03-08-2004, 06:01 PM
கருணாவின் குற்றச்சாட்டு அவதூறானது - கேணல் பதுமன்
இன்று அசோசியட் பிரஸ் நிறுவனத்திற்கு செவ்வி வழங்கிய திருமலை மாவட்டத் தளபதி கேணல் பதுமன், தான் வீட்டுக் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதான கருணாவின் குற்றச்சாட்டு உண்மையற்றது எனத் தெரிவித்தார்.
அண்மையில் பி.பி.சியின் தமிழ்ச்சேவைக்கு கருணா தெரிவித்த கருத்தொன்றில் கேணல் பதுமன் வன்னியில் வீட்டுக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக அசோசியட் பிரஸ் நிருபர் கேட்டதற்கே பதுமன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
இப்பேட்டியின் போது கேணல் பதுமனுடன் மட்டு-அம்பாறை மாவட்டத் தளபதிகள், அரசியற்துறைப் பொறுப்பாளர் மற்றும் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பார் எஸ்.பி. தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர். இதன் போது தற்போதைய நிலைமை பற்றி விளக்கமளித்த திருமலை, மற்றும் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டத் தளபதிகள் ஒரு தனிநபரால் மேற்கொள்ளப்படும் இந்தக் குழப்பகரமான நிலை தமிழ் மக்களிடையே பிரிவுகளைத் தோற்றுவிக்க தாம் எந்தவொரு கட்டத்திலும் அனுமதிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தனர்.
நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>