03-08-2004, 06:13 PM
புலிகளுக்குள் பிரதேச வேறுபாடு இல்லை
விரைவில் சகஜ நிலையை தோற்றுவிப்போம்
மட்டுஅம்பாறை மக்கள் ஒற்றுமையை காக்க வேண்டும் என்கிறார் தளபதி ரமேஷ்
மட்டக்களப்பு கிராமப் புறங்களிலுள்ள மக்கள் என்ன நடைபெறுகின்றது என்பது பற்றி தெளிவாகத் தெரியாதவர்களாக ஒரு வித குழப்பநிலையில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு உண்மை நிலையை நாம் விரைவில் புரிய வைப்போம். அதேவேளை சகல நடவடிக்கைகளும் கூடிய விரைவில் சகஜ நிலைமைக்கு திரும்பும். எனவே மக்கள் அநாவசியமான பிரதேச ரீதியான வேறுபாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது என்று மட்டு. அம்பாறை சிறப்புத் தளபதி ரமேஷ் தெரிவித்தார்.
எமது அமைப்புக்குள் எந்தவிதமான பிரதேச வேறுபாடுகளும் கிடையாது. அவ்வாறு எவரும் சிந்தித்ததும் இல்லை.
இந்நிலையில் பிரதேச வேறுபாட்டை கிளப்பியமையினால் சர்வதேசமட்டத்திலும் உள்ளூரிலும் மட்டக்களப்பு அம்பாறை மக்களை கருணா அவமானப்படுத்தியுள்ளார் என்றும் தளபதி ரமேஷ் கூறினார்.
இன்று அனைத்து தரப்பினருமே தமிழினத்தை இழிவாக நோக்கும் ஓர் சூழல் தோன்றியுள்ளது. இதனால் தமிழ் மக்கள் பெரும் தலைகுனிவைச் சந்திக்க நேர்ந்து விட்டது என்றும் ரமேஷ் சுட்டிக்காட்டினார்.
மீண்டும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் தலை நிமிர்ந்து வாழும் சூழலை தோற்றுவிக்க அம்பாறைமட்டக்களப்பு மக்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்தார்.
தனது தவறுகளை மூடிமறைப்பதற்காகவே கருணா பிரதேச வேறுபாட்டை தோற்றுவித்துள்ளார். அவ்வாறான தனது முடிவிற்கு போராளிகளும் மட்டக்களப்பு மாவட்ட மக்களும் ஆதரவு வழங்குவதாகவும் கருணா சித்திரிக்கின்றார் என்று குறிப்பிட்ட தளபதி ரமேஷ் போராளிகளை கட்டாயப்படுத்தி ஆயுத முனையில் பல்வேறு வேலைகளை கருணா மேற்கொண்டு வருகின்றார். அது பற்றிய தகவல் எமக்கு கிடைத்துள்ளது என்றும் கூறினார்.
தளபதி ரமேஸ் வன்னியில் ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
மட்டக்களப்பில் கிராமப்புறங்களில் இருக்கின்ற மக்கள் என்ன நடைபெறுகின்றது என்பது பற்றித்தெரியாமல் இருக்கின்றனர். கருணா குறிப்பிட்ட ஆட்களை அதாவது தனக்கு சாதகமான சிலரை அனுப்பி தனது கருத்தை தெரிவிக்கும் போது அதனைசிலர் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனாலும் நாங்கள் தற்பொழுது தெளிவாக சில விடயங்களை அவரது குற்றச்சாட்டுகள் என்னஎன்பதை விரிவாக கூறும் போது கருணா யார் என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.
போராளிகள் குழப்பம்
அங்குள்ள போராளிகள் குழப்பமடைந்துள்ளனர். அத்துடன் போராளிகள் மட்டுமல்ல கருணாவும் ஒரு தளம்பல் நிலையிலேயே இருக்கின்றார் என அறிகின்றோம். அதேபோன்று பிரதேச பொறுப்பாளர்களும் சோர்வடைந்த நிலையில் உள்ளனர் எல்லோரும் அங்கிருந்து வன்னிக்கு வரமுடியாது. குறிப்பிட்ட தளபதிகளே வன்னிக்கு வந்துள்ளனர். ஆனாலும் நாங்கள் இப்போது எடுத்த முடிவினை அங்குள்ள போராளிகளுக்கு அறிவித்திருக்கின்றோம்.
தற்போது கருணா மக்களை கட்டாயப்படுத்தி தனக்கு ஆதரவாக இருக்குமாறு கூறிவருகின்றார். ஆயுத முனையில் போராளிகளை பயமுறுத்தி பல வேலைகளை செய்து வருகின்றார். மக்களை அழிவுக்குள் விடாமல் விட்டுக்கொடுப்பதுதான் சிறந்தது. அவர் தொடர்ந்தும் பிடிவாதமாக மக்களுக்கு தவறான அறிவுறுத்தல்களை வழங்குவது அவருக்கு நல்லதல்ல. மக்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக செய்து வருகின்றோம்.
தான் விட்ட தவறு பாரதூரமானது அதனால் தலைவர் கடுமையான நடவடிக்கையை எடுப்பார் என்று அஞ்சித்தான் பிரதேசவாதத்தை கிளப்பி மக்களையும் உணர்ச்சிவசப்படுத்தி அதன் மூலம் தன்னை காப்பாற்றிக் கொள்கின்றார் என்பது உண்மை என்றார்.
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>