03-08-2004, 02:46 PM
வரலாற்றுத் துரோகம் - கருணா
இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களினது மனங்களை மட்டுமல்லாமல்இ உலகம் முழுவதும் பரந்து வாழும் அனைத்து ஈழத்தமிழர்களினதும் மனங்களைக் கடந்த சில நாள்களாக அரித்துக் கொண்டிருந்த விடயம் தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமை தீர்க்க மான - திட்டவட்டமான - சில முடிவுகளை எடுத்து அறி வித்திருக்கிறது.
மட்டு.இ அம்பாறை தளபதியாக இருந்த கருணா கடந்த சில நாள்களாக நடந்துகொண்ட விதமும்இ எடுத்த நடவடிக்கைகளும் தமிழீழ மக்களை அதிர்ச்சியிலும்இ ஆழ்ந்த கவலையிலும் மூழ்கடித்தன.இந்த விவகாரத்தில் மக்களைப் பொறுத்தவரை அவர் களை வேதனையில் மூழ்கடித்த விடயங்கள் ஐந்து.
<b>ஒன்று</b> - அமைப்பில் உயர்ந்த இடம் வழங்கப்பட்ட ஒரு மூத்த தளபதியின் திடீர்த் துரோகத்தனம்.
<b>இரண்டு</b> - ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்துக்கு விரோதமான தீய சக்திகளின் துண்டுதலுக்கு விலை போனமை.
<b>மூன்று </b>- தமது அதிகார ஆசையையும் துரோகத் தனத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக ஐக்கியப்பட்டிருக்கும் ஈழத்தமிழினத்தின் மத்தியில் பிரதேச வாதப் பிரிவினையையும் வெறியையும் விதிக்க முயன்றமை.
<b>நான்கு</b> - மீண்டும் கிழக்குப் போராளிகளும் மக்களும் முழு மூச்சாக விடுதலைப் போரில் தம்மை இணைத்துக் கொள்வதற்கு இத்துரோகத்தனச் செயற்பாடுகளினால் தொடர்ந்து மேற்கொள்ளப்படக்கூடிய இடைஞ்சல்கள்.
<b>ஐந்து</b> - இந்தத் துரோகத்தனம் அரங்கேறிய கால கட்டம்.
இவையே தமிழ் மக்களின் மனதை இன்று அரிக்கும் விடயங்கள்.
சரியோஇ பிழையோ தமிழீழத்தின் உக்கிரமான விடுதலைப் போர் காலத்தில் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இரண்டாவது தளபதியாகச் செயற்பட்டவர் கருணா. தலைவருக்கு அடுத்த நிலையில் இருந்து செயற்படும் உயர்ஸ்தானத்தைப் பெற்றவரிடமிருந்துதான் தமது பிரதேசத்துக்கு உரிய முன்னிலைமை தரப்படவில்லை என்ற பிரதேசவாதப் பிரிவினைக் குற்றச்சாட்டுக் கிளம்பியிருக்கின்றது. அதுவும் நிலப்பிரதேச ரீதியாகத் தன்னுடைய இருப்பிடத்துடன் நேரடித் தொடர்பு இல்லாத ஒரு தனிக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு தன் னுடைய ஏக பிரதிநிதியாகத் தலைவரிடம் நியமனம் பெற்றுஇ அந்தப் பதவி வழி அதிகாரத்தை நன்கு ஆண்டு அனுபவித்த தளபதி ஒருவரிடமிருந்து இத்தகைய துரோகத்தன நடவடிக்கை யாரும் எதிர்பாராததுதான்.
அது மட்டுமல்லஇ முழுத்தமிழினமும் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகள் - அரசியல் சித்தாந்தக் கருத்துக் கள் - அணுகுமுறைகள் - அத்தனையையும் களைந்து விட்டுஇ சர்வதேச சமூகத்துக்குத் தனது ஐக்கியத்தையும்இ ஏகோபித்த அபிலாஷையையும்இ ஒட்டுமொத்த விருப்பத் தையும் ஒன்றுபட்டு வெளிப்படுத்தத் தயாராகிக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் - திட்டமிட்டுஇ நேரம் பார்த்து - அதற்கு வேட்டு வைக்கும் விதத்தில் கிழக்கில் துரோகத்தனம் அரங்கேற்றப்பட்டிருகிறது.
