03-08-2004, 10:11 AM
<b>பிரச்சினையில் சம்பந்தப்படாமல் கடும் முன்னெச்சரிக்கையுடன் படையினர் கிழக்குப் பிராந்திய இரானுவத் தளபதி கூறுகிறார்</b>
கிழக்கில் தோன்றியுள்ள நிலைமைகளை அடுத்து வடக்கு, கிழக்குப் பகுதிகளில் முப்படையினரும் முழு உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ள அதேநேரம், எந்தப் பிரச்சினைக்குள்ளும் சம்பந்தப்படாமல் தாங்கள் ஒதுங்கியிருக்கவே விரும்புவதாக மட்டக்களப்பு மாவட்ட இரானுவத் தளபதியொருவர், வெளிநாட்டுச் செய்திச் சேவையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
கிழக்கின் நிலைமைகள் தொடர்பாக பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டி ருக்கும் நிலையில், இந்தச் செய்திகளின் அடிப்படையில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில், இரானுவத்தினர் எந்த நிலைமைகளையும் சமாளிக்கும் விதத்தில் முழு உசார் நிலையில் இருப்பதாகவும் அந்தத் தளபதி தெரிவித்தார்.
தாங்கள் அபாயகரமானதொரு சூ ழ்நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும், இந்தப் பிரச்சினைக்குள் படையினரை இழுத்துவிட சிலர் முயலக் கூடும் என்பதால், இவ்வாறான பிரச்சினைகள் எவற்றிலுமே சிக்காது, தாங்கள் ஒதுங்கியிருக்கவே விரும்புவதாகவும், ஆனால் படையினரை முழு உசார் நிலையில் வைத்திருப்பதாகவும் அந்தத், தளபதி தெரிவித்துள்ளார்.
கிழக்கில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து ஜனாதிபதி முப்படைத் தளபதிகளுக்கும் உத்தரவுகளை விடுத்துள்ள அதேநேரம், பாதுகாப்பு அமைச்சின், செயலாளர் சிறில் ஹேரத்தும் முப்படைத் தளபதிகளைச் சந்தித்து நிலைமைகள் பற்றி அறிந்துள்ளார்.
இதேவேளை, கிழக்கில் தோன்றிய நிலைமையை அடுத்து கடந்த வாரம் மட்டக்களப்பிலிருந்து புலிகளின் முக்கிய தளபதிகள் சிலர் வன்னிக்குச் சென்றபோது அவர்களை ஓமந்தைச் சோதனைச் சாவடி யில் வைத்துத் தடுத்து நிறுத்துமாறு, கருணா தொலைபேசி மூலம் இரானுவத் தளபதி லெப்.ஜெனரல் லயனல் பலகல்லவிடம் கூ றியிருந்ததாகவும், ஆனாலும் ஜனாதிபதியுடனும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமும் இரானுவத் தளபதி இதுபற்றிக் கேட்டபோது, ஓமந்தைய10டாக வன்னி செல்லும் புலிகளை எவ்விதக் காரணமும் கொண்டும் தடுக்கக் கூடாது என அவர்கள் கூ றியிருந்ததாகவும் இதன் அடிப்படையில் ஓமந்தைச் சோதனைச் சாவடி யைத் தாண்டிச் செல்ல புலிகளின் அந்தத் தளபதிகளுக்கு படையினர் அனுமதி வழங்கியதாகவும், நேற்று கொழும்பில் வெளியான ஆங்கிலப் பத்திரிகைகள் பல தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>