03-09-2004, 06:14 PM
புலிகளின் பிளவை சாதகமாக பயன்படுத்தி தமிழர்களிடையே நெருக்கடியை ஏற்படுத்த முயற்சி
புலிகளிடையே மோதல் என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும் தெரிவிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் ஏற்பட்டுள்ள பிளவை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தமிழ் மக்களிடையே நெருக்கடியையும், பீதியையும் ஏற்படுத்த ஒரு சில சக்திகள் முனைவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் மக்களிடையே விரிசலை ஏற்படுத்தும் வகையிலும் புலிகளிடையே மோதலை ஏற்படுத்தி அதன்மூலம் சுய இலாபம் தேடும் வகையிலும் இவர்கள் திட்டமிட்டு செயற்படுவதுடன், இரு தரப்பினரையும் தூண்டி விடும் வகையில் துண்டுப் பிரசுரங்களை அவ்வப்போது பிரசுரித்து வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
இதனால் கிழக்கு மாகாண மக்கள் மத்தியிலும், வர்த்தக சமூகத்தினரிடையேயும் ஒருவித இனம்புரியாத பீதியும், கவலையும் தோன்றியுள்ளதாக எமது பிராந்திய நிருபர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு சில ஊடகங்கள் புலிகளிடையே மோதல்களைத் தூண்டி விடும் வகையில் உண்மைக்குப் புறம்பான எந்தவிதமான அடிப்படைகளும் அற்ற செய்திகளைப் பிரசுரித்து வருவதாக கிழக்கு மாகாண மக்கள் கூறுகின்றனர்.
கிழக்கில் புலிகளிடையே மோதல் என்றும் 46 பேர் பலியெனவும் அடிபடும் செய்திகள் குறித்து கிழக்கு மாகாண இராணுவ மற்றும் பொலிஸ் பிரிவுடன் தொடர்பு கொண்டு வினவியபோது அதற்கான சாத்தியம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டதுடன் பாதுகாப்புப் படையினரும், பொலிஸாரும் மிகவும் உன்னிப்பாக நிலைமைகளை அவதானித்து வருவதுடன், பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கிழக்கு அசம்பாவிதங்கள் தொடர்பாக இராணுவ பேச்சாளர் கேணல் சுனந்த பெரேராவிடம் வினவியபோது, கிழக்கில் அமைதி நிலவுவதாகவும், அவ்வாறான கொலைகள் இடம்பெற்றிருக்குமானால், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினூடாக அறிந்திருக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்:
இதுவரை எந்தவிதமான கொலைச் சம்பவம் குறித்தும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினர் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை. இது புலிகளுக்கிடையேயான உள்வீட்டுப் பிரச்சினை.
இந்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருகின்றன. அதில் எவ்வித மாற்றமும் கிடையாது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான விடயங்களை நாம் முறையாகப் பின்பற்றி வருகின்றோம். எவ்வாறெனினும் புலிகளிடையேயான பிளவையடுத்து ஏற்பட்ட மோதலில் 46 பேர் பலியானதாக செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இதனை ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை என்றார்.
விசேட அதிரடிப்படை கமாண்டர் நிமால் லேங்கேயிடம் தொடர்பு கொண்டு இது குறித்து வினவியபோது புலிகளின் உள் பிரச்சினைகளில் நாம் தலையிட முடியாது. எவ்வாறெனினும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமும் கிடையாது. அதேவேளை களுவாஞ்சிக்குடி பகுதியில் ஹர்த்தால் ஊர்வலம் என்பன (நேற்று) அமைதியாக நடைபெற்றன.
மக்களுக்கு தேவையான பாதுகாப்பை நாம் வழங்கி வருகிறோம் என்றார்.
மேலும் யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவினரோடு அடிக்கடி தொடர்புகளை ஏற்படுத்தி நிலைமைகளை அவ்வப்போது கேட்டறிந்து கொள்வதாகத் தெரிவித்த அவர் 46 புலிகள் கொல்லப் பட்டமைக்கான சாத்தியம் எதுவும் இல்லை. தற்பொழுது ஏ5 பாதை திறக்கப்பட்டிடருக்கின்றது. அவ்வாறு எவரும் கொலை செய்யப்பட்டிருந்தால் ஏ5 பாதையூடாக நாம் பயணிக்கும்போது சடலங்களையேனும் நாம் கண்டிருக்க முடியும் என்றார்.
பொலிஸ் தலைமையகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் றியன்சி பெரேராவிடம் கிழக்கு சம்பவங்கள் குறித்து வினவியபோது, இது விடுதலைப் புலிகளின் உள்வீட்டுப் பிரச்சினை. இதில் எவ்வித அக்கறையும் எமக்குக்கிடையாது. இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. சட்டம் ஒழுங்கு முறையாக நிலைநாட்டப்பட்டு வருகிறது.
சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க எவரும் முயலும் பட்சத்தில் அதனை நிலைநாட்ட முறையான நடவடிக்கை எடுக்கப்படும். பொலிஸாரும் படையினரும் தயாராகவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>