03-08-2004, 03:37 PM
Quote:கருணாவின் தொடரும் அடாவடித்தனங்கள்.
கருணாவின் தொடரும் துரோகங்களின் வரிசையில் இன்று மட்டக்களப்பு மக்களும் , அங்கு வாழ்கின்ற பிறமாவட்டத்து மக்களும் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளார்கள். குறிப்பாக மட்டக்களப்பில் வாழ்கின்ற யாழ் , வன்னிப்பிரதேச மக்களின் உயிர்களை எடுத்துவிடும் வகையில் அச்சுறுத்தப்பட்டு வருகின்றார்கள். உடனடியாக அவர்கள் யாழ் - வன்னிப்பகுதிக்குப் போய்விடவேண்டுமென்று மிரட்டப்பட்டும் போகத்தவறுவோர் சுடப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் பலவருடங்களாக , பலதசாப்தங்களாக கடைகள் , வியாபார நிறுவனங்கள் போன்றவற்றை நடாத்தி வருகின்ற யாழ் - வன்னிமாவட்ட மக்களின் நிறுவனங்களை எரிக்குமாறு கருணா உத்தரவிட்டார். பின்னர் உடனடியாக பிறமாவட்ட மக்களை மட்டக்களப்பைவிட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டுக் கொண்டு வருகிறார்கள். இந்த மக்களின் பயப்பீதியை தனது ஆதரவாக வெளியுலகுக்குக் காட்டிக்கொண்டு இத்தகைய துரோகத்தனத்தைச் செய்து கொண்டிருக்கிறார் கருணா. இந்த மனிதாபிமானமற்ற செயலை எந்த மனிதமுள்ள மனிதனாலும் மன்னிக்கவோ பார்த்துக் கொண்டிருக்கவோ முடியாது.
கொக்கட்டிச்சோலையைப் பிறப்பிடமாகக் கொண்ட தளபதி ரமேஷ் அவர்களின் வீடுகள் அடித்து உடைத்து நொருக்கப்பட்டும் அவரது உறவினர்கள் தாக்கப்பட்டும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இத்துடன் புலனாய்வுப்பிரிவுப் போராளிகளின் குடும்பங்களையும் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற கட்டளையின் பெயரில் அந்தக்குடும்பங்கள் யாவும் வெளியேறிக்கொண்டு உள்ளார்கள்.
புலனாய்வுப்பொறுப்பாளர் பொட்டம்மானின் மனைவி மட்டக்களப்பு வந்தாறு மூலையைச் சேர்ந்தவர். இவரது குடும்பத்தினர் உறவினர்களையும் வந்தாறு மூலையை விட்டு வெளியேறும்படி பணிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள மக்கள் அனைவரும் அச்சத்தின் நடுவில்தான் இருக்கிறார்கள். போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடம் மக்கள் இதுபற்றித் தெரிவிப்பதற்குக்கூட அஞ்சிய நிலையில் இருக்கிறார்கள். கண்காணிப்புக்குழுவிடம் அறிவிப்பதை கருணாகுழு அறிந்தால் தாம் கொல்லப்படலாம் என் அச்சத்தில் மக்கள் வாய்மூடியுள்ளார். இதனைத் தனக்கு ஆதரவாகக்காட்டிக் கொண்டு வெளிநாட்டு , உள்நாட்டு ஊடகங்களுக்கும் செவ்விகள் , கோரிக்கைகள் வெளியிட்டுக்கொண்டிருக்கிறார். தன்னையொரு சுயாதீனமானவராக ஜனநாயகவாதியாகக் காட்டிக்கொண்டு அட்டகாசங்கள் புரியும் கருணா தனது கட்டளையை மீறுவோருக்கு மரணதண்டனை என மிரட்டியே தன்னுடனுள்ள போராளிகளை மக்களுக்கு எதிரானவராகச் செயற்பட வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.
இவர் தன்னை ஒரு ஜனநாயகவாதியாகவும் மட்டு - அம்பாறை மக்களின் தேவது}தனாகவும் காட்டிக்கொண்டு தன்னை தென்தமிழீழத் தலைவனாகவும் பிரகடனப்படுத்தும் வகையில் தன்னை அடையாளப்படுத்தும் இந்தக் கருணா பேச்சுச்சுதந்திரம் , எழுத்துச்சுதந்திரம் என்ற அனைத்தையும் இதுவரை காலம் மட்டு - அம்பாறையில் நிலைநிறுத்தி வந்தாரா என்பதைப்பார்த்தால் உண்மையில் மிகமோசமான முறையில் அடக்கப்பட்டேயிருந்தது. இதற்கு உதாரணம் மட்டக்களப்பு தினக்கதிர் பத்திரிகை விடயம்.
மட்டக்களப்பில் இயங்கி வந்த பத்திரிகையான தினக்கதிர் பத்திரிகையை அடித்துடைத்து அந்தப்பத்திரிகையின் விலாசத்தையே இல்லாது செய்த பெருமை இந்தக்கருணாவையே சாரும். தனது அடாவடித்தனமான செயற்பாட்டை நிலைநாட்டும் வகையில்தான் இச்செயலைச் செய்தார். காரணம் தனது பத்திரிகையான தமிழ்அலையைக் கொண்டு வந்து தனது ஆட்சியை நிலைநிறுத்தவே இச்செயலைச் செய்தார் என்பதும் உண்மையே. தினக்கதிரை அழித்துவிட்டே தமிழ் அலையை ஆரம்பித்தார். இன்று தனது சுயநலத்துக்காக தமிழ் அலை பத்திரிகையை பயன்படுத்தி வருகிறார். தனக்காக தனது கட்டுப்பாட்டில் தனது அடாவடித்தனங்களையெல்லாம் அரங்கேற்ற தமிழ்அலையையும் , பாடுமீனையும் பயன்படுத்தி வருவதை புலம்பெயர் தமிழ் உறவுகள் அறிந்து கொள்ளுங்கள். இந்த ஈனச்செயல்கள் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.
- புளியம்தீவிலிருந்து முகுந்தன் -
தாத்தா சந்தோசமாக்கம்!!!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

