்படாது தீர்க்க தலைமைப்பீடம் உறுதியாக இருப்பதாகவும், கருணாவை தனிநபராக கருதியே அணுகு முறை கையாளப்படும் என்று விடுதலைப் புலிகளின் அரசியற் துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
வன்னி சென்ற மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் தலைமையிலான குழுவினரிடமே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்துகருத்து தெரிவித்த தமிழ்ச்செல்வன், கருணா ஏற்கனவே தானாக எமது அமைப்பிலிருந்து விலகிக்கொண்டார். அதன் பின்பே எமதுதலைமைப்பீடம் விலக்கியது. அவரின் செயற்பாடுகளின் உண்மையை மக்கள் தெரியும் பட்சத்தில் நிலைமை தெளிவாகிவிடும். அவர் இப்போது தனிநபர். எமது அமைப்பின் உறுப்பினரல்ல. தலைமைக்கு விசுவாசமாக செய்த சத்தியப் பிரமாணத்தை மீறி விட்டார்.
இதேவேளை ஆயர் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைக்கு சென்று கருணாவை சந்தித்து தமது வன்னி விஜயம் பற்றி தெரிவக்க விரும்பி சென்றார்கள். கருணாவை சந்திக்க முடியாத நிலையில் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளான ராபட், விசு ஆகியோரை சந்தித்தார்கள்.
வன்னித் தலைமைப்பீடம் கருணாவை தனிநபராகவே கருதி பிரச்சினைக்கு முடிவுகாண விரும்புகிறது. அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளிமாவட்டங்களை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களும் வர்த்தகர்கள் சிலரும் இடம்பெயர்ந்துள்ளது குறித்து கவலை தெரிவித்தார்கள்.
இதற்கு பதிலளித்த விசு'', கருணா அம்மான் தனது நிலைப்பாட்டை ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார். பிரதேச வாதத்திற்கு இங்கு இடமில்லை. மக்கள் வீணான பீதியை அடைய வேண்டாம்.
வன்னி தலைமைப்பீடத்தின் நிலைமை தொடர்பாக நீங்கள் தெரிவித்த விடயங்களை கருணா அம்மான் கவனத்திற்கு கொண்டுவருவோம்'' என்றும் தெரிவித்தனர்.
கருணா அம்மானின் தற்போதைய நிலைப்பாடு குறித்த தகவலை விரைவில் அறிவிப்பதாக தமக்கு தெரிவிக்கப்பட்டதாக ஆயர் சுவாம்பிள்ளை தெரிவித்தார்.
நன்றி-வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>