ஈழத்தமிழரின் ஐக்கியத்தையும்இ வலுமிக்க விடுதலைப் போராட்ட அமைப்பான புலிகளின் தலைமையின் கீழ் ஈழத் தமிழர்கள் அணி திரண்டு சர்வதேச சமூகத் துக்கு அந்த ஒற்றுமையைப் பிரகடனப்படுத்துவதையும் விரும்பாத சக்திகள்இ தருணம் பார்த்து மேற்கொண்ட சதி இது. அதற்குக் கருணா இடங்கொடுத்ததன் மூலம் வரலாற்றுத் துரோகத்துக்குத் துணைபோயிருக்கின்றார் என்பதே ஈழத் தமிழினத்தின் வேதனை.
பேரினவாதத்தினால் தமிழினம் அடக்கப்பட்டுஇ அடி மைப்படுத்தப்பட்டுஇ ஒடுக்கப்பட்ட போது அதற்கு எதிராக விடுதலைப் போராட்டம் கிளர்ந்தெழுந்துஇ முகிழ்ந்துஇ பரந்து விரிந்தது.
இந்த அடக்கு முறைக்கு எதிராகக் கிளர்ந்த நமது விடுதலைப் போராட்டத்தை வழி நடத்தும் பொறுப்பை விடுதலைப் புலிகள் அமைப்பு ஏற்றுக்கொண்டது.
புலிகளின் போராட்டம் இனவாதத்துக்கு எதிராகப் பரிணமித்தபோதும் அது பிரதேசவாதம்இ சாதிபேதவாதம்இ ஒடுக்குமுறைஇ சுரண்டல் ஆகியவற்றைச் சமூகத்திலிருந்து அகற்றவும் தவறவில்லை.
பிரதேசவாதப் போக்குகளை நிராகரித்துஇ ஒரு ஐக்கிய குடையின் கீழ் ஈழத் தமிழ் மக்களை ஒன்றிணைத்த புலிகள் அமைப்பு மீது அபாண்டமாகக் குற்றஞ்சுமத்து வதற்குப் பிரதேசவாதத்தைக் கருணா கையில் எடுத்திருப் பது விநோதத்துக்குரியது| விந்தையானது.
ஈழத்தமிழ் மக்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தின் அடிப்படைத் தாற் பரியங்களைப் புரிந்துகொண்டு தான் இவ்வளவு காலமும் தலைவர் பிரபாகரனின் வழி காட்டலின்கீழ் தாம் போராட்டத்தில் பங்காற்றினார் என்று கருணா கருதுவாரேயானால் அந்தக் காரணங்களுக்காக - ஈழத்தமிழரின் போராட்ட சக்திகளுக்கு மேலும் நெருக் கடி கொடுத்துஇ குழப்பங்களை ஏற்படுத்திஇ போராட்ட சக்திகளுக்குப் பின்னடைவுகளை உருவாக்காமல் தாமாகவே ஒதுங்கிக் கொண்டிருக்கலாம்.
பின் புலத்தில் நின்று தவறான வழியில் கருணாவைத்து}ண்டிவரும் ஒளிவு மறைவு சக்திகள்இ அப்படிக் கருணா ஒழுங்காக நடக்க அனுமதிக்குமா என்பதே கேள்வி.
அத்தகைய சக்திகளின் ஈழத்தமிழ் விரோதப் போக்குக்குத் தொடர்ந்து கருணா இடங்கொடுத்துத் தமது குழப்பத்தைத் தொடர்வாராயின் நிலைமை மோசமடைவ தைத் தவிர்க்க முடியாததாகி விடும்.
-உதயன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>