03-08-2004, 06:17 PM
மட்டு.,அம்பாறையில் வதந்தியால் மக்கள் பீதி, இயல்பு நிலை பாதிப்பு
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் நேற்று திங்களன்று இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு நகரில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன் வழமையான சனநடமாட்டமும் காணப்படவில்லை.
வெளிமாவட்டங்களுக்கான போக்குவரத்து வழமைபோல இடம் பெற்றிருந்தாலும் உள்ளூர் போக்குவரத்துகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு நீதிமன்றங்களில் நேற்று திங்களன்று இடம் பெற்ற விசாரணைகளுக்கு பெரும்பாலானவர்கள் வருகை தராததால் வழக்குத் தவணைகள் பிறிதொரு தினத்திற்கு
ஒத்திவைக்கப்பட்டன.
பொதுத்தேர்தலுக்கான பிரசாரங்களும் இடம் பெறவில்லை. மாவட்டத்தில் இனம் புரியாத அமைதி நிலவி வருகிறது. இதேவேளை அநாமதேய வதந்திகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேறுமாவட்டங்களை சேர்ந்த தமிழர்கள் பீதியடைந்த நிலையில் உள்ளனர்.
அம்பாறையில்
விடுதலைப் புலிகளின் உள்வீட்டு முரண்பாடு காரணமாக அம்பாறை கல்முனைப் பிரதேச தமிழ் மக்களிடையே ஒருவகை அச்ச உணர்வும் சோகமும் ஏற்பட்டுள்ளது.
நேற்று திங்கட்கிழமை இப்பிரதேசத்தில் அரச அலுவலகங்கள், வங்கிகள் எதுவும் இயங்கவில்லை. மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை தராததால் பாடசாலைகள் அøனத்தும் மூடப்பட்டிருந்தன. தமிழ் வர்த்தகர்களின் கடைகள் மூடப்பட்டிருந்தன.
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>