03-09-2004, 02:27 AM
"மோதலைத் தவிர்க்க விரும்புகிறோம்': புலிகளின் கிழக்குப் பகுதி தலைவர் கருணா
பிரபாகரன் (49) தலைமையிலான வடக்குப் பகுதி விடுதலைப் புலிகளுடன் மோதலைத் தவிர்க்கவே விரும்புகிறோம் என்று கிழக்குப் பகுதி விடுதலைப் புலிகளின் தலைவர் கர்னல் கருணா என்று அழைக்கப்படும் வி. முரளீதரன் (37) தெரிவிக்கிறார்.
கருணா சார்பில் வரதன் என்பவர் தொலைபேசி மூலம் நிருபர்களுடன் பேசினார். அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு இரண்டையும் சேர்ந்த தமிழர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தாலும் முக்கிய பதவிகளுக்கெல்லாம் வடக்குப் பகுதி தமிழர்களை மட்டுமே நியமித்து வந்தார் பிரபாகரன். இதை ஆட்சேபித்த பிறகும் அவருடைய போக்கு மாறவில்லை. எனவே தான் அவருடைய தலைமையின் கீழ் செயல்பட விரும்பாமல் தனித்துச் செயல்பட அனுமதி கோரினார் கருணா என்றார் வரதன்.
கருணாவுக்குப் பதிலாக பொறுப்பேற்பார் என்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைமை அறிவித்த நபர் இன்னமும் பொறுப்பை ஏற்கவில்லை. மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை ஊர்வலம் சென்ற கிழக்குப் பகுதி தமிழர்கள் பிரபாகரனுக்கு எதிராகக் கோஷமிட்டனர். அவருடைய உருவ பொம்மை கூட எரிக்கப்பட்டது.
கருணாவுக்கு ஆதரவாக திங்கள்கிழமை கடைகளும் பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டிருந்தன. சாலைகளில் வாகனங்கள் ஓடவில்லை.
பிஷப் சமரசத் தூது :
இதனிடையே மட்டக்களப்பு மாவட்ட பிஷப், சில பிரதிநிதிகளுடன் வடக்குப் பகுதிக்குச் சென்றிருக்கிறார். அங்கு விடுதலைப் புலிகளின் தலைவர்களைச் சந்தித்து சமரசத் தீர்வு காண அவர் முயற்சிப்பார் என்று தெரிகிறது.
"எங்களுடைய அரசியல் தலைவர்கள் பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்துவிட்டனர்; வடக்குப் பகுதி தலைவர்களின் கீழ் செயல்பட நாங்கள் விரும்பவில்லை என்பதைத் தெரிவித்துவிட்டோம்' என்று கருணா சார்பில் வரதன் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள இந்த பிளவில் இலங்கை ராணுவம் இதுவரையில் எந்தப் பிரிவுடனும் சேராமல் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. விடுதலைப் புலிகளுக்கிடையே சண்டை மூண்டாலும் கூட அலட்சியமாக இருந்துவிடாமல் கவனமுடன் இருக்குமாறு அது அனைத்துப் பகுதி படைப்பிரிவுகளையும் எச்சரித்திருக்கிறது.
இலங்கை அரசியல் வட்டாரங்களும் இந்த மோதல் எப்படி முடியும் என்று கவனித்து வருகிறது.
எரிக் சோலைம்... :
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே முன்னர் சமரசம் செய்துவைத்த நார்வே சமரசத் தூதர் எரிக் சோலைம் கொழும்புக்கு புறப்பட்டுவிட்டார். அவர் அரசையும் விடுதலைப் புலிகளையும் சந்தித்து, சமரச ஏற்பாடுகள் எந்த அளவில் இருக்கிறது என்று ஆய்வு செய்வார். விடுதலைப் புலிகளுக்கு இடையிலேயே புதிதாக இப்போது ஏற்பட்டுள்ள பிளவு குறித்தும் அவர் ஆராய்வார். அவர் கிழக்குப் பகுதியின் புலிகள் தலைவர் கருணாவைச் சந்திப்பாரா என்று தெரியவில்லை.
நன்றி - தினமணி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>