03-08-2004, 11:28 AM
shanthy Wrote:[quote=nalayiny]இப்படியே எல்லோரையும் துரோகி துரோகி என விரலும் நாவும் சுட்டிச்சொல்லிக்கொண்டே போனால் இழந்த மக்களின் உயிரும் இழந்த பல சொத்தும் பல ஆயிரம் போராளிகளின் உயிரிழப்பும் என்னாவது? தமது உயிரைக்கொடுத்து உதிரம் சிந்திய போராளிகளின் கனவு என்னாவது? யாவும் கானல் நீரா? சகல ஈழத்தமிழருக்குமான விடுதலை தான் பிறகென்ன அது முத்திரை குத்தி கேவலப்படுத்துவது? எதையும் பேசி தீற்பது தான் சாலச்சிறந்தது.
ஈpழ் மலரும் போது சாதிப்பிரிவினை இருக்கோ இல்லாமல் போகுதோ தெரியேலை ஆனால் இந்த துரோகி தேசப்பற்றாளன் எண்ட சாதி மட்டும் புதிதாய் பிறப்பெடுக்கும் போல் அல்லவா தெரிகிறது. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
nalayini :?: :?: :?: :?:
எங்களை நேசித்த எங்கள் புலம்பெயர் தமிழ் உறவுகளே !
இது உங்கள் பிள்ளைகளின் குரல்கள். உங்களுக்காகப் போராடப் புறப்பட்டவர்களின் குரல்கள். எங்கள் தலைவரின் ஆணையை ஏற்று எங்கள் தலைவரையும் தளபதிகளையும் நேசித்து அவர்களின் வழிநடத்தலை மானசீகமாக ஏற்றுக் களங்களில் காவலரண்களில் கண்விழித்திருந்து எங்கள் தேசத்தை அன்னியப்பேரினவாதப் படைகளிடமிருந்து மீட்டெடுக்கப் புறப்பட்ட போராளிகள் நாங்கள்.
எங்கள் தலைவரும் , தளபதிகளும் எங்கள் மீது ஒருபோதும் பிரதேசவாதம் பாராட்டவில்லை , சாதிபிரித்துப் பார்க்கவில்லை , சமயம் பிரித்து எங்களுக்குள் பேதங்கள் வளரவிடவில்லை. நாங்களெல்லாம் ஒருதாய் பிள்ளைகளாக , உடன்பிறந்த உறவுகளாகவே இருந்தோம் , கூடியிருந்து உணவுண்டு , கூடியிருந்து கதைகள் பேசி , கூடியிருந்து எல்லோரும் எந்த பேதமுமின்றியே இருந்தோம். வடக்கு என்பதும் கிழக்கு என்பதும் எமக்குள் சுவர்களாயிருக்கவில்லை. நமது தேசம் தமிழீழம். நாங்களெல்லாம் தமிழீழம் என்றதாயின் பிள்ளைகளென்ற உணர்வும் , உறவுமே இருந்தது. எந்தத்தளபதியும் , எந்தப்போராளியும் , எங்கள் தலைவரும் எந்த சந்தர்ப்பத்திலும் நமக்குள் அத்தகைய எண்ணத்தையோ எதிர்ப்பையோ எழவிடல்லை. அப்படியான உறவுப்பிணைப்பால்தான் நாம் பிணைக்கப்பட்டிருந்தோம்.
அண்மையில் கருணா அம்மான் அவர்களின் தன்னிச்சையான பிரதேசவாதத்து}ண்டல் நம்மையெல்லாம் துயரில் ஆழ்த்தியது மட்டுமல்ல. நம்சகோதரர்களையே நமக்கு எதிரிகளாக்கி நம்மைச் சிறைப்படுத்தி வைத்திருப்பது நமக்கும் நமது தோழர்களுக்குமிடையில் இருந்து வந்த ஒற்றுமையை விலைபேசி நம்மை நமது தலைமைக்கும் தளபதிகளுக்கும் எதிரிகளாக்கித் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றார். கருணா அம்மான் அன்னிய சக்திகளிற்கு விலைபோய்விட்ட துரோகத்துக்கு நம்மையும் பலியாக்கவே இச்செயலைச் செய்து கொண்டிருக்கிறார். நாங்கள் கருணா அம்மானை நேசித்தோம். அவரை எங்கள் தளபதியாக ஏற்றுக்கொண்டே அவரது வழிநடாத்தலை மானசீகமாக ஏற்றுக்கொண்டே அவருக்கு அருகாமையில் இருந்தோம். ஆனால் இன்று நாம் கருணா அம்மானின் கைதிகளாகப்பட்டுள்ளோம். ஏன் எமக்கிந்தத் தண்டனை ? நாங்கள் போராடத்தானே வந்தோம். எங்கள் பெற்றோர்கள் எங்களைத் தாயகம் மீட்கத்தானே அனுப்பினார்கள். சகோதரயுத்தம் செய்வதற்காகவல்ல. நாங்கள் தாயகத்துக்குச் சேவைசெய்யவே வந்தோம். எங்களை இந்தச் சிறையிலிருந்து மீட்டெடுங்கள்.
நாங்களெல்லாம் இந்த மட்டு - அம்பாறையைச் சேர்ந்தவர்கள். எம்மை எங்கள் தலைவரிடம் அனுப்பும்படி வேண்டுகிறோம். எங்களை எங்கள் தலைவரின் காலடிக்குப்போய்ச்சேர வாசலைத்திறந்து விடுங்கள். போராட எங்கள் மக்களின் விடுதலைக்காக புறப்பட்டு வந்த எங்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் கருணா அம்மானின் பிடியிலிருந்து நம்மை விடுவிக்குமாறு உங்களிடம் வேண்டுகிறோம். நாங்கள் போராடவே வந்தோம் எங்கள் தலைவரிடம் எங்களை அனுப்புங்கள்.
ஆயுத முனையில் நாங்கள் கருணா அம்மானால் அச்சுறுத்தப்பட்டே வைத்திருக்கப்பட்டுள்ளோம். எங்களது உயிர்கள் கருணா அம்மானின் சுயநலத்துக்காகப் போவதை நாம் விரும்பவில்லை. எங்கள் தலைவரின் பிள்ளைகளாக தமிழீழதேசத்தை மீட்கும் போராளிகளாகவே சாக விரும்புகிறோம்.
எங்கள் உறவுகளே ! எங்களைக் காப்பாற்றுங்கள். நாங்கள் உங்கள் பிள்ளைகள்.
- கருணாவின் தடுப்புக்காவலிலிருக்கும் போராளிகள் -
கிழக்கு மாகாணத்திலிருந்து புலிகள் இயக்க தளபதிகள் சிலர் ஓமந்தை ஊடாக வன்னி செல்ல முயன்றதாகவும். கருணா தொலைபேசி மூலம் ராணுவத்தளபதியை தொடர்ப்பு கொண்டு அவர்களை ஓமந்தையில் தடுக்குமாறு கேட்டதாகவும் தினக்குரல் சொல்லியிருக்கின்றது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&