03-08-2004, 06:15 PM
சுயேச்சைக்குழு தேர்தல் பிரசுரங்கள் கந்தர் மடத்தில் தீயிட்டு எரிப்பு ஈ.பி.டி.பி. இராணுவ பாதுகாப்புடன் பிரசாரம்
சுயேச்சை வேட்பாளர் ஆனந்த சங்கரியையும் அவரது குழுவினரையும் ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களது வாகனம் இனந்தெரியாத இளைஞர் குழுவினரால் இடைமறிக்கப்பட்டு வாகனத்துக்குள்ளிருந்த பிரசுரங்கள் வெளியே எடுக்கப்பட்டு அவ்விடத்திலேயே தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இச்சம்பவம் யாழ்.கந்தர் மடம் ஆலயச் சந்திக்கு அருகாமையில் பலாலி வீதியில் நேற்று நண்பகல் இடம்பெற்றது.
சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 100 யார் தொலைவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் அவ்விடத்திற்கு விரைந்து சென்று இளைஞர் குழுவினருடன் பேசி அவர்களை அவ்விடத்திலிருந்து கலைந்து செல்லுமாறு கூறினர்.
சம்பவம் இடம்பெற்ற போது வாகனத்துத்குள் யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் விஜயரத்தினம் வேட்பாளர் செ.பத்மநாதன் உட்பட பலர் இருந்தனர்.
இராணுவ பாதுகாப்புடன்
ஈ.பி.டி.பி. பிரசாரம்
இதேவேளை, ஈ.பி.டி.பி., ஈ.பி.ஆர்.எல்.எவ். கூட்ட (வரதர் அணி) கட்சியின் ஆதரவாளர்கள் வாகனம் ஒன்றில் பாதுகாப்புடன் ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்ததோடு துண்டுப் பிரசுரங்களையும் பொது மக்களுக்கு விநியோகித்துக் கொண்டிருந்ததைக் காண கூடியதாகவிருந்தது
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>